என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "makeup"

    • 40 வயதை கடந்தது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையான விசயம் தான்.
    • முகம் நன்றாக இருக்கனும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இளமையை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கிறார்கள் இந்த உலகில். 40 வயதை கடந்ததும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பது இயற்கையான விசயம் தான். ஆனால் இப்போது 30 வயது, 20 வயதிலேயும் பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சிலர் அறுபது வயதில் கூட முகத்தை இளமையாக சின்ன குழந்தை மாதிரி வைத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

    முகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதனால் முகத்தை நல்லா வைத்திருக்க நினைப்பவர்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும்.

    அதேபோல் நம் முகத்தில் ஒரு இருக்கம், பரபரப்பு, டென்ஷன் எது இருந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் தசைகள் தளர்வுறும்போதும் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு அடிக்கடி சிரித்துக்கொண்டு இருந்தாலே முகத்திற்கு நல்ல பயிற்சி. ஆனால் நாம் சிரிப்பை மறந்து திரிகிறோம்.

    அடுத்ததாக நாம் முகத்திற்கு போடும் மேக்கப். இந்த மேக்கப்பில் உள்ள கெமிக்கல்ஸ். இதனால் நம் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டும். மேக்கப் ரிமூவரை பயன்படுத்தும் போது அதில் உள்ள கெமிக்கல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    அந்த காலத்தில் மேக்கப்பை அழிப்பதற்கு தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் ஆயில் தான் தேய்ப்பார்கள். அதற்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் கொடுத்து முகத்தில் உள்ள தசைகளை இறுகச்செய்து இன்னும் முகத்திற்கு பொலிவை கொடுக்கிறது. அதன்பிறகு காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பழங்களான பப்பாளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றை பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். மற்றும் பழவகைகளையும் முகத்திற்கு ஃபேஷியலாக பயன்படுத்தலாம். அல்லது கடலைமாவு, பால் சேர்த்து கலந்து அந்த பேஸ்டையும் வாரத்திற்கு இரண்டுமுறை முகத்திற்கு தடவி வர முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாகி சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    அதுமட்டுமல்லாமல் குளிர்ந்த தண்ணீரில் அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இல்லையென்றால் ஐஸ்கியூப்பை கூட முகத்தில் தேய்த்து கழுவலாம். புதினா இலைகளை அரைத்து ஒரு ஐஸ்கியூப் பாக்சில் ஊற்றி எடுத்து தேவைப்படும் போது அதனை பயன்படுத்தலாம். நீங்க எப்போதெல்லாம் பிரஷ்சாக இருக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த கியூப்களை எடுத்து முகம் முழுக்க தடவினால் சுருக்கங்களில் இருந்து விடுபடலாம்.

    இதோட இல்லாம பாசிபயிறு, கோதுமை, கடலைமாவு, ஓட்ஸ் இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வாரத்திற்கு ஒருநாள் இந்த பொருளுடன் பன்னீர் அல்லது பாலில் குளைத்து பேக் போட்டு வந்தாலே முகம் இறுக்கமாக மாறும். மனம் தான் இறுக்கமாக இருக்க கூடாது. முகம் இறுக்கமாக இருந்தால் தான் வயதான தோற்றம் அவ்வளவு சீக்கிரமாக நமக்கு வராது.

    • அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம்.
    • கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.

    என்ன தோழிகளே, பண்டிகை தினங்களும், விடுமுறை நாட்களும் வரிசையாக வருகிறது... கோவில், உறவினர்களின் இல்லங்கள் சென்று சந்தோஷமாய் பொழுதை கழிக்க குதூகலமாய் கிளம்பிவிட்டீர்களா? எளிய மேக்கப்பின் முதல் நிலைகளை இன்றே ஆரம்பித்துவிட்டீர்களா? முதல் வேலையாய் புருவ அமைப்பை சீராக்க நினைக்கிறீர்களா? அதற்கு முன் உங்களுக்கு சில டிப்ஸ்....

    முகத்தின் ஒட்டுமொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.

    * குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.

    * நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.

    * நீள்வட்ட (ஓவல்) முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.

    * அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.

    * புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.

    * சதுர முகம் உள்ளவர்கள் புருவங்களை பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக்கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.

    * புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.

    * கறுப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

    * வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக்கொள்ளவும்.

    * நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.

    * நீள மூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.

    * வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.

    * உடைக்கு பொருத்தமான நிறத்தில் ஐ ஷெடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது பிரஷ்சால் தடவுங்கள்.

    • பவுண்டேஷன் மிகவும் அவசியமானவை.
    • நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம்.

    நீங்கள் மேக்கப்பை நேசிப்பவரா? மிகவும் நுட்பமாக மேக்கப் செய்து கொண்டு, அலங்காரமாக காட்சி தருவதில் விருப்பம் கொண்டவரா? தினமும் பணிக்கு செல்வதற்கு முன், முகத்தை முழு அலங்காரம் செய்து கொள்ள போதிய நேரமும் இருக்கிறதா?

    உங்கள் காலை நேரத்தை உடனடியாக அழகாக்கி, உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும் நான்கு அழகு சாதன பொருட்கள். இவை பயணத்திற்கும் ஏற்றவை என்பதோடு மற்ற வேலைகளையும் கவனிக்கலாம். இவற்றை உங்கள் கைப்பையில் வைத்துக்கொண்டால் எப்போது வேண்டும் என்றாலும் எளிமையாக தயாராகலாம். பிசியாக இருக்கும் பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க கைவசம் வைத்திருக்க வேண்டிய அழகுசாதன பொருட்களை பற்றி பார்க்கலாம்...

