என் மலர்
நீங்கள் தேடியது "Magha Akash"
பூமராங் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்துஜா, என்னுடைய வேலையை எளிதாக்கினார் என்று இயக்குனர் ஆர்.கண்ணன் கூறியிருக்கிறார். #Indhuja
ஆர்.கண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘பூமராங்’. இதில் அதர்வா முரளி நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார்கள்.
மேயாதமான் படம் மூலம் புகழ் பெற்ற இந்துஜாவை பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, ‘இந்துஜாவின் திறமையை பற்றி கூற 'திறமை' என்ற வார்த்தை மிக சாதாரண வார்த்தையாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார். அவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்கிறார் இயக்குனர் கண்ணன்.
அவரது கதாபாத்திரம் குறித்து மேலும் கூறும்போது, "அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் 'பூமராங்' ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, மிகச்சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞரைக் கோருகிறது. இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உடனடி தேர்வாக அமைந்தார்’ என்றார்.

ஆக்ஷன் - த்ரில்லர் படமான பூமராங் போஸ்ட் புரொடக்சன் பணிகளின் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இசை, டிரெய்லர் மற்றும் உலக அளவில் வெளியிடும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.