என் மலர்
நீங்கள் தேடியது "mission chapter 1"
- அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.
- இப்படத்திற்கு திரையரங்குகளில் அதிக ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் 12-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது. 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில், இயக்குனர் விஜய் பேசியதாவது, எங்கள் எல்லோருக்கும் சிறப்பான வருடம் இது. படம் வெளியாகும்போது எங்களுக்கு திரையரங்குகள் குறைவாகவே கிடைத்தது. இரண்டு பெரிய படங்கள் வருகிறது எனும்போது எங்களுக்கு அப்படி அமைந்து விட்டது. எங்கோ பிரிவியூ ஷோ போவது போலதான் இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியான ஒரு ஃபீல் கிடைக்கவே இல்லை. ஆனால், படத்தில் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்து நீங்கள் புஷ் செய்வதுதான் படத்தை இன்னும் அதிக பார்வையாளர்களுக்குக் கொண்டு போகும் என மோகன் சார், விஜயகுமார் சார் சொன்னார்கள். அதன்படிதான் நாங்கள் நடந்து கொண்டு வருகிறோம்.

படத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல லைகா சரண் சார், சுரேஷ் சந்திரா சார், ஷ்யாம் சார் என அனைவரும் சேர்ந்து உழைத்தோம். படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு தானாகவே ஸ்கிரீன் அதிகப்படுத்தினார்கள். இன்றைய தேதியில் நிறைய திரையரங்குகளில் நிறைய ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் மீது அந்த நம்பிக்கையை கொடுத்த மீடியா விமர்சனங்களுக்கு நன்றி. இப்போதுதான் எங்களுக்கு முதல் வாரம் போல. நீங்கள் அடுத்தடுத்து கொடுக்கும் ஆதரவுதான் எங்களை இன்னும் அடுத்துச் செல்லும். என்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து வேறொரு ஜானரில் நான் செய்திருக்கும் படம் இது. பட்ஜெட் பெரிதாகத் தேவைப்படுகிறது எனச் சொன்னபோது, அதற்கு முழு ஆதரவுக் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் லைகாவுக்கும் நன்றி. அந்த அளவுக்கு படத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

'அச்சம் என்பது இல்லையே' என இருந்த படத்தின் டைட்டிலை 'மிஷன்' என மாற்றி அனைத்து மொழிகளுக்கும் எடுத்துச் சென்ற லைகா சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ்க்குமரனுக்கும் நன்றி. படப்பிடிப்பில் செட் பலமுறை விழுந்து, மீண்டும் அதை உருவாக்கினோம். இப்படி படப்பிடிப்பில் இருந்து ரிலீஸ் வரை பல சிக்கல்கள் எங்களுக்கு இருந்தது. அதற்கெல்லாம் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். படத்திற்கு பாசிட்டிவான ஆதரவு கொடுத்து எடுத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பெரிய பலம். அருண் விஜய் சார், இயல், அபிஹாசன், ஏமி, நிமிஷா, பரத், சரவணன், ராமலிங்கம் மேஸ்திரி என அனைவருக்கும் நன்றி. படம் இன்று இவ்வளவு பெரிதாகதெரிய இவர்கள் தான் காரணம். படத்தில் முக்கியமான விஷயம் கதைதான். அதை கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் சார் குதிக்கும் காட்சி ஒன்று வரும். அது சிஜி கிடையாது. டூப் போடாமல் அவரே செய்தார். அது மேஜிக் போல நடந்துவிட்டது. அந்தத் தருணங்களில் எங்களுக்கு பாதுகாப்பைச் சரியாக செய்து தந்த செல்வா மாஸ்டருக்கு நன்றி. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் மீண்டும் நன்றி என்றார்.
- ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது.
- ‘அயலான்’ திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் வாரத்தில் முதல் இடத்தை பிடித்தது.

இதையடுத்து, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் இதே தேதியில் வெளியாகி இரண்டாம் இடத்தை பிடித்தது. தொடர்ந்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மிஷன் சாப்டர் -1' மூன்றாவது இடத்தையும், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மெரி கிறிஸ்துமஸ்' நான்காம் இடத்தையும், இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்த 'ஹனு-மான்' ஐந்தாம் இடத்தையும் பிடித்தது.

இந்நிலையில், இரண்டாவது வாரம் நிலவரப்படி, 'அயலான்' திரைப்படம் முதல் இடத்தையும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் இரண்டாம் இடத்தையும், 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் மூன்றாவது இடத்தையும், 'ஹனு-மான்' திரைப்படம் நான்காம் இடத்தையும், 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.
- ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.
- ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்கவிடுகிறார்.
பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம். அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம். இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ், ஹனுமான் மற்றும் மிஷன் சாப்டர்-1 ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.

பொதுவாக படத்தில் சண்டை என்றால் ஹீரோவுடன் ஒருவர் அல்லது நான்கு பேர் மோதலாம் இதில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படத்தில் சண்டை காட்சிகள் பின்னி எடுத்திருக்காங்க என்றும், சண்டைக் காட்சிகள் மிகப்பிரமாண்டமாக இருக்கின்றது என்றும் சொல்கிறார்கள்.
இப்படத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்கவிடுகிறார். இதற்கு காரணம் சண்டை பயிற்சி இயக்குனர் 'ஸ்டண்ட் சில்வா தான்.

ஸ்டண்ட் சில்வா, இவர் இந்திய சினிமாவில் ஒரு மிக சிறந்த ஸ்டண்ட் இயக்குனர், ஸ்டண்ட் நடிகர், மற்றும் திரைப்பட இயக்குனரும் ஆவார். இந்தியாவின் மிக சிறந்த வெற்றிபட இயக்குனரான எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளி வந்து ஆக்ஷனில் மிகப்பெரிய வெற்றி அடைந்த 'எமதொங்கா' படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்கனராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, பெங்காலி மற்றும் சிங்களம் என பல மொழிகளில் 300 படங்களுக்கு மேலாக சண்டைபயிற்சியாளராக பணியாற்றி பல அரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களில் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அஜித் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ஸ்டண்ட் சில்வா. பிறகு அதே அஜித்துடன் அருண் விஜய் நடிக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம் சும்மா திரையில் அதிர வைத்திருப்பார். இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் நடிகர் அருண் விஜய் தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருவதற்கு இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.

ஸ்டண்ட் சில்வா தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் 'சித்திரை செவ்வானம்' சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளியான இப்படம் அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகப்பெரிய எமோஷனல் வெற்றி படமாக அமைந்தது.
இத்திரைபடத்தின் மூலமாக சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும் சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்பதை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு ஏற்கனவே ஒப்புக்கொண்ட பல படங்களில் ஸ்டண்ட் இயக்குனர் பணி இருந்ததால் உடனே படங்கள் இயக்க முடியவில்லை.

இந்நிலையில், ஸ்டண்ட் சில்வா இந்த 2024-ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான சூப்பரான அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை இயக்க போகிறார். இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.