என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mid-Elections"
- 'இடைத்தேர்தல் முடிவுகள் மக்களிடம் பாஜகவால் உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் குழப்பத்தின் வலையை உடைத்தெறித்துள்ளது'
- 'பாஜகவின் ஆணவம், முறையற்ற நிர்வாகம் மற்றும் எதிர்மறை அரசியலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்'
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதி உட்பட மேற்கு வங்காளம் (4), இமாச்சல பிரதேசம் (3), தமிழ்நாடு (1), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), பீகார் (1), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகிறது. இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வென்று பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா கூட்டணி இடைத்தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மற்றும் எதிரிகட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,'7 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் மக்களிடம் பாஜகவால் உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் குழப்பத்தின் வலையை உடைத்தெறித்துள்ளது. நாட்டின் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் சர்வாதிகாரத்தை அளித்து நியாயத்தின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகின்றனர். அந்த வகையில் மக்கள் அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்புக்காக இந்தியா கூட்டணியின் பக்கம் நிற்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், 'இடைத்தேர்தல் முடிவுகள் மோடி மற்றும் அமித் ஷாவின் அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை நிரூபிக்கும் தக்க சான்றாகும். இந்த வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி, கடுமையாக சூழல்களையும் முறியடித்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு தலை வணங்குகிறேன். பாஜகவின் ஆணவம், முறையற்ற நிர்வாகம் மற்றும் எதிர்மறை அரசியலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது' என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், 'இந்த தேர்தல் வெற்றி பாஜகவுக்கு மறக்க முடியாத படத்தை கற்றுக்கொடுத்துள்ளது. பாஜக ஏற்படுத்திய வேலையின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்பு அரசியல் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, 'நிகழ்காலத்தையும் மூலம் வருங்காலத்துக்கான தீர்க்கமான பார்வையையும் கொண்டுள்ள நேர்மறை அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இளைய இந்தியாவின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் உழைப்பவர்களாக நாங்கள் இருப்போம்' என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்