search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mentally challenged"

    • திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை சுருங்கிவிட்டது.
    • குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள்

    திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என பல பெண்கள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே தங்களின் வாழ்க்கையை சுருக்கிக்கொள்கிறார்கள். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திரும்பி பார்க்கும் போதுதான், தாங்கள் தனிப்பட்ட முறையில் செயல்படுவதற்கும், சமூகத்துக்காக பங்களிப்பதற்குமான தேவைகள் இருப்பதை உணர்கிறார்கள். அவ்வாறு உணர்ந்து திருமணம் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு, சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் சாதனா தர்மராஜ், அவருடன் ஒரு சந்திப்பு.

    நான் சிவகாசியில் வசித்து வருகிறேன். கல்லூரிப் படிப்பை முடிந்தவுடன் எனக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு குடும்பம், குழந்தைகள் என நாட்கள் அப்படியே நகர்ந்தன. ஒரு கட்டத்தில். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. சற்று சிந்தித்துப் பார்த்தேன். அப்போதுதான் நமக்கான அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

    எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்துவது, பள்ளிகளில் ஊக்கமளிக்கும் பயிற்சி பட்டறைகள் நடத்துவது என குழந்தைகள் தொடர்பான பணிகளை செய்து வந்தேன். அந்த சமயத்தில்தான், ஒருநாள் என் நண்பர்களுடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர் காப்பகத்திற்கு சென்றேன்.

    அங்கு எனது கண்முன்னே ஒரு சிறுவனுக்கு வலிப்பு வந்து, என் மடியில் வந்து விழுந்தான். அந்த சம்பவத்திற்கு பிறகுதான் சிறப்பு குழந்தைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அவர்களுக்கான சிகிச்சைகள் பற்றி எனக்குள் ஏராளமான கேள்விகள் எழுந்தன.

    இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டபோது `சிவகாசியில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு போதுமான வசதிகள் எதுவும் இல்லை' என்றார்கள். இந்த குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள்ளேயே உறுதி எடுத்தேன்.

    அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் அனைத்தையும் நேரடி மற்றும் இணைய வகுப்புகள் மூலமாக கற்றறிந்தேன். தற்போது இந்த துறையில் மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறேன்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில் பேசுவதில் பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும் அந்த குறையாடுகளை கூர்மையாக கவனித்து கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். இது சற்றே சவாலான காரியம் தான்.

    ஆனால் பயிற்சிக்குப் பிறகு அந்த குழந்தைகளின் வளச்சியையும், அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது அந்த சால்கள் ஒரு பொருட்டாகவே தோன்றாது. குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள் இந்த அன்புதான் என்னை தொடர்த்து புத்துணர்வுடன் இயங்க வைக்கிறது. எனது செயப்பாடுகளுக்காக புதுமைப்பெண் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளேன்" என்றார்.

    • மதுரையில் ரோட்டோரத்தில் தூங்கிய வாலிபரை மிதித்து கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அவர் பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்

    மதுரை

    மதுரை அனுப்பானடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சரவணன் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இல்லாமல் வெளியே சுற்றுவது வழக்கம். சாப்பிட மட்டும் வீட்டுக்கு வரும் சரவணன் இரவு நேரங்களில் ரோடுகளில் சுற்றி அழைந்து பிளாட்பாரங்களிலேயே தூங்கி விடுவாராம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் தவிட்டுச்சந்தை ரோட்டோ ரத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் அங்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கொலை செய்தது யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    அப்போது அவர் பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் சரவணன் ரோட்டோரத்தில் தூங்கியிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் சரமாரியாக மிதிப்பது பதிவாகி உள்ளது. வலியால் துடித்த சரவணன் சிறிது நேரத்தில் பேச்சு மூச்சின்றி கிடப்பதும் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் கொலை செய்த நபரை தேடி வருகின்றனர்.

    சரவணனை கொலை செய்த நபரும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

    • கணேஷ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • பெண்ணின் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மூங்கில் தொழுவு பகுதியைச்சேர்ந்தவர் கணேஷ்(வயது55). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணின் 24 வயது மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

    தாயுடன் அடிக்கடி தோட்டத்துக்கு வந்துள்ளார்.அப்போது கணேஷ் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பம் அடைந்த அந்த பெண்ணின் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு சம்பவம் குறித்து விசாரித்து தெரிந்து கொண்ட டாக்டர்கள் அது குறித்து உடுமலை மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து உடுமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    காஞ்சீபுரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த வேளியூர் கிராமம், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன் (வயது 21). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

    இவர் அடிக்கடி அருகில் இருக்கும் வீடுகளை தட்டி வந்தார். மேலும் அவ்வழியே செல்பவர்களிடமும் சம்பந்தம் இல்லாமல் பேசி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கோவிந்தராஜன், பக்கத்து தெருவில் வசிக்கும் தொழிலாளி வேலாயுதம் என்பவரது வீட்டை தட்டி கூச்சலிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வேலாயுதம் அருகில் கிடந்த கட்டையால் கோவிந்தராஜனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவிந்தராஜன் இறந்தது பற்றி அறிந்ததும் வேலாயுதம் தப்பி ஓடி விட்டார். அவரை காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    ×