search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Miss Universe Korea"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோய் சூன்-ஹ்வா தனது வெள்ளை முடி மற்றும் இளமை உணர்வுடன், சக போட்டியாளர்களிடையே தனித்து நிற்கிறார்.
    • சோய் மாடலிங்கில் வெற்றிகரமான வாழ்க்கையை தொடர்ந்தார்.

    தென்கொரியாவை சேர்ந்த 80 வயதான மாடல் அழகி சோய் சூன்-ஹ்வா மிஸ் யுனிவர்ஸ் கொரியா போட்டியில் மிகவும் வயதான போட்டியாளர் என்ற வரலாறு படைத்துள்ளார்.

    சோய் சூன்-ஹ்வா தனது வெள்ளை முடி மற்றும் இளமை உணர்வுடன், சக போட்டியாளர்களிடையே தனித்து நிற்கிறார். பல தசாப்தங்கள் இளையவர். ஆனால் அவர் வயது வெறும் எண் என்பதை நிரூபிப்பதில் உறுதியாக இருக்கிறார்.

    1952ம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு 1943-ல் சோய் பிறந்தார். வரும் நவம்பரில் மெக்ஸிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டியில் தென் கொரியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் சரித்திரம் படைக்க உள்ளார். அவர் திங்கட்கிழமை உலக அழகி கிரீடத்திற்காக 31 பெண்களுடன் போட்டியிடுகிறார்.

    வயதான போதிலும் சோய் தனது திறன்களில் நம்பிக்கையுடன் இருக்கிறார். மற்றும் வரவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ள உற்சாகமாக இருக்கிறார்.

    80 வயதான ஒரு பெண்மணி எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்? அந்த உடலை அவள் எப்படி பராமரித்தாள்? உணவு முறை என்ன? என உலகையே திகைக்க வைக்க விரும்புகிறேன் என்று சோய் சூன்-ஹ்வா கூறினார்.

    சோய் மாடலிங்கில் வெற்றிகரமான வாழ்க்கையை தொடர்ந்தார். தனது 50 வயதில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். மருத்துவமனை பராமரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஒரு நோயாளியின் ஊக்கத்தால், 72 வயதில் அவர் மீண்டும் மாடலிங் பயிற்சியைத் தொடங்கி உள்ளார்.

    முதன்முறையாக வயது கட்டுப்பாடுகளை நீக்கி அனைத்து வயது பெண்களுக்கும் கதவுகளைத் திறந்திருக்கும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் நான் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று சோய் கூறினார்.

    ×