என் மலர்
நீங்கள் தேடியது "M K Stali"
- மறைந்த தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் நிறைய பரிட்சைகள் வைப்பார்.
- தந்தையை போல மகனும் உழைப்பு உழைப்பு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சென்னை:
அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். கூடவே அவரை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் உதயநிதி ஸ்டாலின் உயர்ந்த பொறுப்புகளுக்கு பொருத்தமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் நிறைய பரிட்சைகள் வைப்பார். அவற்றில், அவர் தேறிய பின்தான் உயர்வு அளிப்பார். அப்படித்தான், கட்சியின் இளைஞர் அணி செயலராக, துணைப் பொதுச் செயலராக, பொருளாளராக, செயல் தலைவராக, தலைவராக உயர்வு பெற்றார்.
நிர்வாகப் பொறுப்பிலும் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக படிப்படியாக உயர்த்தப்பட்டார். தற்போது முதல்வராகி இருக்கிறார். அந்த வகையில், உதயநிதியும் போட்டியின்றி அனைவர் மனதிலும் நிறைந்திருக்கிறார். அவருக்கான உயரங்களும் விரைவில் போட்டியின்றி, அவருக்கு தானாகவே வந்து சேரும்.
அவரது உழைப்பு என்பது சாதாரணமானது அல்ல. தந்தையை போல மகனும் உழைப்பு உழைப்பு என்று வாழ்ந்து கொண் டிருக்கிறார்.
கருணாநிதி ஒருமுறை என்னிடம், பேரனின் புத்திக் கூர்மை மற்றும் அவர் பின்பற்றும் கொள்கை குறித்து வியந்து பாராட்டினார். அப்படி கருணாநிதியால் அன்றைக்கே அடையாளம் காட்டப்பட்டவர் தான் உதயநிதி. உயர்வுக்கு பொருத்தமானவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.