search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangkhut strom"

    பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்து தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்த மங்குட் புயலினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 லட்சம் பேர் வெளியேற்றபப்டுள்ளனர். #Manghkut
    பெய்ஜிங் :

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் இன்று கரையை கடந்தது.

    புயல் காரணமாக மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதில், இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்த மங்குட் புயல், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குவாங்டாங் மாகணத்தில் உள்ள ஜிங்மன் கடற்பகுதியில் சுமார் 162 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

    இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 25 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 48 ஆயிரம் படகுகள் உடனடியாக கரை திரும்பிவிட்டன. வெளியேற்றப்பட்ட மக்களுக்காக 3 ஆயிரத்து 777 அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புயலினால் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புக்களை தொடர்ந்து ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளுக்காக அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #Manghkut
    பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் கடுமையாக தாக்கியதில் இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 64 பேர் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Mangkhut
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது.

    மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் அந்நாட்டின் பாகுபோ நகரம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.  மீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கிவிட்டுள்ளது.

    அதில் 2 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர். இவர்கள் தவிர பலர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

    புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Mangkhut
    பிலிப்பைன்சில் மங்குட் புயல் தாக்கியதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. #Mangkhut
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியது. இது இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயல் என கருதப்படுகிறது. புயல் காரணமாக பிலிப்பைன்சின் வடக்கு கடற்கரை பகுதியில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.  மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மின்சாரம் தடைபட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    காற்று கடுமையாக வீசுவதால் சேதம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ‘மங்குட்’ புயல் 4-வது ரகம் என கணிக்கப்பட்டுள்ளது. இது ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் ‘கையான்’ என்ற சூப்பர் புயல் பிலிப்பைன்சை தாக்கியது. அதில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.


    இதேபோன்று இந்த ‘மங்குட்’ புயலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இப்புயலினால் 40 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இங்கு ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

    ‘மங்குட்’ புயல் பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. அது இன்று மாலை ஹாங்காங் பகுதியில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Mangkhut
    ×