search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "makkal neethi mayyam"

    திமுகவை குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri #KamalHaasan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
     
    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்பியது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியிருந்தார்.

    இந்நிலையில், திமுகவை குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கேஎஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



    பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை.

    அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக மீதான விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குதான் உதவும். 

    எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri #KamalHaasan
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் பிரகாஷ்ராஜுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    சென்னை:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

    இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

    இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ், பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று அறிவித்தார்.



    இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜை அரசியலுக்கு வரவேற்றுள்ளார். 
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பேச்சை செயலாக்கி காட்டியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், நாம் தனித்தே நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நான் அரசியலுக்கு வந்த காரணத்தை கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் உணர்வர். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல, நாளை நமதே என பதிவிட்டுள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என தெரிவித்துள்ளார். #2018electionresults #Kamalhassan
    சென்னை:

    ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானா, மிசோரமில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது என பதிவிட்டுள்ளார். #2018electionresults #Kamalhassan
    எனது தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #Kamalhaasan #Vijay
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் சமூக வலைதளமான டுவிட்டரில் ரசிகர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.



    இதற்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
    #Kamalhaasan #Vijay
    தி.மு.க. தலைவர் கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #Kamalhaasan #karunanidhibirthday
    சென்னை:

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் மற்றும் கலையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று இரவு பெங்களூரு புறப்பட்டு சென்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலைஞருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு, எப்பவும் தள்ளி நின்று வாழ்த்து சொல்லும் ரசிகன் நான். பலமுறை பிறந்தநாள் முடிந்தும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து கூறியுள்ளேன், இம்முறையும் அதேதான் என தெரிவித்துள்ளார். #Kamalhaasan #karunanidhibirthday
    ×