என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mega Vaccination Camp"
- வருகிற 30-ந்தேதி மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.
- தமிழகத்தில் இதுவரை 5.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்திக் இதுவரை 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் 37-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது.
சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி வருகிற 30-ந்தேதி மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.
அதன்படி தற்போது 12 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும், முகாமில் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 5.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவுப் பெறுகிறது. அக்டோபர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, அக்டோர் முதல் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், தங்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று செலுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதுவரையில் 35 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் மூலம் 5 கோடியே 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
36-வது மெகா சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற முகாம்கள் மூலம் 12.28 லட்சம் பேர் பயன்அடைந்தனர்.
நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
இந்த முகாம்களை இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும் முகாம்களில் எல்லா தடுப்பூசிகளும் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன் எச்சரிக்கை என்னும் பூஸ்டர் தடுப்பூசி போட பொதுமக்களிடம் அதிக ஆர்வம் இல்லை. இந்த தடுப்பூசி வருகிற 30-ந்தேதி வரை இலவசமாக போடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் தொடருமா? இல்லையா? என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கால அவகாசத்திற்குள் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை கட்டணம் இல்லாமல் போட்டுக்கொள்ளலாம்.
சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், தங்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று செலுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
- தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து திண்டுக்கல்லில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
- அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகம் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சராசரியாக தினசரி பாதிப்பு 2000-க்கு அதிகமாக பதிவாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 30 முதல் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி வரை 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 19,21,688 நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 1,789,301 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 68,302 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 2.7 லட்சம் நபர்கள் 2-ம் தவணை செலுத்துவதற்குரிய தவணைதேதி கடந்த பின்னும் தடுப்பூசிசெலுத்தாமல்உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 11.7 லட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை தவணைதடுப்பூசி (3-வது தவணை தடுப்பூசி) செலுத்துவதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.
எனவே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று 2900க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பலர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதாலும், உயிரிழப்பை தடுப்பதை கருத்தில் கொண்டும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகம் தெரிவித்தார்.
- முதல் தவணையாக 3,53,000 பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
- இரண்டாவது தவணையாக 10,88,865 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் நேற்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 1 லட்சம் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 30 மெகா தடுப்பூசி முகாம்களில் 4 கோடியே 44 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, 12-14 வயதுயுடைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் 16-03-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (10-07-2022) 18,94,484 (89.32%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 13,07,217 (61.63%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 15-17 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 03-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (10-07-2022) 30,23,682 (90.37%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 25,05,819 (74.89%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டம் 10-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (10-07-2022) மொத்தம் 18,05,929 (5.03%) பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (10-07-2022) நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 17,55,364 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 3,53,000 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 10,88,865பயனாளிகளுக்கும் மற்றும் 3,13,499 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்.
இதில் திருச்சி மாவட்டத்தில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதர மாவட்டங்களில் சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேலும், மாநிலத்தில் இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப டுகின்றனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றானது ஜனவரி மாதம் ஏற்பட்ட 3ம் அலைக்குப் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப டுகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒருவாரமாக தொற்று அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 15 நபர்களுக்கு தொற்று ஏற்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணைதடுப்பூசி 19,17,602 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 17,53,133 நபர்க ளுக்கும் செலுத்தப்பட்டு ள்ளது. இத்துடன் 35,520 நபர்களுக்கு முன்னெச்ச ரிக்கை தவணை செலுத்த ப்பட்டுள்ளது.
எனினும், திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை செலு த்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் மற்றும் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட 15,000 சிறார்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர். மேலும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர். மேலும் மாவட்டம் முழு வதும் 2.5 லட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை செலுத்து வதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்கு நாளை (10-ந் தேதி) தமிழகம் முழுவதும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களது தவணைக்குரிய தடுப்பூசி செலுத்தி க்கொண்டு நோய்த்தொ ற்றின் கடுமையான பாதிப்பு களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
- கடந்த மே மாதம் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
- இந்த முகாமில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
சென்னை:
இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதற்காக வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை 28 சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த நிலையில் கடந்த மே மாதம் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமின் போது பூஸ்டர் தவணை தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க அவர் அறிவுறுத்தி உள்ளார்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காஞ்சிபுரம்:
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸால் BA4, BA5 strain மூலம் மக்களுக்கு கொரோணா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் தமிழக முதல்வரின் ஆணையின்படி, இன்று 12 ம் தேதி சிறப்பு மாபெரும் ஒருநாள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2118 நடமாடும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்த போதிலும், 12 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 77.02 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அவர்கள் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
15 மாவட்டங்களுக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி 80 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேல் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருக்கிறது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிற 12-வது மெகா தடுப்பூசி முகாமுக்கு பிறகு, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறும். மேலும், இனி வாரத்துக்கு ஒரு முறை தடுப்பூசி முகாமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 920 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4,527 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 573 பேர் தற்போது சிகிச்சையில் இருக்கின்றனர்.
கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாமை அரசு நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 11-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது. இதற்காக 50 ஆயிரம் மையங்கள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்