search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சியில்  வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
    X

    மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்த காட்சி. அருகில் கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

    • தூத்துக்குடி மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
    • மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,பொதுமக்களும், வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும்,நிலுவையில் உள்ள, தொடங்கப்பட உள்ள பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கமிஷனர் தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்

    திட்டங்களைத் தொடங்கும் போது இருக்கும் ஆர்வம் அதனை நிறைவேற்றி முடிப்பது வரை தொடர்வதை உறுதிசெய்யவே ஆய்வுக் கூட்டங்கள் என்ற

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தலின்படி நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம் எந்த தொய்வும் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்கவும், இடையூறுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநகராட்சி அதிகாரி களுக்கும், துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும், ஓப்பந்ததாரர்களிடமும் வலியுறித்தினார்,

    கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்தாண்டு மழைநீரை தேங்க விடமாட்டோம். குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்படும் பிரை யண்ட்நகர், சிதம்பரநகர், ரஹ்மத்நகர், ஸ்டேட் பேங்காலனி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளிலும் முடிந்த அளவிற்கு மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,பொதுமக்களும், வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் படியும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.

    Next Story
    ×