search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor Jegan Periyasamy"

    • தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது.
    • பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் சென்று விடிய, விடிய அந்த பகுதிகளில் ஆய்வு நடத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. தூத்துக்குடி பி.அன்.டி. காலனி பகுதியில் உள்ள சில தெருக்களில் மழை நீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் சென்று ஆய்வு பணிகளை தொடங்கியவர் இரவு முழுவதும் விடிய, விடிய அந்த பகுதிகளில் சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்தினார்.

    அப்போது மழை நீர் வடிவதற்கு வசதியாக வடிகால்களில் அடைப்புகள் இருந்ததை கண்டு அதனை உடனடியாக அகற்றியும் வடிகால் இல்லாத தெருக்களில் புதிதாக பணிகள் முடிந்த வடிகால்களில் நீர் வருவததற்கு பாதை அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார். மேலும் அந்த பகுதியில் வடிகால்கள் இல்லாத இடங்களில் வரும் நாட்களில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். ஆய்வின்போது கவுன்சிலர் இசக்கிராஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

    • வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது உருவசிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அதனைத்தொடர்ந்து தூத்துக்குடிக்கு வந்த தி.மு.க. மோட்டார் சைக்கிள் பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    தூத்துக்குடி:

    வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது உருவ சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

    இதில் துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாள ரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், பகுதி செய லாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் மாரியப்பன், பொன்னப்பன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், தூத்துக்குடி - எட்டையாபுரம் ரோட்டில் சாலை ஓரத்தில் போக்கு வரத்திற்கும், மழை நீர் வடிகாலுக்குள் செல்வ தற்கும் இடைஞ்சலாக இருந்த மணல் திட்டுக்கள் அகற்றும் பணி, கிருஷ்ண ராஜபுரம் பகுதியில் நடை பெற்று வரும் புதிய வடிகால் மற்றும் தார் சாலை பணி களையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து தூத்துக்குடிக்கு வந்த தி.மு.க. மோட்டார் சைக்கிள் பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது மேயர் கூறுகை யில்,

    தமிழ்நாட்டின் மாநில உரிமை மீட்புக்காக தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் சேர்க்கும் விதமாக பேரணியாக செல்லும் 188 வாகன பேரணியை வரவேற்கிறோம் என்றார்.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞ ரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கர நாராயணன், ரவி, முகமது, வக்கீல் டி.டி.சி.ஆர்.பிரவின்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • என்.பெரியசாமி பொதுச்செயலாளராக இருந்தபொழுது சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
    • ஒவ்வொரு ஆண்டும் உங்களது கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்து அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களும் உங்களுக்கு பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியின் அடை யாளமும், பிரதான தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழி லாளர்கள், முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தாங்கள் சங்கத்தில் சேமித்த பணத்தை சங்கத்தின் பொது செயலாளர் என்ற முறையில் அவர்களுக்கு தீபாவளி போனஸாக மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்,

    போல்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    எனது தந்தை என்.பெரியசாமி பொதுச் செயலாள ராக இருந்த பொழுது சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்காக இத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனை இன்று வரை எனக்கு முன்பு இருந்த நிர்வாகிகளும், தற்போது நாங்களும் கடை பிடித்து வருகிறோம். ஓவ்வொரு ஆண்டும் கூலி உயர்வு சம்பந்தமாக உப்பள அதிபர்களிடம் சுமூகமாக பேசி பெற்றுக் கொடுத்தது போல எனது தந்தை என். பெரியசாமி வழியிலேயே நானும் ஒவ்வொரு ஆண்டும் உங்களது கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்து அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களும் உங்களுக்கு பெற்று உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    எனக்கு தி.மு.க.வும், தொழிலாளர்கள் நலனும் இரு கண்கள். அனைவரும் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட பொருளாளர் சுசீ ரவீந்திரன், பொது குழு உறுப்பினர் கோட்டுராஜா,செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிட பணிகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவை திறக்கப்பட்டது.
    • இதனை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அலுவலர்களுடன் நேரில் சென்று மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ஆவுடையார்புரம் மற்றும் ஜெயராஜ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிட பணிகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவை திறக்கப்பட்டது.