     பவுண்டேஷன் கிரீம்

    பவுண்டேஷன் மிகவும் அவசியமானவை. அதிலும் குறிப்பாக உங்களுக்கு நேர்த்தி குறைவான சருமம் இருந்தால், அவை மிகவும் அவசியம். ஆனால் இங்கு உண்மையை ஒப்புக்கொள்வோம். காலை நேரத்தில் முழுமையான பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கான நேரம் உங்களுக்கு இல்லை. அதாவது நீங்கள் தூக்கத்தை நேசிப்பவர் என்றால், உங்கள் குறைகளை மறந்து, பூசிக்கொள்ள அதிக நேரம் தேவைப்படாத பொருளை தான் நீங்கள் நாட வேண்டும். உங்கள் சருமத்தின் மீது லேசாக அமரக்கூடிய பிபி கிரீம் அல்லது சிசி கீரிமை போடலாம். அதற்கு குஷன் பவுண்டேஷனையும் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பும் பவுண்டேஷனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

    காம்பேக்ட் பவுடர்

    வெளியே செல்லும் எல்லா பெண்களின் கைப்பையிலும் இருக்க வேண்டிய பொருள் காம்பேக்ட் பவுடர். வியர்வை, ஈரப்பதம் மற்றும் முகத்தை தொடுவது போன்றவை பவுண்டேஷனை பாதிக்கிறது. எனவே நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம். ஆக, உங்கள் கைப்பையில் காம்பேக்ட் பவுடர் வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும். காம்பேக்ட் பவுடர் உங்கள் சருமத்திற்கு மென்மையான பளபளப்பை தருவதோடு, பவுண்டேஷன் நீடித்து இருக்கவும் உதவுகிறது. வெப்பம் மிகுந்த நாட்களில் வெளியே செல்வதால் உண்டாகும் பாதிப்பாக துளைகளையும் அடைக்கிறது.

    மஸ்காரா

    பெண்களுக்கு மிகவும் தேவையான பொருட்களில் மஸ்காராவும் ஒன்று. இவை உங்கள் கண்களுக்கு உடனடியாக தீர்க்கமான தன்மையை அளித்து, உங்கள் கண் இமைகள் புத்துணர்ச்சியுடன் இருக்க வழி செய்கிறது. எப்போது உங்கள் கண்களை மெருகேற்ற மஸ்காரா தேவைப்படும் என்று தெரியாது என்பதால், அதை எப்போதும் கைப்பையில் வைத்திருப்பது நல்லது. மேலும், சுருளான மைகள் தேவை எனில், லாக்மே கர்லிங் மஸ்காராவை முயற்சிக்கவும். அதே போல இமைகளை நீளமாக தோன்ற வைக்க விரும்பினால் தி லாக்மே பிளட்டர் சீக்ரெட்ஸ் டிராமட்டிக் ஐஸ் மஸ்காரா ஏற்றதாக இருக்கும்.

    லிப்ஸ்டிக்

    வாய்ப்புள்ள போதெல்லாம் உங்கள் கைப்பையில், ஒரு சில ஷேட் லிப்ஸ்டிக்குகளை வைத்திருக்கவும். 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை லிப்ஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். மனநிலை அல்லது சூழலுக்கு ஏற்ப பொருத்தமான ஷேடை பயன்படுத்தலாம். எப்போது எந்த வண்ண லிப்ஸ்டிக் தேவை என சொல்ல முடியாது. கைவசம் சில வண்ணங்களை வைத்திருக்க வேண்டும்.

    • கண்களில் மஸ்காரா, காஜல் நீக்கத்தை பாதிப்பில்லாமல் நீக்க தேங்காய் எண்ணெய் உதவும்.
    • கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்கலாம்.

    மேக் அப் பயன்படுத்துவதும் அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் அதை அன்றாடம் அகற்றவும் செய்ய வேண்டும். இல்லையெனில் சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். நம்மில் பலர் வெளியே கிளம்பும்போது சிரத்தையெடுத்து அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் வீடு திரும்பியதும் முகத்தில் கண்களில் இருக்கும் மேக் அப் பொருள்களை கலைக்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இதனால் சருமத்தினுள்ளே ரசாயனங்கள் ஊடுருவ வாய்ப்புண்டு. சருமத்துளைகளிலும் பருக்கள் மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும்.

    மேக் அப் கலைக்க வீட்டிலிருக்கும் பொருள்களை பயன்படுத்தினால் சருமத்துக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.

    * சுத்தமான நீரில் முகத்தை கழுவி மேக் அப் கலைப்பதை காட்டிலும் சில துளி தேங்காய் எண்ணெய் முகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மேக் அப்பை சுத்தமாக நீக்கிவிடும்.

     * ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து உள்ளங்கையில் தடவி நன்றாக தேய்த்து முகம் முழுக்க லேசாக மசாஜ் செய்தால் மேக் அப் பாதிப்பில்லாமல் நீங்கும். கண்களில் மஸ்காரா, காஜல் நீக்கத்தை பாதிப்பில்லாமல் நீக்க தேங்காய் எண்ணெய் உதவும்.

    * முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் இருக்கும் அழுக்கை அகற்றும் சுத்தமான இயற்கை பொருள் பால். புரதங்களும், கொழுப்பும் சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் வைத்திருக்கும். பாலை கொண்டு முகத்தை துடைத்தால் முகத்தில் வறட்சி பிரச்சனையே இருக்காது.

    * காய்ச்சாத பாலை சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தில் நன்றாக படரும் படி ஒற்றி ஒற்றி எடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் காட்டனை கொண்டு துடைத்து எடுங்கள். மேக் அப் சற்று கூடுதலாக பயன்படுத்தி இருப்பவர்கள் ஆலிவ் எண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து பிறகு பாலை கொண்டு சருமத்தை சுத்தம் செய்யலாம். இவை சரும துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி முகத்தை பளிச்சென்று வைக்க உதவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். இதனால் சருமம் மென்மையாக மாறும்.

    * அழகு சாதன பொருள்கள் எப்போதாவது சருமத்தில் லேசான எரிச்சலை உண்டாக்குவது போல் இருப்பவர்கள் சிறப்பான முறையில் அதை அகற்ற வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரிக்காயை தோல் சீவி நன்றாக மைய அரைத்து விழுதாக்கி வைத்துகொள்ளவும். தினசரி மேக் அப் பயன்படுத்துபவர்கள் வாரம் ஒரு முறை இதை மசித்து வைத்துகொள்ளலாம்.

