search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "made in india"

    பிரதமரின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ அறைகூவலின்படி சென்னை ஆவடியில் உள்ள ராணுவ டாங்கி தொழிற்சாலையில் தயாரிப்பட்ட என்ஜின்களை பாதுகாப்பு மந்திரி நாட்டுக்கு அர்ப்பணித்தார். #Sitharaman #MadeinIndia #enginestoArmy
    சென்னை:

    இந்தியாவின் ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு தயாரிப்புகளாகவோ. வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய தயாரிப்புகளாகவோதான் முன்னர் இருந்து வந்தன.

    பின்னாளில், நமது சொந்த தயாரிப்புகள் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் இடம்பெற தொடங்கின. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர்  ‘இந்தியாவில் தயாரிப்போம்’ அறைகூவலின்படி உள்நாட்டு தயாரிப்புகள் வேகம்பிடிக்க ஆரம்பித்தது.

    இந்நிலையில், ராணுவ ‘டாங்கிகள்’ எனப்படும் பீரங்கி வாகனங்களுக்கான இரு அதிநவீன ரக என்ஜின்களை சென்னை ஆவடியில் உள்ள ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.

    அனைத்து வகை எரிபொருளிலும் இயங்கும் T-90 பீஷ்மாடாங்கி வாகனங்களுக்கான 1000 குதிரைசக்தி திறன் கொண்ட V92S2 ரக என்ஜின் மற்றும் T-72 அஜேயா ரக டாங்கி வாகனங்களுக்கான V-46-6 ரக என்ஜின் ஆகியவை இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.

    இதற்கு முன்னர் இந்த என்ஜின்களின் தயாரிப்பில் 27 சதவீதம் அளவுக்கு வெளிநாட்டு தொழில்நுட்பம் கலந்திருந்தது. ஆனால், தற்போது தயாரிக்கப்பட்ட இந்த இரு என்ஜின்களுமே 100 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவானவை. 

    இந்நிலையில், சென்னை ஆவடியில் உள்ள டாங்கி தொழிற்சாலை வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இரு என்ஜின்களின் தயாரிப்பு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவற்றை  ராணுவ துணை தளபதி தேவராஜ் அன்பு பெற்றுகொண்டார். இந்த தயாரிப்புகளின் மூலம் இங்குள்ளவர்கள் நம்மை பெருமைப்படுத்தியுள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    ரஷியாவின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு திட்டத்தின்படி முன்னர் இந்த என்ஜின்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டபோதிலும், சில முக்கிய உதிரிபாகங்களுக்கு முன்னர் ரஷியாவின் கையை நாம் எதிர்பார்க்க வேண்டிய நிலைமை இருந்தது.

    தற்போது அந்த உதிரி பாகங்களைகூட நாம் இங்கேயே தயாரிப்பதால் வரும் பத்தாண்டுகளில் சுமார் 800 கோடி ரூபாய்வரை இந்தியாவுக்கு மிச்சமாகும் என இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை தயாரிப்பு நிறுவன செயலாளர் அஜய் குமார் தெரிவித்தார். #Sitharaman #MadeinIndia #enginestoArmy
    ×