search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing college student"

    • சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஆசாரி மார் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகள் பரமே ஸ்வரி (வயது 18).

    தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் தாயுடன் ஏற்பட்ட தகராறில் மாயமான கல்லூரி மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் மகள் வாழைசிவந்தி (வயது19). தந்தை இறந்து விட்டதால் தாய் ஈஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் வாழைசிவந்தி அடிக்கடி கோபித்துக் கொண்டு வெளியே சென்று விடுவார். சம்பவத்தன்றும் தாயுடன் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த வாழைசிவந்தி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழைசிவந்தியை தேடி வந்தனர்.

    இன்று காலை ஆர்.எம். காலனி 12-வது கிராஸ் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று விசாரித்தபோது அந்த இளம்பெண் மாயமான வாழைசிவந்தி என தெரிய வந்தது.

    உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செவ்வந்தி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொன்று கிணற்றில் வீசி சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மாய மானார்கள். அவர்கள் கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன். இவரது மகள் ஜெனிபர் ஷிமா (வயது 21). அந்தப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த 9-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற ஜெனிபர் ஷிமா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார். அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் தாரணி (19). இவர் நத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த 8-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற தாரணி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி திருமால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ரேவதி (23), இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கருப்பையா திண்டுக்கல் சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரேவதியை காணவில்லை.

    இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சியில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திராநகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் வனஜா (வயது 19). இவர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு வணிகவியல் துறை படித்து வருகிறார். 

    இவர் தினமும் பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று அதே போல் கல்லூரி செல்வதாக கூறி விட்டு தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வர வில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் வனஜா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை  கண்ணன் எடமலைப் பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குபதிவு செய்து மாணவி வனஜாவை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். 

    ஆலங்குடி அருகே மாயமான இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திலாஸ்பேட்டையில் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மாயமானார்.

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அதே பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மகள் ஆர்த்தி (வயது19). இவர் பாக்குமுடையான்பட்டில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று ஆர்த்தி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் ஆர்த்தி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஆர்த்தி கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஆர்த்தி இல்லை.

    இதைத்தொடர்ந்து ஏழுமலை தனது மகள் மாயமானது குறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    ×