    * மேக் அப் கலைக்கும்போது இந்த விழுதை முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். மேக் அப் பயன்பாடும் நீங்கும். வெள்ளரிக்காய் விழுதை பயன்படுத்துவது சிரமமாக இருந்தால் வெள்ளரிக்காயை அரைத்து கெட்டியாக சாறு பிழிந்து அதை காட்டனில் நனைத்தும் பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் கூடுதலாக குளிர்ச்சித்தன்மையை உணர்வீர்கள்.

    * கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்கலாம். கண்களை சுற்றியிருக்கும் மேக் அப்- ஐயும் இதை கொண்டு துடைத்து எடுக்கலாம். கற்றாழை பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்கள் வராமல் தடுக்கமுடியும். இதை கொண்டு மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் முகம் மென்மையாக மாறும்.

    * பார்ட்டி, திருமணம் போன்ற விசேஷங்களின்போது சற்று அதிகப்படியான மேக் அப் பயன்படுத்துவது உண்டு. இந்த நேரத்தில் முகத்துக்கு ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் இருக்கும் மேக் அப் முழுவதுமே வெளியேறும். அதோடு சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி அகற்றப்படும். இதன் மூலம் மறுநாள் உங்கள் முகத்தில் கூடுதல் பொலிவை உணரலாம்.

    * மேக் அப் பயன்பாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று அதை கலைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் சருமம் எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

    • அடர்த்தியான சிவப்பு நிற ஷேடை உதட்டில் பயன்படுத்தவும்.
    • பளபளப்பு லுக்குக்கு கிளியர் கிளாஸ் இட வேண்டும்.

    நீங்கள் இப்போது தான் மேக்கப் போட கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த டிப்ஸ்கள் மிக உதவியாக இருக்கும். உங்களை அழகுபடுத்திக் கொள்ள...

    நீங்கள் விரும்பும் அழகிய உதடுகள் சில நொடிகளில் இந்த மேக்அப் ட்ரிக் மூலம் பெற்றுவிடலாம்.

    * சுத்தமான மாய்ஸ்சுரைஸ் செய்யப்பட்ட முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஃபவுண்டேஷனை பூசவும்.

    * சுத்தமான பிரஷ் மூலம் பிளெண்ட் செய்து விடவும்.

    * முகத்தில் இருக்கும் மாசுமருக்களை மற்றும் கருவளையத்தை மறைக்க முகத்தில் கன்சீலரை பூசவும்.

    * ஐஷாடோவை கண்ணிமைகளில் பூசவும்.

    * உங்கள் உதட்டின் இயற்கையான நிறத்தை விட ஒரு ஷேட் அடர்த்தியான நிறத்தில் லிப் பென்சிலை பயன்படுத்தி உதட்டில் கோடை வரையவும். உங்கள் உதட்டின் வெளிப்புற லைனில் லிப் லைனரை பயன்படுத்தவும்.

    * அடர்த்தியான சிவப்பு நிற ஷேடை உதட்டில் பயன்படுத்தவும்.

    * சிறிது ஹை லைட்டரை உங்கள் உதட்டின் நடுவே பயன்படுத்தவும்.


    உதட்டிற்கு மேலும் அழகேற்ற...

    * உதட்டில் கொஞ்சம் ஃபவுண் டேஷன் இட்டு, சருமத்துடன் கலக்கச் செய்யுங்கள்.

    * உதட்டைச் சுற்றி பவழ லிப் லைனரால் கோடு வரையுங்கள்.

    * அதே லைனர் கொண்டு உதட்டின் உள்புறமும் நிரப்புங்கள்.

    * உதட்டின் உள்ளே பவழ லிப்ஸ்டிக்கை இடுங்கள்.

    * திஷ்யு பேப்பர் கொண்டு துடைத்து, மீண்டும் இடுங்கள். இதன்மூலம் உதட்டுச்சாயம் நீண்ட நேரத்துக்கு இருக்கும்.

    மேட் லுக்குக்கு 5வது ஸ்டெப் உடன் நிறுத்தவும். பளபளப்பு லுக்குக்கு கிளியர் கிளாஸ் இட வேண்டும்.

    • முகத்தில் களைப்பு தெரியாமல் இருக்க, மேக்கப் பயன்படுகிறது.
    • இந்த வகை மேக்கப்கள் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏற்றவை.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழைய மொழி. அகத்தில் சோர்வு இருந்தாலும் முகத்தில் தெரியக்கூடாது என்பது புது மொழி.

    இந்த புதுமொழிக்கு ஏற்ப, முகத்தை பொலிவாக்க பல்வேறு மேக் அப் கலைகள் வந்து உள்ளன. அதில், கான்டூரிங் மேக்கப் முக்கியமானது.

    பொதுவாக, திருமணம் நிச்சயதார்த்தம், வரவேற்பின் போது மணப்பெண்ணால் சரியாக தூங்க முடியாது சோர்வாக – களைப்பாக இருப்பார். இதை அவர் முகமே காட்டிக் கொடுத்துவிடும்.

    அந்த சூழலில் முகத்தில் களைப்பு தெரியாமல் இருக்க, மேக்கப் பயன்படுகிறது.

    மேக்கப்களில் முகத்தில் தண்ணீர் பட்டாலோ அல்லது வியர்வை வழிந்தாலோ கலைந்து விடும். இந்த நிலையை மாற்ற, புதிய முறைகள் அறிமுகமாகிவிட்டன.

    வாட்டர் ஃப்ரூப் மேக்கப், ஏர் பிரஷ் மேக்கப். எச்.டி மேக்கப், கான்டூரிங் மேக்கப் வகைகள் என பல உண்டு. இவற்றில், முதலாவது மேக்கப் வகையான வாட்டர் ஃப்ரூப் மேக்கப் முகத்தில் தண்ணீர் பட்டாலும் மேக்கப் கலையாமல் இருக்கும்.

