என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Manoj"
- குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவனை தாக்கியதாக மனோஜ் மீது புகார் கூறப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயம்குளம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது45). பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான இவர் கப்பில் கிழக்கு பகுதி பூத் தலைவராக இருந்து வந்தார். இவரது வீட்டின் அருகே தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவனை தாக்கியதாக மனோஜ் மீது புகார் கூறப்பட்டது.
அதன்பேரில் காயம்குளம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கடந்த 22-ந்தேதி கைது செய்தனர். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மனோஜ் மறுநாள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கொலைமுயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இருந்தபோதிலும் அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
அதன்பிறகு வீட்டில் இருந்துவந்த மனோஜ் மீது சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இணையதளத்தில் பலர் சைபர் தாக்குதல் நடத்தினர். மேலும் அவர் மீது ஜாமீனில் வெளிவராத முடியாக பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில் தன்னுடைய வீட்டில் இருந்த மனோஜ் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். தனக்கு எதிரான சைபர் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் மனோஜ் வேதனையில் இருந்துவந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே தன் மீதான சைபர் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட மனவேதனையிலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
- அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தியன் மைக்கில் ஜேக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிணாமத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
காதலன், லவ் பர்ட்ஸ், மின்சார கனவு , காதலா காதலா போன்ற பல ஹிட்டான படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு தெலுங்கு திரைத்துறையில் பல திரைப்படங்களை இயக்கினார். அதைத்தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டில் முக்கிய இயக்குனரானார்.
தற்பொழுது மீண்டும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான மனோஜ் என்.எஸ் இயக்குவுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் தயாரிக்கவுள்ளது. பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு 6 வது முறை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபுதேவாவுடன், யோகி பாபு, அஜு வர்கீஸ், மொட்டை ராஜேந்திரன், ரெண்டின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. அதனை ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். அப்போஸ்டரில் ஏ.ஆர் ரகுமானும் பிரபு தேவாவும் கருப்பி நிற கோட் சூட்டில் காட்சி அளிக்கின்றனர். லாஃப், சிங் & டான்ஸ் அலாங் என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
இந்நிலையில், உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனோஜ் மற்றும் சயான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், அவர்கள் இருவரையும் வரும் திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. #Kodanadu #ManojSayan #MadrasHC
நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
அவர்களின் ஜாமீனை ரத்து செய்யகோரி அரசு சார்பில் கடந்த 16-ந்தேதி அரசு வக்கீல் நந்தகுமார் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி வடமலை விசாரித்து சயான், மனோஜ் ஆகியோர் 24 -ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறி சம்மன் அனுப்பினார்.
ஆனால் கடந்த 24-ந்தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வரவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார். அதில் சயான், மனோஜ் ஆகியோர் ஆஜராக போதிய அவகாசம் கிடைக்காததால் ஆஜராக முடியவில்லை.
எனவே அவகாசம் நீடித்து தர வேண்டும் என்று கூறினார். அதன் படி அவர்களின் கால அவசாகத்தை இன்று (29-ந்தேதி) வரை நீதிபதி வடமலை நீடித்தார்.
இதற்கிடையே இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி சயான்,மனோஜ் ஆகியோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏற்கனவே 20 முறைக்கு மேல் இந்த வழக்கிற்காக நேரில் ஆஜராகி உள்ளதால் ஊட்டி கோர்ட்டு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
இதனை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த வேங்கடேசன் விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராவதாக கூறி ஜாமீன் பெற்றதை சுட்டிக்காட்டி கோரிக்கையை விசாரணை நீதிமன்றத்தின் முன் வைக்குமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனை தொடர்ந்து மனுவை நேற்று திரும்ப பெற்றுக் கொண்டு சயான், மனோஜ் இருவரும் இன்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அவர்களை வருகிற 2-ந்தேதி ஆஜராகும் படி நீதிபதி வடமலை உத்தரவிட்டார். அன்று கொடநாடு கொலை , கொள்ளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. #Kodanadissue #Sayan #Manoj
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உள்பட பலரை கைது செய்தனர்.
தற்போது சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பால நந்தகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில் ஜனவரி 29-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சயான், மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் வரும் 28-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர். #KodanadEsate
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு இந்த பங்களாவுக்குள் நுழைந்த மர்மநபர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உள்பட பலரை கைது செய்தனர்.
தற்போது சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பால நந்தகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, சயான் தரப்பு இன்று ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து சயான், மனோஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் செந்தில் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை வருகிற 29-ந் தேதி ஷயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். #KodanadEsate
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்