search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahavir Karna"

    ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக இயக்குநர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். #Vikram #MahavirKarna
    ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் தற்போது மகாவீர் கர்ணா படத்தில் இணைந்துள்ளார்.

    விக்ரமை கதாநாயகனாக கொண்டு தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் மகாவீர் கர்ணா படத்தைமலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இயக்குகிறார்.



    மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத் ராமோஜி ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து இயக்குநர் ஆர்.எஸ்.விமல், “இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது.

    மகாவீர் கர்ணா தொடங்கியது. சிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்‌‌ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நன்றி கடவுளே” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஐதராபாத்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இப்படம் 32-க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது. #Vikram #MahavirKarna

    ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கும் விக்ரம், அதற்காக உடல் எடையை கூட்டியதுடன், குதிரையேற்ற பயிற்சி எடுத்து வருகிறார். #Vikram #MahavirKarna
    மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபர் கோயிலில் உள்ள மணி ஒன்றைப் படக்குழுவினர் பெற்றுள்ளனர். படத்துக்காக உருவாக்கப்பட உள்ள 30 அடி உயரமுள்ள கர்ணனின் ரதத்தில் இந்தக் கோயில் மணி இடம்பெற உள்ளது.



    ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கும் இந்தப் படம் 32 மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஏற்றி ஆஜானு பாகுவான தோற்றத்துக்கு மாறி இருக்கும் விக்ரம், குதிரையேற்ற பயிற்சிகளும் எடுத்து வருகிறார். #Vikram #MahavirKarna

    ×