search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "millitants"

    நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.  இந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும்டையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சிறிய நகரமான கொண்டுகா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், அல்லு டாம் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் சில மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த ராணுவ வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைகு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்பினருக்கும் ராணுவத்திற்குமிடையே ஏற்பட்ட சண்டையில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #NigeriaBokoHaramAttack
    லாகோஸ்:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் நைஜீரியாவின் பனி யாட் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளத்தின் மீது போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர். 4 துப்பாக்கி டிரக்குகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து தாக்கினர்.  இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினர் பதில்  தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவம் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து பயங்கரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை ராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

    முன்னதாக, கடந்த 15ம் தேதி மைதுகுரியில் உள்ள மசூதியின் அருகில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்த அமைப்பைச் சேர்ந்த 3 தற்கொலை படையினர், உட்பட 11 பேர் பலியாகினர்.

    போகோ ஹராம் அமைப்பு ஆப்பரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த அமைப்பு 2009ம் ஆண்டு நைஜீரியாவின் அரசினை எதிர்த்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. #NigeriaBokoHaramAttack

    பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் போரின் மூலம் கிளர்ச்சியாளர்கள் உட்பட இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    வாஷிங்டன்:

    2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக செயல்பட்டது.

    இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்திய அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மக்கள் நல நிறுவனமான வாட்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்பு போர் நடவடிக்கை மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் முதல் 5 லட்சத்து 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.



    கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படையினர், ராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆய்வில் அடங்குவர் என்றும், மிக துல்லியமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது எனவும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 272 முதல் 2 லட்சத்து 04 ஆயிரத்து 575 பொதுமக்கள் இந்த போர் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அதேபோல், 38 ஆயிரத்து 480 பொதுமக்கள் ஆப்கானிஸ்தானிலும், 23 ஆயிரத்து 372 மக்கள் பாகிஸ்தானிலும் கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டில் பள்ளிக்கூடத்திலிருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். #StudentsKidnap #CameroonKidnap
    யவுன்ட்:

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேரும், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவரும் கடத்தப்பட்டனர்.

    கடத்தப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? எதற்காக கடத்தப்பட்டார்கள் என்பது குறித்து எந்த வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு இருந்தது.



    இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் 78 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஓட்டுனரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் கடத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை விடுதலை செய்யாமல் இன்னும் பயங்கரவாதிகள் தங்கள் பிடியிலேயே வைத்துள்ளனர்.

    அவர்களை கடத்தியதற்கான காரணம் மற்றும் பயங்கரவாதிகளின் கோரிக்கை குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. #StudentsKidnap #CameroonKidnap
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதல்களில் பல பயங்கரவாதிகளும் பலியாகின்றனர்.

    இந்நிலையில், ஜஜார் கோட்லி என்ற பகுதியில் நேற்று காரில் வந்த பயங்கரவாதிகள் வனத்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால், அப்பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    2 நாட்களாக நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையில் இன்று மதியம் பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு, கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #JammuKashmir
    ×