search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manmohan"

    ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.

    அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் மற்றும் காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில தலைவர்கள் என 40 பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலிக்கும் வாழ்த்து கூறியுள்ளார். #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மேகன் சிங் இன்று 86-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். டாக்டர் மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலி மற்றும் பிற தேசிய விளையாட்டு விருதுகளைப் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

    ‘விளையாட்டுத் துறையில் பல ஆண்டு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனால் வீரர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. நமது விளையாட்டு வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது’ எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருவதாக டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #educatedPM #ArvindKejriwal #Manmohansingh
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவை அரியானா மாநில பாஜக அரசு குறைத்தது. இதனால் டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக அசுத்தமான அரசியல் செய்வதாக சாடினார். மேலும், 22 வருடங்களாக அரியானாவில் இருந்து அளிக்கப்படும் நீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டதற்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருகிறார்கள். பிரதமர்கள் கல்வியறிவுடன் இருக்க வேண்டும். அது மக்களின் வாழ்க்கை மலர்ச்சிக்கு உதவும்’ என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, மோடியின் கல்வித்தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. #educatedPM #ArvindKejriwal #Manmohansingh
    ×