    இதனை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அலுவலர்களுடன் நேரில் சென்று மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களின் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி எழில் மிகு மாநகரமாக மாற்றம் கண்டு வருகிறது. பொதுமக்களின் தேவை மற்றும் கோரிக்கையை ஏற்றுக் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேயருடன் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • பரிசளிப்பு விழாவிற்கு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி பேசினார்.
    • வெற்றி பெற்ற தூத்துக்குடி எம்.எஸ்.எம். அணிக்கு முதல் பரிசாக கலைஞர் கோப்பையும், 50 ஆயிரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மீளவிட்டான் பெரியசாமி திடலில் நடை பெற்ற கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா விற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி பேசினார்.

    பரிசுக் கோப்பை

    இதில் மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் குருராஜ், மாதே ஸ்வரன், கணேசன், லவ ராஜா, டினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பா ட்டு அணி அமை ப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான வக்கீல் பாலகுருசாமி வரவேற்று பேசினார்.

    பின்னர் வெற்றி பெற்ற தூத்துக்குடி எம்.எஸ்.எம். அணிக்கு முதல் பரிசாக கலைஞர் கோப்பையும், 50 ஆயிரமும், வி.சி.சி. அணிக்கு 2-ம் பரிசாக கலைஞர் கோப்பையும், 30 ஆயிரமும், பொட்டல்காடு யு.எஸ்.சி. அணிக்கு 3-ம் பரிசாக கலைஞர் கோப்பையும், 20 ஆயிரமும், முள்ளக்காடு எம்.கே.சி.சி. அணிக்கு 4-ம் பரிசாக கலைஞர் கோப்பையும், 10 ஆயிரம் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

    சிறந்த விளையாட்டு வீரர்கள்

    மகளிர் அணியினருக்கும், தகவல் தொழில்நுட்ப அணியினருக்கும், இளைஞர் அணியினருக்கும் நடைபெற்ற சிறப்பு போட்டி யை தொடங்கி வைத்து அதில் வெற்றி பெற்றவ ர்கள், சிறந்த விளை யாட்டு வீரர்கள் அனை வருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நம்பி, மாநகர துணைச் செய லாளர்கள் கீதா முருகேசன், கனக ராஜ், பிரமிளா, மாவட்ட துணைச்செ யலா ளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, மாநகராட்சி மண்ட லத்தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சின்ன த்துரை, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தொண்டரணி அமை ப்பாளர் ரமேஷ், வக்கீல் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பா ளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, நாகராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை அமைப்பாளர் மகிழ்ஜான், இலக்கிய அணி அமை ப்பாளர் ஜீவன் ஜேக்கப், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாநகர மகளிர் அணி அமைப்பா ளர் ஜெயக்கனி, இளைஞர் அணி அமை ப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் சீதாராமன், துணை அமைப்பாளர் குமரன், தொழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில் குமார், கவுன்சி லர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், வைதேகி, இசக்கியப்பன், கந்தசாமி, சுப்புலட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்தி வேல், நாராயணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் செல்வகுமார், ராஜா, அன்பழகன், பிரதீப், சில்வெஸ்டர் சாமுவேல், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, சதீஷ்குமார், பகுதி பொரு ளாளர் உலகநாதன், பகுதி இளைஞர் அணி அமை ப்பாளர் சூர்யா, மகளிர் அணி ரேவதி, சத்யா, சந்தன மாரி, கன்னிமரியாள், பெல்லா மற்றும் கருணா, மணி, கணேசன், மகே ஸ்வர சிங், பிரபாகர், அல்பட் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். முடிவில் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோக்கிய ராபின் நன்றி கூறினார்.

    • மாநகராட்சிக்கான தேசிய விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ்குமாருடன்‌‌ இணைந்து பெற்றுக் கொண்டார்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தேசிய விருதை வழங்கி வாழ்த்து பெற்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பொரு ளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது பரிசுக்கு தேர்வாகி மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, மாநகராட்சிக்கான தேசிய விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ்குமாருடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை வழங்கி வாழ்த்து பெற்றார்.

    பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செய லாளர் கார்த்திகேயன், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி சிறக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இதன் மூலம் இந்தியாவிலேயே கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது.

    முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், நான் மாநகர மேயராக பொறுப்பேற்ற பின் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், மேற்கொள்ளப்பட்ட சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக இந்தியாவிலேயே 3-வது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. இதனைத் தமிழக முதல்-அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி மாநகராட்சியின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது.
    • இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத்திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022-ம் வருடத்திற்கான போட்டியில் இந்த விருதினை தூத்துக்குடி மாநகராட்சி பெற்றுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது பரிசுக்கு தேர்வாகியது.

