search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stailn"

    • ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக உமர் அப்துல்லா பதவி ஏற்றார்.
    • அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பொறுப்பேற்ற உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியை என் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

    இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும், வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம், வெற்றி காண்போம் என தெரிவித்துள்ளார்.

    • இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகமெங்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது.
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு, தமிழ்நாடு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டிரஸ்ட் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.

    இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகமெங்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாழ்வியல் முறைகளான சரியான உடல் எடையை பராமரித்தல், முறையான தொடர் உடற்பயிற்சி, புகையிலை மற்றும் மது வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல், புற்றுநோய் முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வின்போது, அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவப் பணிகள் இயக்குநர் வெங்கடாசலம், இரைப்பை குடல் நிபுணர் மற்றும் துறைத் தலைவர் கே.ஆர். பழனிசாமி, இரைப்பை குடல் மருத்துவ ஆலோசகர்கள் பி.பிரம்மநாயகம், கார்த்திக் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×