    'ஏர் பிரஷ் மேக்கப்' என்பது தனி வகை. இது முகத்தில் உள்ள மருக்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், சருமத் திட்டுகள் ஆகியவற்றை மறைத்து விடும். முகம் முழுக்க ஒரே கலரில் அழகாக தோன்றும்.

    இன்னொன்று எச்.டி மேக்கப். இந்த வகை மேக்கப்கள் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏற்றவை. இது முகத்தை வண்ணமயமாக காட்டும்.

    அடுத்து கான்டூரிங் மேக்கப். இதை கரெக்ட்டிங் மேக்கப் என்றும் சொல்வது உண்டு. சப்பையான நாசியை எடுப்பாகக் காட்டவும், சற்று பூசினாற் போல இருக்கும் கண்ணங்களை ஒல்லியாக காட்டவும் உதவும்.

    • மேக்கப்பை விரும்பாத பெண்கள் இருக்கமாட்டார்கள்.
    • வறண்ட சருமத்தில் மேக்கப் செய்வது தவறான பழக்கமாகும்.

    மேக்கப்பை விரும்பாத பெண்கள் இருக்கமாட்டார்கள். சருமத்தை பொலிவாக்குவதற்காக விதவிதமான அழகு சாதனப்பொருட்களை கையாளுவார்கள். அவற்றை முறையாக உபயோகிக்க வேண்டும். தவறாக பயன்படுத்தி மேக்கப் செய்தாலோ, சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்களை தொடர்ந்தாலோ வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்தலாம்.

    சருமம் சோர்வாகவும், மந்தமாகவும் மாறலாம். சருமத்தை விரைவாக வயதானதாக மாற்றும் ஒப்பனை தவறுகள் பற்றியும், அவற்றை தவிர்ப்பது எப்படி என்பது பற்றியும் பார்ப்போம்.


    சன்ஸ்கிரீனை தவிர்க்காதீர்கள்

    முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்ப்பதற்கு சூரிய ஒளியே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இளமை பருவத்தை கடப்பதற்கு முன்பே சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது முக்கியமல்ல. அது எஸ்.பி.எப் 30 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் சன்ஸ்கிரீனை பயன்படுத்தினாலும் கூட அது சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்காது. அத்துடன் எஸ்.பி.எப் 30-க்கு அதிகமான சன்ஸ்கிரீனை மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தினமும் பயன்படுத்தும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

    வறண்ட சருமம்

    ஈரப்பதமில்லாத, வறண்ட சருமத்தில் மேக்கப் செய்வது தவறான பழக்கமாகும். அது வயதை அதிகரிக்கச் செய்துவிடும். அந்த ஒப்பனை நீரேற்றம் இல்லாத பகுதிகளில் படர்வதால் கோடுகள், சுருக்கங்கள் அதிகமாக தெரியும்.

    அதனை தவிர்க்க மேக்கப் செய்வதற்கு முன்பு சருமத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும், அதில் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும். அதற்கேற்ற அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தினால், சருமத்தில் மென்மைத்தன்மையை உண்டாக்கும். மேக்கப் உலர்ந்த பகுதிகளில் ஒட்டிக்கொள்வது தவிர்க்கப்படும்.


    பவுண்டேஷன் பயன்பாடு

    சருமத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு பலரும் பவுண்டேஷன் பயன்படுத்துவார்கள். அதனை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அடர் பவுண்டேஷன்களை பயன்படுத்துவது சிலருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    காலப்போக்கில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றலாம். தடிமனான அடுக்கு கொண்ட பவுண்டேஷன்கள் சருமத்துளைகளை அடைத்து, உலர்வடைய செய்துவிடும். சரும எரிச்சலுக்கும் வழிவகுக்கும். அதனால் நீரேற்றத்தன்மை கொண்ட மென்மைத்தன்மையுள்ள பவுண்டேஷனை தேர்வு செய்ய வேண்டும். அவை சருமத்திற்கு அழகுடன் பாதுகாப்பையும் அளிக்கும்.


    கண் பகுதியை புறக்கணித்தல்

    கண்களை சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. அதனை முறையாக பராமரிக்காவிட்டால் விரைவில் முதுமை தோற்றம் எட்டிப்பார்க்க காரணமாகிவிடும். ஒப்பனை செய்யும்போது பலரும் கண் பகுதியை கவனிப்பதில்லை.

    கனமான கன்சீலர்கள் மற்றும் கண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தும்போது கண் பகுதியில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றக்கூடும். கண்களின் அடிப்பகுதியில் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண் கிரீம்கள் மற்றும் கன்சீலர்களைப் பயன்படுத்துவது நல்லது.


    ஒப்பனையை அப்புறப்படுத்துதல்

    எவ்வளவு சோர்வாக வீடு திரும்பினாலும் தூங்குவதற்கு முன்பு மேக்கப்பை அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் மேக்கப் சருமத் துளைகளை அடைத்து, சருமத்தில் காற்றும், ஈரப்பதமும் படர்வதை தடுத்துவிடும். விரைவாக வயதான தோற்றத்திற்கும் வழிவகுத்துவிடும்.

    மேக்கப்பை அகற்றுவதை புறக்கணிப்பது காலப்போக்கில் சருமத்திற்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். அதை தவிர்க்க தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அது சருமம் புதுப்பித்தல் செயல்முறையை தொடங்குவதற்கு வித்திடும்.

    காலாவதி பொருட்களை பயன்படுத்துதல்

    காலாவதியான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவது சருமத்தில் எரிச்சல், வீக்கத்தை ஏற்படுத்தும். தோல் பிரச்சனைகளை உண்டாக்கி விரைவாகவே வயதான தோற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.