    இந்திய அளவில் 3-வது இடம்

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, மாநகராட்சிக்கான விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமாருடன் இணைந்து பெற்றுக்கொண்டார். இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி யின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், மாநகர மேயராக நான் பதவியேற்ற பின்பு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    கல்விப் பணியில் சமூக பொருளாதார கட்டமைப்பின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம் ,சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை அடங்கிய சிறப்பான சூழலில் கையடக்க கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது இடம் பெற்று விருது மற்றும் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    தேசிய விருது

    இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத்திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022-ம் வருடத்திற்கான போட்டியில் இந்த விருதினை தூத்துக்குடி மாநகராட்சி பெற்றுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாநகர மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்களுடன் மழைநீர் தேங்கிய பகுதிகளை கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • பழைய மாநகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் பல்வேறு பகுதிகளிலுள்ள கழிவு நீர் ஏற்றும் உந்து நிலையங்களையும் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று பகலில் பெய்த திடீர் மழையால் சாலைகள், தெருக்களில் மழை நீர் பாய்ந்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்களுடன் மழைநீர் தேங்கிய பகுதிகளை கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆய்வின் போது கடந்த காலங்களில் மழை நீரினால் மிகவும் பாதிப்ப டைந்த பழைய மாநகராட்சி அலுவலகம், பிரையன்ட் நகர், அம்பேத்கர் நகர், எஸ்.கே.எஸ்.ஆர்.காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, ராஜீவ் நகர் போன்ற அநேக பகுதிகளில் மின் மோட்டார் இல்லாமல் புதிதாக கட்டிய வடிகால்களின் வாட்டத்தில் நீர் செல்வதால் அந்த பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக நீரானது அப்புறப்படுத்தப்பட்டும், சாலை ஓரங்களில் உள்ள கேட்ச் பிட்ஸ்ல் நீர் செல்வதற்கு வழி செய்யப்பட்டும் உள்ளது. வருங்காலங்களில் இதற்கும் தீர்வுகள் காணப்படும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றியினை தெரி வித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு வரை மழையினால் குளங்களாக காட்சியளித்த எஸ்.டி. பீட்டர் கோவில் தெரு இந்த ஆண்டு மழைநீர் தெரு க்களில் தேங்காமல் மாநக ராட்சி அமைத்த புதிய வடி காலில் தண்ணீர் சென்றது. இதற்காக அப்பகுதி மக்கள் மேயர் ஜெகன் பெரிய சாமியை சந்தித்து நன்றி தெரிவி த்தனர். பின்னர் பழைய மாநகராட்சி அலுவ லகத்தின் பின் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் மற்றும் கருத்தபாலத்தில் இருந்து பக்கிள் ஓடை செல்லும் வழியிலுள்ள மின்மாற்றியை இடம் மாற்றி வைப்பதற்கான இடத்தையும், பல்வேறு பகுதிகளிலுள்ள கழிவு நீர் ஏற்றும் உந்து நிலைய ங்களையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பகுதி செயலா ளரும், மாநகர கவுன்சிலருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், கவுன்சிலர் ரெக்ஸ்லின், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • செல்வநாயகபுரம் பகுதியில் புதிய வடிகால் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஆய்வின்போது பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் பேங்க் காலனி பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் புதிய சாலை பணிகள், செல்வநாயகபுரம் பகுதியில் புதிய வடிகால் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேயர் ஆய்வு

    இந்தப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது பணிகள் முறையாக மேற்கொள்ள ப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது தி.மு.க. வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், கவுன்சிலர் சந்திரபோஸ், வட்ட செயலாளர் முனியசாமி, மாநகராட்சி அதிகாரிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    மனிதாபிமான உதவி

