என் மலர்
நீங்கள் தேடியது "Maari 2"
தமிழில் சூர்யா, தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை கண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #SaiPallavi
பிரேமம் படம் மூலம், மலையாளம் மட்டும் அல்லாமல் எல்லா மொழி மக்களையும் ஈர்த்தவர் சாய் பல்லவி. பிரேமம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் பிசியாக இருக்கிறார் சாய் பல்லவி.
தமிழில் சூர்யா, தனுசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இயல்பான அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் சாய் பல்லவியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த சாய் பல்லவி தன் மேல் அன்பு வைத்து தன்னை இவ்வளவு தூரம் வாழ்க்கையில் கொண்டு வந்த தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பில் அவரை பென்டெடுக்கிறார் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா. #Maari2 #Dhanush
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வடசென்னை’. இப்படத்தை தவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இவருடன் சண்டைப்போடும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்ட போது, நடிகர் தனுஷுக்கு கை, மற்றும் கால்களில் அடிப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். இந்த சண்டைக்காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் இருந்தது. தற்போது அந்த பாடலை படமாக்கி வருகிறார்கள். இந்த சிறப்பு பாடலுக்கு நடிகர், இயக்குனர் மற்றும் நடன புயல் பிரபுதேவா நடனம் அமைக்கிறார். இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Blessed to have the biggest dancing legend of India @PDdancing Sir 🙏🏻 choreographing a song for us in #Maari2 with @dhanushkraja Sir & @Sai_Pallavi92 😊 Dream come true moment for me a fan boy to work with my childhood hero! 😎 pic.twitter.com/8oryES1UXN
— Balaji Mohan (@directormbalaji) August 1, 2018
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடித்து வரும் மாரி 2 படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். #Dhanush #Maari2
தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி, வித்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இவருடன் சண்டைப்போடும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகர் தனுஷுக்கு கை, மற்றும் கால்களில் அடிப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நலமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த சண்டைக்காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது. விரைவில் அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டு முழுப்படமாக்கப்படும்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது நடிகர் தனுஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. #Dhaush #Maari2
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாரி 2’. பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இதில் டோவினோ தாமஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு அடிபட்டு விட்டது. உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். #Maari2 #Dhanush
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `மாரி-2' படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமியை தொடர்ந்து மேலும் ஒரு கதாநாயகி இணைந்திருக்கிறார். #Maari2 #Dhanush
தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக வித்யா இணைந்திருக்கிறார்.
நடிகை வித்யா, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பசங்க 2’ படத்தில் நடித்துள்ளார். ‘மாரி 2’ நடிப்பதை வித்யாவே உறுதி செய்திருக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Maari2 #Dhanush
மலையாள படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். #Saipallavi
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்து வருகிறார் சாய் பல்லவி. இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் தியா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை.
தமிழ் நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக களி படத்தில் நடித்தார். தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த அவர் தமிழ்ப்படங்கள் பக்கம் எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று வருடங்களுக்குப் பின் தியா மூலம் வந்தார்.
அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடிக்கும் மாரி 2, சூர்யா நடிக்கும் என்ஜிகே ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘படி படி லெச்சி மனசு’ படத்தில் நடித்துவரும் அவர் மற்றொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் வேணு உடுகுலா இயக்கும் புதிய படம் ‘நீடி நடி ஒக்க கதா’ என்ற படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். திரைக்கதை அவருக்கு பிடித்துப்போக உடனே நடிக்க சம்மதித்துள்ளார். முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த படத்தின் கதாநாயகன் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான சாய் பல்லவி பேசும் போது, படத்தை பார்த்துவிட்டு அப்பா, அம்மாவிடம் என்னை தத்து எடுத்துதான் வளர்த்தீர்களா? என்று கேட்டேன் என்று கூறியிருக்கிறார். #SaiPallavi
சாய் பல்லவி, பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். மணிரத்னம், கவுதம்மேனன், விக்ரம், சிம்பு என்று தேடி வந்த பெரிய படங்களுக்கு எல்லாம் நோ சொல்லிவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஜார்ஜியாவுக்கு சென்றவர், இப்போது டாக்டராகி திரும்பி தமிழுக்கும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். எண்ட்ரி கொடுத்த வேகத்திலேயே சூர்யா, தனுஷ் என்று இரண்டு பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து,
பெரிய வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஜார்ஜியா சென்றது ஏன்?
நான் மிகவும் தெளிவாக இருந்தேன். இந்த சினிமா, பிரபலம், ரசிகர்கள் எல்லாமே என்றைக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். அதை இன்னொருவர் வந்து பறிக்க முடியாது. இன்னொரு நான்கைந்து ஆண்டுகளில் புது புது திறமையானவர்கள் வந்து என் இடத்தை பிடிப்பார்கள்... ஆனால் படிப்பு அப்படி இல்லை. ஒரு நடிகை என்று சொல்வதை விட மருத்துவர் என்று சொல்லும்போது எனக்குள் ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஒருவரை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், ஒரு நோயே வராமல் தடுக்க வேண்டும் என்பது தான் என்னோட ஆசை. எனக்கு படிப்பு தான் எல்லாமே...