    அழகு சாதனப்பொருட்களின் காலாவதி தேதிகளைத் தவறாமல் சரிபார்ப்பதோடு, அழகு சாதன நிபுணர்கள் பரிந்துரைக்கும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

    இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்...
    மணிக்கணக்கில் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொள்ளும் முகங்களை விட, இயல்பான அழகோடு இருக்கும் முகங்கள் பல நேரங்களில் மிக அழகானதாகத் தெரியும். இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்...

    நல்ல உணவுப் பழக்கம்: தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆளி விதை, அக்ரூட் பருப்பு போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அவசியம். முட்டை, கோழிக்கறி, கிட்னி பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் பாலாடைக்கட்டி போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும்.

    நிம்மதியான தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் முக்கியமானது. தூங்கும்போது தோல் புதிய கொலாஜனை உற்பத்தி செய்கிறது. உங்கள் செல்போனை சார்ஜ் செய்வது போல், உடல் தானாகவே சார்ஜ் செய்ய வேண்டும். இதற்கு நல்ல உறக்கம் அவசியம். இதன் மூலம் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மறையும்.

    பயன்படுத்தும் பொருட்கள்: நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 60 சதவீதத்தை உங்கள் சருமம் உறிஞ்சிக் கொள்கிறது. எனவே சருமப் பராமரிப்பு, முடிப் பராமரிப்புக்குப் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டவையாக இருப்பது நல்லது. சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய அல்லது தலைமுடியை உலர வைக்கும் பாரபென்கள், பெட்ரோகெமிக்கல்கள் மற்றும் சல்பேட்டுகள் உள்ள பொருட்களில் இருந்து விலகி இருங்கள். இயற்கை பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

    உடற்பயிற்சி அவசியம்: ஓட்டப் பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். உடற்பயிற்சி சருமத்திற்கு நன்மை செய்வதோடு, உங்கள் மனநிலையை மேம்படுத்தும். வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், நச்சுகளை அகற்றும், சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும். முழு உடலையும் அமைதிப்படுத்தும் எண்டோர்பின்களைத் தூண்டும்.

    சரும பராமரிப்புப் பழக்கம் சருமத்தை தூய்மையாக்குவது, டோனிங் செய்தல் மற்றும் ஈரப்பதமூட்டுதல் போன்ற பழக்கங்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம். இந்த முறையைப் பின்பற்ற நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளை உங்கள் தோலின் தன்மையைப் பொறுத்து, தேர்ந்தெடுக்க வேண்டும். காலை அல்லது இரவில் சருமப் பராமரிப்புப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

    இறந்த செல்களை நீக்குங்கள்: இறந்த செல்களை நீக்குவது பளபளப்பான சருமத்திற்கு முக்கியமானதாகும். இது புதிய மற்றும் ஆரோக்கியமான செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உளுந்து மாவு அல்லது காபி தூள் ஸ்கிரப் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தில் படியும் இறந்த செல்களை நீக்கலாம்.
    எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவர்கள் நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தியை மட்டும் பின்பற்றினால் போதுமானது.
    எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவரா? நீங்கள்..என்ன கிரீம் வாங்கிப் போட்டாலும் அந்த பிரச்னையை சரிசெய்யவே முடியவில்லையா? கவலையை விடுங்க.. சின்ன சின்ன உத்தியை மட்டும் பின்பற்றினால் போதும். சூப்பர் ஃபேஸ் கிடைக்கும்.

    பொதுவாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மேக்கப் போட்டாலும், சிறிது நேரத்தில், முகத்தில் எண்ணெய் மினுமினுக்கத் தொடங்கி, முகம் களையிழந்து விடும். அதனால், எண்ணெய் சருமம் உடையவர்கள், முகத்துக்கு மேக்கப் போடும் முன் ஐஸ்கட்டியை ஒரு காட்டன் துண்டு அல்லது துணியில் சுற்றி முகத்தில் பரவலாக ஒற்றி எடுங்கள்.

    பிறகு, உலர்ந்த துண்டை பயன்படுத்தி, முகத்தை மிக மென்மையாகத் துடைத்து, முகம் உலர்ந்தபின், உங்களது வழக்கமான மேக்கப்பைத் தொடங்குங்கள். இவ்வாறு செய்வதால், மேக்கப் நீண்டநேரம் கலையாமலும் இருக்கும். எண்ணெய் பிசுபிசுப்பும் இருக்காது. முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    சருமத்தில் உள்ள நுண்ணிய துளைகள் இறுக்கமாக்கப்படும். கண்கள் பூத்துப்போனது போல் இல்லாமல் பிரகாசமாகத் தெரியும். முகத்தில் உள்ள மெல்லிய சுருக்கங்கள் மறையும். முகத்தில் ரத்தஓட்டம் அதிகரிப்பதால் பொலிவான சருமத்தை பெறலாம். சாத்துக்குடி சாறு அல்லது எலுமிச்சைசாறு கலந்த நீர் ஏதாவது ஒன்றை ஐஸ்கட்டி டிரேயில் ஊற்றி, கட்டி ஆனதும் முகத்துக்குப் பயன்படுத்தலாம்.

    “ஆள்பாதி, ஆடைபாதி”, “ஆளை பார்த்து எடை போடு”, “அகத்தின் அழகு, முகத்தில்தெரியும்” என்று அழகை பற்றி தமிழில் பல கூற்றுகள் இருந்தாலும், ஏனோ ஆண்கள் பலர் அழகை பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை.
    “ஆள்பாதி, ஆடைபாதி”, “ஆளை பார்த்து எடை போடு”, “அகத்தின் அழகு, முகத்தில்தெரியும்” என்று அழகை பற்றி தமிழில் பல கூற்றுகள் இருந்தாலும், ஏனோ ஆண்கள் பலர் அழகை பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை. அழகு மற்றும் அழகு நிலையங்கள் எல்லாம் பெண்கள் சம்பந்தப்பட்டது. நமக்கும், அதற்கும் ரொம்ப தூரம் என்று முக்கால்வாசி ஆண்கள் ஒதுங்கிவிடுகிறார்கள்.

