என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malavika Mohanan"

    • பேட்டை படத்தில் மூலம் மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானார்.
    • அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடினார்.

    இதன் மூலம் பேட்டை படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்டு 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

    அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர் ஒருவர் உங்கள் அழகு சூரியனை விட பிரகாசமாக உள்ளது என கமெண்ட் செய்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
    • எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று பகிர்ந்துள்ளார்.

    ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

    இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது.

    சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவரான மாளவிகா மோகனன் அடிக்கடி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

    வெளிநாடுகளில் சுற்றுலா சென்ற படங்கள் மற்றும் சிலம்ப பயிற்சி எடுத்துக் கொண்ட படங்கள் உள்பட பல வீடியோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தாய்லாந்தில் சைக்கிள் ரிக்சா முன்பு நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்துடன் எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
    • தி ராஜா சாப் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக தகவல்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார்.

    பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா அளவில் வெளியிடப்படுகிறது.

    அந்த வகையில், சாஹோ, ராதே ஷ்யாம், ஆகிய பான் இந்தியா திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

    'சலார்' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

    பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் 'தி ராஜா சாப்'. இப்படத்தின் அறிவிப்பு முதல் தோற்றத்துடன் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

    மாருதி இயக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியாபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார்.

    இப்படத்தில் பிரபாஸூடன், மாளவிகா மோகனன், நிதி அர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் பரவிய நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    • தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    பா. ரஞ்சித்தின் அடுத்த படைப்பான தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.

    பா. ரஞ்சித்துடன் இணைந்து தமிழ் பிரபா கதையை எழுதியுள்ளார். தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. முதலில் திரைப்படம் ஜன்வரி 26 ஆம் தேதி வெளியாகப்போவதாக கூறினர் ஆனால் சில காரணங்களால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியவில்லை.

    தற்பொழுது படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என  தகவல் வெளியாகியுள்ளது இம்முறை சொன்ன தேதியில் வெளியாகும் என ரசிகர்களால் நம்பப் படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

    தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அப்பதிவில் " தங்கலான் படத்தின் பின்னணி இசையமைப்பு முடிவடைந்தது, நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளேன், தங்கலான் எப்படிப்பட்ட திரைப்படம் என்று சொல்ல வார்த்தை இல்லை, கூடிய விரைவில் ஒரு அசத்தலான டிரைலர் வர இருக்கிறது, இந்தியன் சினிமா மிகப் பெரிய படைப்பான தங்கலானை பார்க்க இருக்கிறது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
    • இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

    ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகை மாளவிகா மோகனன் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்தார். தமிழில் அறிமுகமான குறிகிய காலத்தில் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.

    பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 15-ந் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதில் கலந்து கொண்ட மாளவிகா சிவப்பு நிற சேலையில் ஜொலித்தார்.

    இப்படியாக படங்களில் பிஸியாக இருக்கும் மாளவிகா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருவார். 

    அந்தவகையில் தற்போது இவர் சிகப்பு நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.
    • சர்தார் 2 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகிய படம் சர்தார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.

    கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

    இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சர்தார் 2 திரைப்பத்தின் பூஜையுடன் கடந்த மாதம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

    தற்பொழுது படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் தங்கலான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.





    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • தங்கலான் வார் சாங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

    இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் பாடலான மேனா மினிக்கி மற்றும் தங்கலான் வார் சாங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று மாலை ஐதராபாத்தில் நடைப்பெறவுள்ளது.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாளவிகா மோகனை வாழ்த்தி படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மாளவிகா இப்படத்தில் ஒரு சூனியகாரி ஆராத்தி  கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது மனிதநேயமிக்க கலைஞர்களை சந்தித்தேன்.
    • விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது.‌

    சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதில் நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், '' இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம். தங்கலான் என் இதயத்தின் ஒரு பகுதி. என்னுடைய கலை உலக பயணத்தில் இதற்கு முன் இப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை. இந்த ஒன்றரை ஆண்டு கால பயணம் மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது மனிதநேயமிக்க கலைஞர்களை சந்தித்தேன்.

    ஆரத்தி என்ற கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வேடத்தை வழங்கியதற்காக மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் இந்திய சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரத்தை யாரும் ஏற்று நடிக்கவில்லை என நினைக்கிறேன்.

    விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது. சக நடிகையை சௌகரியமாக ...அக்கறையுடன் .. அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் வேறு யாருமில்லை.

    தங்கலான்- ஒரு கூட்டு முயற்சி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

    • தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்கிற கேரக்டரில் மாளவிகா நடித்துள்ளார்.
    • தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

    கேரளாவில் இருந்து கோலிவுட் வந்து பேமஸ் ஆன நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.


    மாஸ்டர் படமும் ஹிட்டானதால் கோலிவுட்டில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார் மாளவிகா. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

    தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்கிற கேரக்டரில் மாளவிகா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.


    இந்நிலையில் தங்கலான் புரமோஷனின் போது டார்க் ரெட் கலர் சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது.

    • ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று "தங்கலான்" திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது.
    • "தங்கலான்" திரைப்படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

    விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பிரபல நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் உருவெடுத்தார். அந்த வரிசையில், இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் "தங்கலான்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று "தங்கலான்" திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் விளம்பர பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    "தங்கலான்" திரைப்படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் சவாலானது என்பதால் மிகவும் மெனக்கட்டுள்ளார். இந்த கதாப்பாத்திரத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு மெனெக்கட்டுள்ளார் மாளவிகா. இதற்காக சிலம்பம் பயிற்சி முதல் உடல் எடை குறைவது வரை இப்படத்திற்காக செய்துள்ளார்.

    மேலும் இந்த படத்தில் படம் முழுக்க மேலாடை இல்லாமல் நடித்துள்ளார். திரையில் அவர் காட்சியளிக்கும் அனைத்து காட்சிகளையும் சிகப்பு நிறமாகவே காட்டப்பட்டுள்ளது.

    அந்த சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில், தங்கலான் படம் சார்ந்த அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற புடவையில் தங்கமாய் ஜொலித்திருந்தார். மொத்தத்தில் இதுவரை பார்க்காத மாளவிகாவை தங்கலான் படத்தில் பார்க்கலாம்.

    பொதுவாக படத்தின் கதாபாத்திரத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ண ஆடைகள் மற்றும் தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லும் வழக்கம் பாலிவுட் திரையுலகில் பின்பற்றப்படுவதுண்டு. அந்த வகையில், மாளவிகா மோகனன் பாலிவுட் பாணியை தற்போது தங்கலான் புரமோஷனில் கொண்டுவந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான்.
    • இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.

    இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்தி மொழியில் தங்கலான் திரைப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சீயான் விக்ரமிற்கு இப்படம் மாபெரும் வெற்றியாகும். . 

    படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சீயான் விக்ரம் படத்தின் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து வைத்தார். அதில் அவரே பலருக்கும் பரிமாறிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் பரிமாறப்பட்ட உணவுகள் அனைத்தும் பிரபல சமையல் நியுணரான மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனத்தால் சமைக்கப்பட்டது ஆகும். பரிமாறப்பட்ட உணவு பட்டியல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×