search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing son"

    சீனாவில் 1994-ம் ஆண்டு தவறவிட்ட தன் மகனை நாடு முழுவதும் தேடி அலைந்த தந்தை, 24 வருடங்களுக்கு பிறகு டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டு பிடித்துள்ளார்.
    பீஜிங்:

    சீனாவைச் சேர்ந்த லி சன்ஜி என்பவர் 1994-ம் ஆண்டு தனது 3 வயது மகனை தவறவிட்டார். இதனையடுத்து தனது தொழிலை கைவிட்டுவிட்டு, நாடு முழுவதும் பயணித்த லி சன்ஜி, சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் காணவில்லை போஸ்டர்களை உபயோகித்தபடி, தன் மகனை தேடி அலைந்துள்ளார்.

    24 வருடங்களாக தனது முயற்சியில் தளராத அந்த தந்தை, தற்போது தனது 27 வயதான மகன் லி லேவை கண்டறிந்துள்ளார். இறுதியில் டி.என்.ஏ பரிசோதனை மூலம் லி சன்ஜியின் மகன் என உறுதியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பான விசாரணையில், 3 வயதில் லி லே தனியாக இருந்தபோது அவனை கண்ட தம்பதியினர் அவனது பெற்றோரை தேடி அலைந்ததாகவும், பெற்றோர் கிடைக்காததால், லி லேவை அவர்களுடன் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 வயதில் தவறவிட்ட தனது மகனை, தொழில் உட்பட அனைத்தையும் இழந்துவிட்டு, தேடி அலைந்து 24 வருடங்களுக்கு பிறகு கண்டறிந்த தந்தையின் பாசம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
    ×