    அதுவும் திருமணம் ஆன ஆண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நமக்கு தான் கல்யாணம், குழந்தை, என்றாகிவிட்டதே என்று சலிப்புடனேயே இருப்பார்கள். நாம் ஏன் தோற்றத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என்று நினைத்தீர்களேயானால், நீங்கள் “உற்சாகமில்லா மனநிலை” என்ற படிக்கட்டில் ஏற ஆரம்பித்து விட்டீர்கள், இல்லை, இல்லை, இறங்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். வாழ்க்கை தொடங்குவதே திருமணத்திற்கு பின்பு தான் என்பதை உணருங்கள். உங்கள் செல்ல குழந்தை “எனது அப்பா” என்று நண்பர்களிடமும், உங்கள் அன்பு மனைவி “எனது கணவர்” என்று உற்றார், உறவினர்களிடமும் அறிமுகம் செய்வதில் எப்போதும் ஆனந்தம் அடைவார்கள். அப்போது நீங்கள் பார்க்க நன்றாக இருந்தால் தானே அவர்களுக்கும் பெருமை.

    “நீங்கள் சொல்வதை பார்த்தால் நானும் சிலரை போல பணத்தை அழகு நிலையங்களில் செலவு செய்யவேண்டுமா? காசை கரியாக கரைக்கணுமா?” என்று கேட்பீர்களேயானால் அதுவல்ல நான் கூற நினைப்பது. சாதாரணமாக முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் என்று ஆரம்பித்து உங்களால் முடிந்ததை, இயன்றதை மாதம் தோறும் தவறாமல் செய்துகொள்ளுங்கள். இதை செலவு என்று ஒருபோதும் நினைக்காதீர், முதலீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளியுங்கள். ஆம், எப்பொழுதும் சிடுசிடு என்று இருப்பவர்களை யார் தான் ரசிப்பார், சொல்லுங்கள்? இதனால் உங்கள் தன்னம்பிக்கை மட்டுமல்ல செயல்திறனும் கூடும். உங்கள் மனைவி மக்களும் பெருமை கொள்வர்.

    ஆண் அலங்காரத்தில் அடுத்த முக்கிய பிரச்சினை தொந்தி. திருமணமான பின்பு ஆண்கள் விளையாட்டு, உடற்பயிற்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேலை, வேலை என்று அலைவார்கள். நீரிழிவுநோய், ரத்தகொதிப்பு என்று வந்த பின்பு தான் மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். ஏன் அதற்கு நாம் இடம் கொடுக்கவேண்டும்?. “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” என்று திருமூலர் கூற்றிற்கேற்ப தினமும் குறைந்தது ஒரு முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்து நீங்கள் உடல்நலத்துடனும், மனநலத்துடனும் மட்டுமின்றி தொந்தி இல்லா புற அழகுடனும் இருக்கலாமே.

    அடுத்து உடல் துர்நாற்றம். புறஅழகை காக்க நம் மேல் எந்தவித துர்நாற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். தினமும் உண்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தினமும் குளிப்பது. வெயில் காலங்களில் அவசியம் ஏற்பட்டால் இருமுறை குளிப்பதும் தப்பில்லை. அதேபோல் வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இருமுறை பல்விளக்குதல், உணவு உண்ட பின்பு, வாய் கொப்பளித்தல், ஏலக்காய் சாப்பிடுதல் என்று சில செயல்களால் அதை தவிர்க்கலாம்.

    “கூழ் ஆனாலும் குளித்து குடி, கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு” என்று பழமொழிக்கேற்ப ஆடைகளை துவைத்து அணியவேண்டும். ஆடையின் நிறம் மற்றும் அளவு நமக்கு தகுந்தாற் போல் பார்த்து கொள்வது முக்கியம். பொத்தான்கள் இல்லாமல் அணிவது, கிழிந்த ஆடைகளை அணிவது என்று இல்லாமல் நாம் அதனை உடனுக்குடன் சரி செய்து அணிதல் வேண்டும். வெயில் காலங்களில் மட்டுமின்றி முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிவது உடல் நலத்திற்கும் நல்லது, பார்க்கவும் நன்றாக இருக்கும். இதை நம்பி இருக்கும் நெசவாளர்களும் மகிழ்வர்.

    புற அழகில், நாம் நமது தனிப்பட்ட சுகாதாரத்தை தொடர்ந்து பேணுதல் மிக முக்கியம். நகம் வெட்டுதல், முடி வாருதல், முகம் கழுவுதல் என்று நம்மை நாமே கவனித்து செய்துகொள்ள வேண்டும். காலணிகளுக்கும் முக்கியத்துவம் தந்து கருப்பு பூச்சு அணிந்து செல்ல வேண்டும்.

    எனது நண்பர் ஒருவர், “பல மேடை பேச்சுகளை கேட்டும், நம்பிக்கை தரும் நூல்களை படித்தும் கிடைக்காத தன்னம்பிக்கை, முடிவெட்டி, சவரம் செய்த பின்பு கண்ணாடியை பார்க்கும் போது கிடைக்கிறது. அதற்கு அந்த சவரதொழிலாளிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்பார். உங்கள் புற அழகை பேணுவதால் உங்கள் தனித்துவம் மேம்படும் என்பதை மறவாதீர். நேர்காணலில், பணி இடங்களில் வெற்றி பெற, வாடிக்கையாளரிடம் நன்மதிப்பை பெற என்று மட்டும் இல்லாமல் உங்களுக்குள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் நாள் முழுக்க பெருக்கெடுத்து ஓடவைக்கும் வித்தை இது என்பதையும் மறவாதீர். தினமும் சிலநிமிடம் கண்ணாடி முன்பு நின்று உங்களை நீங்களே பார்த்து ரசியுங்கள், உங்களுக்கு நீங்களே முதல் ரசிகனாய்.

