என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mandala pooja"
- நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று காலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5 நாள் நடைபெறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு கோவில் நடை 21-ந்தேதி இரவு அடைக்கப்படும்.
இந்தநிலையில், சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சீசன் நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விபத்தில் மரணம் அடைய நேரிட்டால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையினை காப்பீட்டு நிறுவனத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் செலுத்தும். விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவு தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினசரி கூலி தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
- மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதியில் இருந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.
தற்போது சன்னிதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் போலீஸ், சி.ஆர்.பி.எப்., வெடிகுண்டு தடுப்பு பிரிவு என பல்வேறு துறைகளை சேர்ந்த 2,150 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மண்டல பூஜையின் போது சபரிமலையில் மட்டும் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்தநிலையில் சபரிமலையில் 750 பேரின் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. அதற்கு பதிலாக புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றனர். சன்னிதானம் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர் புதிய ராணுவ வீரர்களை வரவேற்றார். அவர் பேசும்போது, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் போலீசார் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். பக்தர்களை மிகுந்த கண்ணியத்துடன் நடத்த வேண்டும். போலீசார் உரிய நேரத்தில் பணிக்கு வருகைதர வேண்டும். தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால் போலீசாரின் பொறுப்பு அதிகரித்து வருகிறது என்றார்.
சபரிமலையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 10 பிரிவுகளாக 35 இன்ஸ்பெக்டர்கள், 105 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சிறப்பு அதிகாரி சுதர்சனன் கூறுகையில், "ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்கள் 18-ம் படி ஏறுகிறார்கள். அனைவருக்கும் சாமி தரிசனம் கிடைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பக்தர்கள் போலீசாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்றார்.
மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி மகர சங்ரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.
- பெருவழிப்பாதை வழியாக நடந்து வந்து 1¼ லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்ல பத்தனம்திட்டை-பம்பை இடையே வாகன வசதி உள்ளது. ஆனால் எருமேலி-பம்பை (27.5 கி.மீ) மற்றும் வண்டிப்பெரியார் புல்மேடு-பாண்டித்தாவளம் (7 கி.மீ) வழியாக நடை பயணமாக மட்டுமே செல்ல முடியும்.
இதில் எருமேலி-பம்பை இடையே கடக்கும் பாதையை பெருவழிப்பாதை என்பார்கள். இந்த பெருவழிப்பாதையில் புனித நடை பயணமாக ஏராளமான பக்தர்கள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் இந்த பாதை வழியாக சன்னிதானத்துக்கு சென்று வழிபட்ட பக்தர்கள் விவரம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கேரள அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நடப்பு சீசனில் எருமேலி-பம்பை வழியாக புனித நடை பயணமாக கடந்த 31-ந் தேதி வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 146 பேர் சபரிமலை வந்து தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் நடை பயணமாக வரும் வழியில் அழுதக்கடவு, மூக்குழி, கல்விடாம் குன்னு, கரிமலை, புதுசேரி, வலியான வட்டம், செரியான வட்டம் ஆகிய இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. யானை, சிறுத்தைகள் உள்பட வன விலங்குகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மகரவிளக்கு பூஜை நெருங்குவதையொட்டி புல்மேடு- பாண்டித்தாவளம் வழியாகவும் தரிசனத்திற்கு நடை பயணமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தினமும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருவதால் மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
அதே சமயத்தில் சன்னிதானத்தை சுற்றி வலம் வரும் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு முயல்வதாலும் சன்னிதானத்தில் கூட்ட நெரிசலுக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.
மண்டல பூஜை சமயத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜை காலத்திலும் கூடுதல் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- 14-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கிறது
- எருமேலி பேட்டை துள்ளல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது.
41 நாட்களாக நடந்த மண்டல பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 27-ந் தேதி கோவில் நடை அடைக்கப்பட்டது.
அடுத்து ஜனவரி 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்காக கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரூ ராஜிவரரூ கோவில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தினார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. வருகிற 14-ந் தேதி சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கி உள்ளனர்.
மகர விளக்கு பூஜையில் பங்கேற்க இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக நேற்றிரவே ஏராளமான பக்தர்கள் பம்பையில் காத்திருந்தனர்.
இன்று ஒரு நாளில் மட்டும் தரிசனம் செய்ய 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
எருமேலி பேட்டை துள்ளல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. 12-ந் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலம் புறப்படுகிறது. 13-ந் தேதி பம்பை தீபம் மற்றும் பம்பா சத்யா நடைபெறும். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் வருகிற 18-ந் தேதி நிறைவடைகிறது. வருகிற 19-ந் தேதி மகரவிளக்கு புனித யாத்திரை நிறைவடைந்து மாளிகைப் புரத்தில் இறுதி நிகழ்வாக குருதி பூஜை நடைபெறும். அதன் பிறகு 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின் காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும்.
சபரிமலைக்கு மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவில் சன்னிதானம் மற்றும் பம்பை முதல் நிலக்கல் வரை சுமார் 1500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல சபரிமலை வரும் பக்தர்களுக்காக மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
- ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.
- பக்தர்கள் சரண கோஷம் முழங்கியபடி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை களுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் பெற்று வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.
