என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Margali Thiruvizha"
- சிவபெருமானுக்கு பிரதோஷம் மிகவும் உகந்த நாளாகும்.
- இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
புத பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள், புதன்கிழமை. இந்தநாளில் வரும் பிரதோஷ தினமான இன்று வழிபாடு செய்யும் மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், புதன் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். புதன் நீச்சம் பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிப்பில் ஆா்வம் இல்லாதவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.
அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கி, பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்கி இல்லம் திரும்ப வேண்டும்.
"பொன்" எனப்படும் தங்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். எனவே மார்கழி மாதத்தில் புதன் கிழமையில் வரும் சிறப்பான இன்றைய பிரதோஷத்தின் போது குரு பகவானையும், சிவபார்வதியையும் வணங்குவதால் உங்களுக்க பொன்னாபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வறுமை நிலை நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பிறருடனான பகை நீங்கும்.
புதனை வலிமைப்படுத்த இன்று பச்சை பயிறு, சுண்டல் தானம் செய்யுங்கள்.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, மெல்லிசை கச்சேரி, பட்டிமன்றம் பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நேற்று காலை 8.45 மணிக்கு மேல் தாணுமாலயசாமி சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே கால் நாட்டு வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வட்ட பள்ளிமடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண் மடம் நித்ய காரிய யோகஸ்தானிகர் ஆதிசேஷன் நம்பூதிரி மற்றும் திலீபன் நம்பூதிரி, கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க நிர்வாகிகள், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை நாடக சங்க நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்