உங்கள் தங்கை பூஜாவும் நடிக்க வருகிறாராமே?
“இல்லை. பூஜா சினிமாவுக்கு வரப் போவதில்லை. நடிப்பதற்கான எண்ணம் அவளுக்கு இல்லை. அதற்குள் எப்படி அவள் நடிக்க வருவதாக செய்தி வருகிறது என்று தெரியவில்லை. அவளுக்கு நடிப்பதில் ஆர்வம் இருந்தது என்றால் கண்டிப்பாக நானும், என்னோட குடும்பமும் ஆதரவு தருவோம்”.
சூர்யாவின் தீவிர ரசிகை நான். முதல் முறை அவரை சந்தித்தபோது நான் பேசவே இல்லை. அப்படியே பார்த்து சிரித்துக்கொண்டே நின்றேன். அவர் புரிந்துகொண்டு சிரித்தார். என் பள்ளி நாட்களில் சூர்யா மீது மிகவும் பிரியம் கொண்டு சுற்றி இருக்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் சாதாரணமாகவும் இயல்பாகவும் இருப்பார். ஆனால் கேமரா முன்பு வேறு ஒரு நபராக மாறிவிடுவார். அந்த அர்ப்பணிப்பை கற்றுகொள்கிறேன்.

பள்ளி காலத்தில் அதிகம் பார்த்த படம்?
கன்னத்தில் முத்தமிட்டால். அந்த படத்தை பார்த்துவிட்டு அப்பா, அம்மாவிடம் என்னையும் தத்து எடுத்துதான் வளர்த்தீர்களா? என்று கேட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு அந்த படம் பாதித்தது.
அது வளர வளர மாறிக்கொண்டே இருக்கிறது. நடிக்க வந்த பிறகு எல்லோருக்கும் ரசிகையாக மாறிவிட்டேன். #SaiPallavi
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக கவர்ந்த சாய் பல்லவி, தற்போது நடித்து வரும் புதிய படத்தில் வங்காளப் பெண் வேடத்தில் நடித்து வருகிறார். #SaiPallavi
பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மேக்கப் இல்லாமல் இயல்பாக நடித்ததால் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ஆனார். அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் இவர் நடித்த ‘தியா’ படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு பக்கமே கவனம் செலுத்துகிறார். தெலுங்கில் சாய் பல்லவி இப்போது சர்வானந்த் ஜோடியாக பாடி பாடி லீஷ் மனசு என்ற ரொமாண்டிக் படத்தில் நடித்து வருகிறார். நிஜ வாழ்க்கையில் டாக்டரான சாய் பல்லவிக்கு படத்திலும் மருத்துவ மாணவி வேடமாம்.

சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் வெளியானது. இந்த லுக்கில் வங்காள பெண் வேடத்தில் இருக்கிறார் சாய்பல்லவி. இந்த லுக்கில் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் சாய்பல்லவியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
பிரேமம் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி, தன்னுடைய பிறந்த நாளை மாரி 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். #SaiPallavi #Maari2
‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.
இவர் நடிப்பில் தற்போது தமிழில் ‘தியா’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசத்தை பற்றிய கதை உருவாக்கி இருந்தார்கள். இதில் சாய் பல்லவி ஐந்து வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

தற்போது தனுஷுடன் இணைந்து ‘மாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படக்குழுவினருடன் நேற்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் சாய் பல்லவி. மேலும் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி மகிழ்வித்தனர்.