search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "matrimonial"

    • எண்ணிக்கையில் சுமார் 18,000 பேர் மட்டுமே உள்ளனர்
    • 16லிருந்து 20 வயது முடிவதற்குள் மகளை திருமணம் செய்து கொடுக்கின்றனர்

    ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா.

    இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர்.

    இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது.

    இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் 'டேட்டிங்' அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள்.

    எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை.

    தங்கள் இன பெண்களை 16லிருந்து 20 வயதிற்குள் தங்கள் இனத்திலேயே உள்ள ஆண் மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட விரும்புகிறார்கள்.

    இதற்காக வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஸ்டாரா ஜகோரா (Stara Zagora) எனும் பகுதியில் அந்த பெண்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பெற்றோருடன் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை தேர்வு செய்ய அங்கு அதே இனத்து ஆண்கள் தங்கள் பெற்றோருடன் வருகின்றனர்.

    இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தவுடன் அப்பெண்ணின் பெற்றோரின் சம்மதத்தை கேட்கின்ற சம்பிரதாயம் நடைபெறுகிறது.

    தங்கள் பெண்ணை மணமுடித்து கொடுப்பதற்கு ஈடாக அப்பெண்ணின் பெற்றோர் கேட்கும் தொகையை அவர்களிடம் அந்த இளைஞன் கொடுத்து திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார். இதற்கென இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்வில் சிறு வயதிலிருந்தே சேமிக்க தொடங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மணப்பெண்ணின் தோற்றம், உருவம், மணமகனின் வளமை போன்ற அம்சங்களை பொறுத்து பெண்ணின் பெற்றோர் பெறும் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அனேக பெண்கள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு கூட பெற்றோர் விடுவதில்லை.

    "ஜிப்சி பிரைட் மார்கெட்" என வட்டார மொழியில் அழைக்கப்படும் இந்த பழக்கத்தை குறித்தும், அம்மக்களின் வாழ்வை குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    • திருமண வலைதளம் மூலம் அவருக்கு ஒரு பெண் அறிமுகமானார்
    • அந்த பொறியாளர் ரூ.1 கோடிக்கு மேல் அந்த பெண்ணிற்கு அனுப்பினார்

    கர்நாடகாவின் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், பிரிட்டனில் வேலை செய்து வந்தார்.

    தொழில்முறை பயிற்சிகளுக்காக பெங்களூருவிற்கு வந்திருந்த அவர் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு திருமண வரன் தேடும் வலைதளத்தில் விவரங்களை பதிவு செய்து பொருத்தமான பெண்ணை தேடிவந்தார்.

    திருமண வலைதளம் மூலம் அவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். பொறியாளரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த அந்த பெண் தான் தந்தையில்லாமல் தாயுடன் மட்டும் வாழ்வதாக கூறியிருந்தார்.

    தாயின் அவசர மருத்துவ தேவைக்காக ஜூலை 2-ம்தேதி ரூ.1500 வேண்டும் என பொறியாளரிடம் கேட்டு பெற்று கொண்டார். மீண்டும் ஜூலை 4-ம் தேதி பொறியாளருடன் வீடியோ காலில் தொடர்பு கொண்டார்.

    அப்போது அந்த பொறியாளரின் ஆசையை தூண்டும் விதமாக ஆடையில்லாமல் தோன்றி, அவருடன் ஆபாசமாக உரையாடினார். ஆனால் அந்த உரையாடல்களை பொறியாளருக்கு தெரியாமல் தனது ஸ்மார்ட்போனில் பதிவு செய்து கொண்டார்.

    பிறகு, இந்த பதிவை பொறியாளருக்கு அனுப்பி, அவரின் பெற்றோருக்கு அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு பெரும் தொகை வேண்டும் என கேட்டு அவரை பிளாக்மெயில் செய்தார். இதனையடுத்து அந்த பொறியாளர் ரூ.1 கோடிக்கு மேல் அந்த பெண்ணிற்கு அனுப்பினார். அவள் தொடர்ந்து மிரட்டவே, ஒரு கட்டத்தில் அந்த பொறியாளர் காவல்துறையிடம் புகாரளித்தார். உடனே வழக்குப்பதிவு செய்த காவல்துறை அப்பெண்ணை தேடிவருகிறது.

    மொத்த தொகையில் சுமார் ரூ.30 லட்சம் வரை அப்பெண் ஏற்கனவே செலவழித்து விட்டார். மீதம் உள்ள சுமார் ரூ.84 லட்சம் மீட்கும் முயற்சியில் அப்பெண்ணின் வங்கி கணக்கை முடக்கி விட்டோம். ஒருவரை நேரில் சந்தித்து முழு விவரங்களும் அறியாமல் அலைபேசியிலேயே பேசி, இதுபோன்ற தொடர்புகளை வளர்த்து கொள்வதோ, பண பரிவர்த்தனைக்காக நம்புவதோ தவிர்க்கப்பட வேண்டும்.

    அதேபோன்று, மறுமுனையில் பேசுபவரின் நடவடிக்கைகள் சரியில்லையென்றாலும் உடனே தொடர்பை துண்டித்து கொள்ள வேண்டும் என இச்சம்பவம் குறித்து பேசும்போது வைட்ஃபீல்ட் பகுதி காவல்துறை துணை ஆணையர் கிரீஷ் தெரிவித்தார்.

    ×