search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merina"

    சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விலகியதால் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ரூ.50 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக கூறினார். 

    இதனை அடுத்து, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
    மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiDeath #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் நேற்று அடக்கம் செய்யப்படது. சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சமாதிக்கு மேலே தற்காலிகமாக கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்த ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அவரது சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    அவர்கள் அஞ்சலி செலுத்தும் நேரத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்து சமாதியில் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #Karunanidhideath #DMK
    புதுடெல்லி:

    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக சார்பில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசு அதனை மறுத்து கிண்டியில் உள்ள காமராஜர் மண்டபத்தில் இடம் ஒதுக்குவதாக அறிவித்தது.

    அரசின் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக முறையிட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.

    ஆனால், சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட், கருணாநிதியின் இறுதி சடங்குக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மனுவாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அவரை அறிவுறுத்தினர். #Karunanidhideath #DMK #SupremeCourt
    ×