    ஆய்வின்போது மேயருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பனிமய மாதா கோவில் திருவிழாவுக்கு ஊசி, பாசி விற்க வந்த நரிக்குறவர் இன முதியவர் செல்லப்பா (வயது80) என்பவர் ஜார்ஜ் ரோட்டில் திடீரென காலமானார். அவரது மனைவி இந்திரா தனது சொந்த ஊரான வள்ளியூருக்கு தன் கணவர் உடலை கொண்டு செல்வதற்கு அங்கு இருப்பவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டி ருப்பதாகவும், இதை பார்த்த தான் தகவலை தெரிவிப்பதாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி அந்த முதியவரின் உடலை கொண்டு செல்ல நடவடிக்கை மே ற்கொண்டார். இதனையடுத்து மேயரின் சொந்த செலவில் தனியார் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு அந்த முதியவரின் உடலை ஏற்றி வள்ளியூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் மேயருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • மாநகராட்சி சார்பில் ஓய்வு அறையுடன் கூடிய உணவு கூடம் அமைத்து தருமாறு மருத்துவமனைக்கு வரும் மக்கள் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
    • பழைய மாநகராட்சி முன்பிருந்து தருவை மைதான ரோடு வரை உள்ள மாநகராட்சி தெற்கு காட்டன் ரோடு பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலின் அருகில் மாநகராட்சி சார்பில் ஓய்வு அறையுடன் கூடிய உணவு கூடம் அமைத்து தருமாறு மருத்துவமனைக்கு வரும் மக்கள் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

    உணவுக்கூடம்

    இதனை தொடர்ந்து அந்த பகுதியினை கமிஷனர் தினேஷ்குமாருடன் நேரில் சென்று பார்வையிட்டு மேயர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் இங்கு ஓய்வு அறையுடன் கூடிய உணவு கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து பழைய மாநகராட்சி முன்பிருந்து தருவை மைதான ரோடு வரை உள்ள மாநகராட்சி தெற்கு காட்டன் ரோடு பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் பார்வை யிட்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

    கலந்து கொண்டவர்கள்

    ஆய்வின்போது முன்னாள் கவுன்சிலரும், வட்ட செயலாளருமான ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், எடின்டா, திரிக்டா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி ரூரல் பகுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் லூர்தம்மாள்புரம், ராஜீவ்காந்தி நகர் ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து 1-ம் கேட் மற்றும் சிவன் கோவில் பகுதியில் நடைபெறும் புதிய வடிகால் அமைக்கும் பணிகளையும் துறைசார்ந்த அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த வடிகால்கள் தூர்ந்து போய் நீர் செல்வதற்கு பெரும் தடையாக இருந்து வந்தது.

    எனவே தேவையான இடங்களில் கல்வெட்டுகள் அமைக்கவும் உத்தரவிட்டு ள்ளேன், இதனால் இனிமேல் இந்த பகுதியில் மழை நீர் தேங்காது என்று உறுதி அளிக்கிறேன் என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன்,ஜஸ்பார், மண்டல தலைவர் நிர்மல்ராஜ்,மாநகர கவுன்சிலரும், பகுதி தி.மு.க. செயலாளருமான சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, அந்தோணிமார்சுலின், முன்னாள் கவுன்சிலர் வட்டசெயலாளர் ரவீந்திரன், மாணவரணி சோமநாதன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • புதிய தார் சாலை பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது அவர் கூறுகையில், மாநகர் முழுவதும் மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த காலங்களில் மழையினால் மிகவும் பாதிப்படைந்த பகுதிகளான ஆர்.எஸ்.பி.ஆர். நகர ஹவுசிங் போர்டு மற்றும் கே.டி.சி. நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அலுவல ர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தற்போது இந்த பகுதிகளில் சாலை மற்றும் வசதிகள் செய்து கொடுத்து உள்ளோம். இதுபோல மாநகர் முழுவதும் மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வரு கிறோம் என்றார்.

    தொடர்ந்து கருத்த பாலம் அருகில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகள் நிறைவுற்றதால் சாலைக்கும், பாலத்திற்கும் இடையே கழிவு நீர் செல்லும் ஓடையின் இடையில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால் சுத்தப்படுத்தும் விதமாக சிறிய அளவிலான கல்வெட்டு அமைப்பதற்கும், மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதனை அகலப்படுத்தி தருவேன் என்று கூறியிருந்தேன்.

    தற்போது அந்த பணிகளும் விரைவில் ஆரம்பமாகும் என்று தெரி வித்தார்.இதனையடுத்து தூத்துக்குடி சிவன் கோவில், பெருமாள் கோவில் பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.மேயரின் தொடர் நடவடிக்கைக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர்.

    ஆய்வின் போது பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ், பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா, முன்னாள் மாமன்ற உறுப்பினரும், வட்ட செயலாளருமான ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ் குமார், மாநகராட்சி அதிகா ரிகள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×