search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Menaka"

    • முதல்முறையாக தனது காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.
    • வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

    இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் முதல்முறையாக தனது காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.

    கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
    • கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

    இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ந் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் தன்னுடைய பள்ளி தோழரை திருமணம் செய்யவுள்ளதாக வதந்தி பரவி வந்தது.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தொடர்ந்து தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.


    கீர்த்தி சுரேஷ்

    இவர் அடுத்ததாக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அவரது பள்ளி தோழரை பத்தாண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளில் நடைபெறவுள்ளதாகவும் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் பரவி வந்தது.


    மேனகா - கீர்த்தி சுரேஷ்

    இந்நிலையில், இந்த செய்தி குறித்து கீர்த்தி சுரேஷின் தாயார் நடிகை மேனகா, "பரபரப்புக்காகக் கிளப்பி விடப்படும் செய்தி இது. இது மாதிரி வெளியாகிற எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட நாங்கள் விரும்புவதில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோஷியல் மீடியா தீனிக்கு எங்களுடைய பதில் இதுதான்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்து பெரிய படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில், தனது ஆசை என்பதை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தியுள்ளார். #KeerthySuresh
    நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேசின் மார்க்கெட் ஏறிவிட்டது. முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் அவருக்கு தனி கதாநாயகிகளுக்கான வாய்ப்புகளும் கதவை தட்டுகின்றன. அவரது நடிப்பில் அடுத்ததாக சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றன.

    இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது ஆசை என்று ஒன்றை குறிப்பிட்டிருக்கிறார். அக்கா டைரக்டு செய்ய, அப்பா தயாரிக்க, பாட்டி, அம்மாவுடன் தானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.



    கீர்த்தியின் தந்தை சுரேஷ் தயாரிப்பாளர். தாய் மேனகா ரஜினியுடன் புதுக்கவிதை படத்தில் நடித்தவர். பாட்டி தாதா 87, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் ஆசை நிறைவேற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர். #KeerthySuresh

    ×