என் மலர்
நீங்கள் தேடியது "Mahendran"
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதி சினிமாவில் பெரிய நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். #Seethakaathi #VijaySethupathi
96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் `சீதக்காதி'. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது. டிரைலரில் இருந்து, படத்தில் விஜய் சேதுபதி வயதான சூப்பர் ஸ்டாராக (ஐயா) வலம் வருகிறார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடிப்பில் இருந்து விலகும் ஐயா, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று பட அதிபர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஐயா, குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக வித்தியாசமான தோற்றத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீதக்காதி, விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திலும் உருக வைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi
சீதக்காதி படத்தின் டிரைலர்:
பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #Seethakaathi #VijaySethupathi
96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.
இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி இருக்கிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Seethakaathi third poster 😍#SeethakaathiFrom20thDec
— VijaySethupathi (@VijaySethuOffl) November 9, 2018
VijaySethupathi25@VijaySethuOffl@nambessan_ramya@SGayathrie@govind_vasantha@paro_nair@PassionStudios_@tridentartsoffl@DoneChannel1@thinkmusicindia@gopiprasannaa@CtcMediaboypic.twitter.com/CNKo4OPstK
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi
பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Seethakaathi #VijaySethupathi
விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.
இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் வாங்கியிருக்கிறார். முன்னதாக தணிக்கை குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilnadu Theatrical rights of #Seethakaathi has been Bagged by Market Leader @tridentartsoffl#VijaySethupathi25@VijaySethuOffl@BTharaneetharan@nambessan_ramya@SGayathrie@govind_vasantha@paro_nair@PassionStudios_@DoneChannel1@thinkmusicindia@gopiprasannaapic.twitter.com/5EkjoDe76o
— Passion Studios (@PassionStudios_) October 22, 2018
தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நவம்பர் இரண்டாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Seethakathi #VijaySethupathi
விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.
இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை தீபாவளிக்கு பிறகு நவம்பர் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#SeethakaathiCensoredU &
— VijaySethupathi (@VijaySethuOffl) October 17, 2018
Second Look from today 6PM 😍😍@BTharaneetharan@govind_vasantha@nambessan_ramya@SGayathrie@paro_nair@DoneChannel1@PassionStudios_@thinkmusicindia@CtcMediaboypic.twitter.com/0MuodKYCWw
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தி ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்தவரும், பிரபல இயக்குநருமான மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் பேட்ட. ரஜினியுடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி - திரிஷா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கியதாகவும், சசிகுமார் ரஜினியின் நண்பராக நடிப்பதாகவும் முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்த பிரபல இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Petta #Rajinikanth #Mahendran
மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார். #NammaOorukuEnnaDhanAachu
‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.
தற்போது இவர் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘ரங்கராட்டினம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் மகேந்திரன் ஜோடியாக ஷில்பா நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இப்படத்தை அடுத்து ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார்.

இந்த படத்தை நல்.செந்தில் குமார் இயக்குகிறார். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகும் ‘சீதக்காதி’ படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். #Seethakathi #VijaySethupathi
விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார்.
கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே இயக்குநர் மகேந்திரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் ‘சீதக்காதி’ படத்தில் இருந்து `மேக்கிங் ஆஃப் ஐயா' என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Seethakathi #VijaySethupathi
வீரசெல்வா இயக்கத்தில் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாடோடி கனவு’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை கலைப்புலி தாணு வெளியிட்டிருக்கிறார். #NadodiKanavu
குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து, தற்போது இளம் நடிகராக வலம் வரும் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நாடோடி கனவு’. இதில் மகேந்திரனுக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் கிரேன் மனோகர், விஜய் கணேஷ் மற்றும் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஆர்.ஆர்.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளார். வீரசெல்வா இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இன்று வெளியிட்டார். இவருடன் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். வித்தியாசமான திரைக்கதைக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரங்கராட்டினம்’ படத்தின் போஸ்டரை மூன்று பிரபலங்கள் வெளியிட இருக்கிறார்கள். #RangaRaatinamFirstLook
மகேந்திரன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் இவருக்கு ஜோடியாக ஷில்பா நடித்துள்ளார். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை ‘திட்டக்குடி’ படத்தை இயக்கிய சுந்தரன் எழுதி இயக்கியிருக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வ நம்பி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 10 தேதி வெளியிட இருக்கிறார்கள். இந்த போஸ்டரை மூன்று முக்கிய பிரபலங்கள் வெளியிட இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் இவரா இருக்கோமோ, அவரா இருக்கோமோ என்று பேசி வருகிறார்கள்.