search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLA opening"

    • மேலூர் அருகே பயணிகள் நிழற்குடை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் ஊராட்சி ஒன்றியம் வண்ணாம்பாறைபட்டி ஊராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    இதில் மேலூர் யூனியன் தலைவர் பொன்னுசாமி, வண்ணாம்பாறைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமாரி மகாராஜன், துணைத் தலைவர் சின்ன கருப்பு, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், யூனியன் பொறியாளர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன், உறங்கான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெள்ளலூர் இளங்கண்ணன், கோட்டநத்தம்பட்டி கந்தப்பன், கிடாரிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே தும்பைபட்டி ஊராட்சியில் சமுதாய கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • கனிமம் மற்றும் குத்தகை நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சமும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.

    மேலூர்

    கொட்டாம்பட்டி ஒன்றியம் தும்பைபட்டி ஊராட்சியில் உள்ள தாமரைப்பட்டியில் மேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சமும், கனிமம் மற்றும் குத்தகை நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சமும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் வளர்மதி குணசேகரன், முன்னாள்தலைவர் வெற்றிச்செழியன், தும்பைபட்டி ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பொண்ணு முருகன், ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னகரம்பட்டி பழனிதுரை, மேலவளவு விஜயராகவன், கிடாரிப்பட்டி சுரேஷ், தலைமை கழக பேச்சாளர் மலைசாமி, அட்டப்பட்டி கந்தன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், சமூக ஆர்வலர் தேவராஜ், தெற்கு ஒன்றிய பாசறை தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ஒப்பந்ததாரர் முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, ராமதாஸ், விஜயக்குமார், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கோபி, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், வட்டசெயலாளர் அருண்குமார் தங்கவேலு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளியில் புதிய வகுப்பறையை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் உள்ள கல்வி நிறுவனத்தின் நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறைகள் ரூ.22 லட்சம் மதிப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது.

    இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தெய்வநாயகம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர். செந்தில்ராஜன், டி.எஸ்.ஆர். ராஜ்கிரண், ஜீவா ரவி, பொன்.சேர்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மேட்டூர் ரோடு மற்றும் சத்தி ரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தரைமட்டப்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கருங்கல்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
    ×