என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » madhya pradesg
நீங்கள் தேடியது "madhya pradesg"
5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றியாகும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Congressworkers #RahulGandhi #2018Electionresults
புதுடெல்லி:
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்றிரவு சுமார் 8 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 88 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், கோண்ட்வானா கந்த்தந்த்ரா கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர் 21 தொகுதியிலும், காங்கிரஸ் 23 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 1 தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
61 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 57 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்றிரவு சுமார் 8 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றி. இந்த வெற்றி காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
’சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் ஒன்றானவை, பா.ஜ.க.வின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்டவை.
காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களுக்கான புதிய முதல் மந்திரிகளை தேர்வு செய்வது பெரிய காரியமல்ல. அது சுமுகமாக முடிந்துவிடும். எங்களை வெற்றிபெற வைத்த மாநில மக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்து, அவர்கள் பெருமைப்படும் வகையில் அவற்றை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும்.
பா.ஜ.க.வுக்கு என்றொரு சித்தாந்தம் உள்ளது. அதை எதிர்த்து போராடி நாங்கள் வெற்றி பெறுவோம். இன்று அவர்களை நாம் தோற்கடித்து இருக்கிறோம். 2019-பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம். ஆனால், யாரையும் நாங்கள் அழிக்க விரும்பவில்லை’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults

இந்த நாட்டின் பிரதமரை மக்கள் தேர்ந்தெடுத்தபோது, ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் விவசாயிகள் பிரச்சனை ஆகிய மூன்று விவகாரங்களை முன்வைத்து தேர்வு செய்தனர். பிரதமர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என்று மக்கள் மனதில் இருந்தது. ஆனால், இப்போது பிரதமரே ஊழல்வாதி என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.
பா.ஜ.க.வை பற்றி நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை இந்த தீர்ப்பின் மூலம் பிரதமருக்கு மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு என்றொரு சித்தாந்தம் உள்ளது. அதை எதிர்த்து போராடி நாங்கள் வெற்றி பெறுவோம். இன்று அவர்களை நாம் தோற்கடித்து இருக்கிறோம். 2019-பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம். ஆனால், யாரையும் நாங்கள் அழிக்க விரும்பவில்லை’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் முதல்வர்கள் யார்? என்பது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
புதுடெல்லி:
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 198 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும்.
இதேபோல், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை (புதன்கிழமை) அந்தந்த மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது. #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
×

X