    கமலேஷ் சுப்பிரமணியம்
    உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    தன் உண்மையான வயதைவிட இளமையாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை எல்லோரின் ஆழ்மனதிலும் இருப்பதுதான். ஆசை மட்டும் இருந்தால் போதுமா? உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    1. உங்கள் கூந்தல் இளமையாக இருந்தால், நீங்களும் இளமையாகத் தெரிவீர்கள். இதற்கு வாரம் இருமுறையோ அல்லது ஒருமுறையாவது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கூந்தலின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரைத் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஹேர்வாஷ் செய்யவும். எண்ணெய்ப் பசை குறைவான ஹேர்க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியலும் ஹேர்க்ரீமும் தலைமுடியை லேசான ஈரப்பதத்துடனே வைத்திருக்கும். இந்த ஈரப்பதம், கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் உங்களை இளமையாகக் காண்பிக்கும்.

    2. ஆஃபீஸுக்குப் போகும் அவசத்தில் தலைமுடியைச் சரியாக வாரிக்கொள்ளாமல் அள்ளிமுடிந்து போகாதீர்கள். கலைந்த கூந்தல்தான் உங்கள் வயதை அப்பட்டமாகக் காட்டும் முதல் எதிரி.

    3. மாதம் ஒருமுறை கூந்தலின் நுனியை டிரிம் பண்ணிவிடுங்கள். அடியில் சமமாக இருக்கிற தலைமுடியும் உங்களுக்கு நீட் லுக் கொடுக்கும்.

    4. ஓப்பன் ஹேர் விடுபவர்கள், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது கிளிப்ஸை மாற்றி மாற்றி யூஸ் பண்ணுங்கள்.

    5. தொப்பை இருப்பவர்கள், இன்றைய டிரெண்ட்படி இறுக்கமாக ஆடை அணிந்தால், தொப்பை அசிங்கமாகக் காட்டிவிடும். தொளதொள டிரெஸ்ஸிங்கும் செய்யாதீர்கள். உங்கள் உடல்வாகுக்கு ஏற்றபடி ஆடை அணியுங்கள். முப்பது வயதுகளில் உடம்பு வெயிட் போட்டுவிடும் என்பதால், லாங் டாப் – லெகின் என்று மேட்ச் செய்தால் உடல் மெலிவாகவும் இளமையாகவும் தெரிவீர்கள்.



    6. சில பெண்களுக்கு வயது ஏற ஏற, மேல் கை வெயிட் போட ஆரம்பிக்கும். அது அவர்களுடைய ஜீன். அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அதை மறைக்கும் வகையில் முட்டி வரை ஸ்லீவ் டிரெஸ் செய்தால், உண்மையான வயது வெளியில் தெரியாது.

    7. மாதத்துக்கு ஒருமுறை புருவங்களை திருத்திக்கொள்ளுங்கள். இது முகத்தை பளிச்சென்றுக் காண்பித்து, இளமையைக் கூட்டும்.

    8. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பார்லருக்குப் போய் ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள். மரு, மாசு, பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் இல்லாமல் ஈவன் டோனாக இருக்கும். உதட்டுக்கு மேலே பூனை முடிகள் இருந்தால், பார்லரில் திரெட்டிங் செய்துகொள்ளுங்கள். மாசு மருவற்ற சருமம் இளமையின் அடையாளம். பார்லருக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே கடலை மாவு, பயித்தம் மாவு, முல்தானி மிட்டி, பால், தேன், தக்காளிச்சாறு எனப் பயன்படுத்தி சருமத்தில் டெட் செல்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான சருமம், லேசான எண்ணெய் பளபளப்புடன் மின்னுவது உங்களை யூத்ஃபுல்லாக காட்டும்.

    9. உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற கலரில் ஆடை அணியுங்கள். இதைக் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் முகத்தின் ஒரு பக்கத்தில் தங்க கம்மலையும், இன்னொரு பக்கத்தில் ஒயிட் மெட்டல் கம்மலையும் வைத்துப் பாருங்கள். தங்க நிறம் பொருத்தமாக இருந்தால் மெரூன், கிரீன், ரெட், பிங்க், பிரவுன் போன்ற ஷேட்ஸ் பொருத்தமாக இருக்கும். ஒயிட் மெட்டல் பொருத்தமாக இருந்தால், ஸ்கை ஃப்ளூ, பேபி பிங்க், லேவண்டர், பர்பிள், லெமன் யெல்லோ போன்றவை உங்கள் ஸ்கின்னுக்கு ஒகே. ஸ்கின் டோனுக்குப் பொருத்தமான கலர் டிரெஸ்ஸை அணிவதும் இளமையாகக் காட்டும் சீக்ரெட் வழிதான்.

    10. நிறையப் பெண்கள் முகத்துக்கும் ஆடைக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பாதங்களை உலர்வாகவும் பித்தவெடிப்புடனும் ஈரப்பதமே இல்லாமல் வைத்திருப்பார்கள். கைகளும் கால்களும் நம் உண்மை வயதைக் காட்டிக்கொடுக்கும் எட்டப்பன்கள். எனவே, நகங்களைச் சீராக வெட்டி, லேசாக ஆயில் தடவி ஈரப்பதத்துடன் மெயின்டெய்ன் பண்ணுங்கள். ஸ்லிப்பர், ஹேண்ட்பேக் போன்றவற்றை இரண்டு, மூன்று என வைத்துக்கொண்டு டிரெஸ்ஸுக்கு மேட்சாக அணியுங்கள். வருஷம் முழுக்க ஒன்றையே பயன்படுத்தாதீர்கள்.

    பத்து டிப்ஸையும் பிராக்டிகளாக செய்துபாருங்கள். இதில், பெரிதாகச் செலவு இல்லை. அதேநேரம் இளமையாகவும் தன்னம்பிக்கையாகவும் உணர்வீர்கள்.

    நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களை சரியான விதத்தில் பயன்படுத்தினால் உங்கள் மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.
    நீங்கள் என்ன தான் நீங்க அழகாக மேக்கப் போட்டாலும் ஓரு சில மணி நேரத்தில் கலைந்து உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி விடுகிறதா? இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாங்கள் உங்களுக்கு நீண்ட நேரம் கலையாத சில மேக்கப் ட்ரிக்ஸ்களை வழங்க உள்ளோம். இதற்கு நீங்கள் சரியான அழகு சாதன பொருட்களை சரியான விதத்தில் நீங்கள் பயன்படுத்தினாலே போதும் இந்த பிரச்சினையை நீங்கள் தூரத்தில் வைத்து விடலாம்.. சரி வாங்க நீண்ட நேரம் கலையாத மேக்கப் டிப்ஸ் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
     
    * முதலில் உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள், தூசிகள் போன்றவை நீங்க வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நல்ல சுத்தமான துண்டை கொண்டு துடைத்து விட்டு உலர்ந்த பிறகு மேக்கப் போட்டால் நீண்ட நேரம் கண்டிப்பாக நிலைத்திருக்கும்.

    * அடுத்த படியாக மாய்ஸ்சரைசர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் வறண்ட சருமமாக இருந்தால் கண்டிப்பாக மாய்ஸ்சரைசர் அவசியம். முகம் மற்றும் கழுத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். அப்போது தான் மேக்கப் திட்டு திட்டாக தெரியாது. ஆனால் சரியான அளவு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்வதும் முக்கியம். கொஞ்சம் அதிகமானால் கூட உங்கள் மேக்கப் எளிதாக களைந்து விடும். எனவே போதுமான அளவில் மாய்ஸ்சரைசர் போட்டு மேக்கப் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    * ப்ரைமர் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளை மிருதுவாக்கி உங்கள் மேக்கப்பிற்கு ஒரு பவுண்டேஷன் மாதிரி செயல்படுகிறது. இவை உங்கள் மேக்கப் நீண்ட நேரம் நிலைத்திருக்கவும் உதவுகிறது. சிறிதளவு ப்ரைமரை எடுத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். மேக்கப் அப்படியே இருக்கும்.

    * உங்கள் முகத்தில் உள்ள துளைகளை மூடுவதற்கு சிலிக்கான் வகையான பவுண்டேஷனை பயன்படுத்துங்கள். அவை உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தாலும் போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும். பவுண்டேஷனை அப்ளே செய்வதற்கு முன் உங்கள் முகத்தில் உள்ள தழும்புகள், நிறத்திட்டுகள் போன்றவற்றை கண்சீலர் கொண்டு மறைக்க மறந்துவிடாதீர்கள். கண்சீலரை சரியான இடத்தில் அப்ளே செய்து பரவாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். இப்பொழுது நன்றாக பவுண்டேஷனை முகம் மற்றும் கழுத்து போன்றவற்றில் பரப்புங்கள். இந்த பவுண்டேஷன் கண்டிப்பாக உங்கள் மேக்கப்பிற்கு நல்லதொரு பார்வையை கொடுக்கும்.

    * நல்ல தரம் வாய்ந்த பவுடரை தேர்ந்தெடுப்பது நல்லது. சிறுதளவு பவுடரை பிரஷ்ஷில் தொட்டு முகத்தில் அப்ளே செய்யுங்கள். பிரஷ் இல்லாமல் அப்படியே பவுடரை முகத்தில் அப்ளே செய்யாதீர்கள். இது உங்கள் மேக்கப்பை எல்லாம் களைத்து விடும்.

    * வாட்டர் ப்ரூவ் உள்ள மஸ்காரா, ஐ லைனர் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள். இந்த நீரினால் அழியாத மேக்கப் பொருட்கள் எண்ணெய் பசை சருமத்திற்கும், அதிகமாக வியர்க்கும் சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். இதனால் உங்கள் மேக்கப்பும் அழியாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
    இமைகளை சுருட்டி விடுங்கள்.



    * மஸ்காரா அப்ளே செய்வதற்கு முன் உங்கள் இமைகளை சுருட்டி விட சற்று மிதமான சூட்டில் ட்ரையர் பயன்படுத்துங்கள். அதிகமான சூட்டை பயன்படுத்த வேண்டாம். நன்றாக ஒரு மூன்று முறை இமைகளை சுருட்டிய பிறகு மஸ்காராவை அப்ளே செய்யுங்கள். அப்புறம் என்ன உங்கள் கண்கள் அழகாகி ஜொலிக்கும்.

    * உங்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நிலைத்திருக்க க்ரீம் வகை கண்சீலரை பயன்படுத்துவது நல்லது.

    * உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொஞ்சம் நேரம் கழித்து எண்ணெய் வடிய வாய்ப்புள்ளது. இதற்கு முகத்தை துடைத்தால் உங்கள் எல்லா மேக்கப்பும் பாழாகி விடும். எனவே டிஸ்யூ பேப்பர் அல்லது பிளாட்டி சீட் கொண்டு முகத்தை ஒற்றி எடுத்தால் போதும். உங்கள் மேக்கப்பும் களையாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

    கவனத்தில் வைக்க வேண்டியவை

    டிஸ்யூ பேப்பர் மற்றும் பிளாட்டிங் பேப்பரை உங்களுடன் எப்போதுமே வைத்திருங்கள். இது உங்கள் சருமத்தை எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திலிருந்து காக்கும்.

    நல்ல லேசான பவுண்டேஷன் மேக்கப் போடுங்கள் இது நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

    அதிகமான மேக்கப் போடாதீர்கள். அவை உங்கள் அழகை கெடுத்து விடும்.

    தரம் வாய்ந்த அழகு சாதனப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்

    நல்ல வெளிச்சமான அறையில் அல்லது நல்ல சூரிய ஒளி படும் அறையில் உட்கார்ந்து மேக்கப் போடுங்கள். அப்பொழுது தான் சரியான அளவில் அழகான கச்சிதமான மேக்கப் செய்ய முடியும்.

    இந்த டிப்ஸ்களை பின்பற்றி எப்பொழுதும் எல்லார் முன்னிலையிலும் அழகாக ஜொலியுங்கள்.
     
    ×