கடந்த 39 நாட்களில் சபரிமலையில் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் தரிசனம் பெற்றுள்ளனர். இவர்களில் 6 லட்சம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு இதுவரை ரூ.222 கோடியே 98 லட்சம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.70 கோடி பிரசாதமாக பெறப்பட்டுள்ளது.
நடை திறக்கப்பட்டு 41 நாட்கள் ஆன நிலையில், இன்று மண்டல பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடந்தன. களபாபிஷேகத்திற்கு பிறகு பகல் 12.30 மணிக்கு பிரசித்தி பெற்ற மண்டல பூஜைகள் நடைபெற்றன. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன.
அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழங்கியபடி தரிசனம் செய்தனர். மண்டல பூஜை வழிபாட்டையொட்டி பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முன்னதாக நேற்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று இரவு ஹரிவராசனம் பாடலுக்கு பிறகு கோவில் சன்னதி மூடப்படுகிறது.
தொடர்ந்து மகர விளக்கு வழிபாட்டுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
- 29 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
- மண்டல பூஜை இன்று நடக்கிறது.
நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. இந்தநிலையில் சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதற்கிடையே நேற்று சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (நேற்றுமுன்தினம் வரை) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது. இதில் காணிக்கையாக ரூ.70 கோடியே 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது.
மேலும் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை.
- மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி திறக்கப்படும்.
- மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.
சபரிமலை :
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்தனர்.
ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் இருந்தது. இதுபோக நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
ஒரு கட்டத்தில் பம்பை முதல் சன்னிதானம் வரை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிறு குழந்தைகள், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதற்கிடையே நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜைக்கு முதல் நாள் அதாவது 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு கடந்த 23-ந் தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.
இந்த ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடைகிறது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வருவார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
அப்போது 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டுமாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.
பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். இதனால் தங்க அங்கியை சன்னிதானத்துக்கு கொண்டு வருவதையொட்டி இன்று பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை.
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.
- 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.
- நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் அருகே மாதப்பூரில் சுமார் 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி கடந்த நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்றது. மண்டல பூஜையின் நிறைவு நாளான 48ம் நாள் பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை ,புண்யாஹவாசனம் அதனை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றுது.நிறைவாக தீபாராதனை நடைபெற்றது.மண்டல பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 48 நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டது.மண்டல பூஜையை தென் சேரி மலை ஆதீனம் முத்து சிவ இராமசாமி அடிகளார் தலைமையில், அடிகளார் பெருமக்கள் நடத்தி வைத்தனர்.
- 27-ந் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது.
- ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாள் நடைபெறும் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
இதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் முதல் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வர தொடங்கினர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை எட்டியது.
மண்டல பூஜை நடைபெறும் 27-ந்தேதி இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பார்க்கிறார்கள். இதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். 450 பவுன் எடையுள்ள இந்த தங்க அங்கி ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின் போது இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது.
தங்க அங்கி ஊர்வலத்துக்கு 65 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஊர்வலம் பல்வேறு கோவில்களுக்கும் சென்று நாளை மறுநாள் 26-ந் தேதி மதியம் பம்பை சென்றடைகிறது. அங்கு கணபதி கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்று விட்டு அன்று மாலை சபரிமலை சன்னிதானம் சென்றடைகிறது.
அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 18-ம் படி வழியாக கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
27-ந் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது. அப்போது ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளும் சபரிமலையில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.
- 26-ந் தேதி மதியம் இந்த ஊர்வலம் பம்பையை வந்தடையும்.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள். தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதால் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இன்றும் 18-ம் படி ஏற 84 ஆயிரத்து 483 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பனுக்கு வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று ஐயப்பன் தங்க ஆபரணம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவர் அணியும் தங்க ஆபரணங்கள் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.
அங்கிருந்து இன்று தங்க ஆபரணம் ஊர்வலமாக சபரிமலை எடுத்து வரப்படும். அந்த ஆபரணங்கள் வைக்கப்பட்ட தேர் பலத்த பாதுகாப்புடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சபரிமலை நோக்கி புறப்பட்டது. இந்த தேருக்கு ஏராளமான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
26-ந் தேதி மதியம் இந்த ஊர்வலம் பம்பையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து சன்னிதானம் கொண்டு செல்லப்படும். பின்னர் கருவறைக்கு எடுத்து செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
இதற்கிடையே மண்டல பூஜை விழாவின் ஒரு பகுதியாக சபரிமலை கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூர ஆழி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஊர்வலம் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதற்காக கற்பூர ஆழி கோவில் சன்னிதானத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் எழுப்பிய சரண கோஷம் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது.
மண்டல பூஜைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கோவில் நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே கோவிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சன்னிதானம் மற்றும் பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதி, பம்மை, நிலக்கல் பகுதியிலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
- ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த வருடம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் நெரிசலை தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதாவது ஒரு நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. உடனடி முன்பதிவு நடைமுறையும் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்காக பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க அங்கி ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தங்க அங்கி கொண்டு வரப்படுகிறது.
27-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். அன்று இரவு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பிறகு மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.
இதனையொட்டி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அருள்வார்.
இதற்கிடையே மண்டல பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்க அங்கி மலைக்கு எடுத்து வருவதையொட்டி 26-ந் தேதி மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்றைய தினம் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசன முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மண்டல பூஜை நடைபெறும் 27-ந் தேதி சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15-ந் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 12-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மீண்டும் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 20-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்