search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammed Bin Salman"

    • இந்தியா-சவுதி அரேபியா இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது.
    • இந்தியாவின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா உள்ளது.

    ரியாத்:

    சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் அடுத்த மாதம் மத்தியில் இந்தியா வரவுள்ளார்.

    அடுத்த மாதம் 15, 16-ந்தேதிகளில் ஜி-20 நாடுகள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் நடக்கிறது.

    ஜி-20 மாநாட்டில் பங்கேற்க செல்லும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வழியில் இந்தியாவுக்கு வருகிறார்.

    கடந்த மாதம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று சவுதி இளவரசர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சவுதி இளவரசரின் இந்திய பயணத்தின் போது இரு நாடுகள் இடையே எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடியும்-சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா-சவுதி அரேபியா இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது. இந்தியாவின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 18 சதவீதம் சவுதியில் இருந்து இறக்குமதி செய்கிறது.

    சவுதி அரேபியா இளவரசர், கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்தார். தற்போது உக்ரைன்-ரஷியா போர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் சவுதி அரேபியா இளவரசரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
    • பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.

    ரியாத் :

    உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார்.

    அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

    குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி பாலின சமுத்துவத்தை ஏற்படுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சவுதி அரேபியாவின் பிரதமராக மன்னர் சல்மான் நியமித்துள்ளார். அதோடு நாட்டின் மந்திரிசபையையும் மன்னர் மாற்றியமைத்துள்ளார்.

    அதன்படி முகமது பின் சல்மானின் இளைய சகோதரரும், இளவரசருமான காலித் பின் சல்மான், ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் துணை ராணுவ மந்திரியாக இருந்து வந்தார்.

    இதனிடையே பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தாலும், மந்திரிசபை கூட்டங்களுக்கு மன்னர் சல்மான்தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு, 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இன்று இந்தியா வருகிறார். #SaudiArabiaCrown #MohammedBinSalman
    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு, 2 நாள் பயணமாக சல்மான் இன்று இந்தியா வருகிறார்.

    டெல்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.



    பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறினார். சவுதி பட்டத்து இளவரசரிடம் பாகிஸ்தான் ஊக்குவிக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி இந்தியா எடுத்துரைக்கும் என்று தெரிகிறது. #SaudiArabiaCrown #MohammedBinSalman

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2 நாள் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக டெல்லி வரும் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

    பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறினார். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
    நியூயார்க்:

    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது.

    இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த மாதம் 28-ந்தேதி துருக்கி சென்றார். அங்கு அவர் கடந்த 3-ந்தேதி வரை பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தினார். அதனை தொடர்ந்து தனது விசாரணை குறித்த முதல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.



    அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை கவலை அளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டுள்ளேன். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்”

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
    அர்ஜென்டினாவில் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. இதன் இடையே சீன அதிபர் ஜின்பிங்குடனும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடனும் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். G20summit #Modi
    பியுனோ அயர்ஸ் :

    ‘ஜி-20’ என்று அழைக்கப்படுகிற உலகின் மிகப்பெரிய பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு, அர்ஜென்டினா நாட்டின் தலைநகரமான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நேற்று (30-ந் தேதி) தொடங்கியது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    2018-ம் ஆண்டு இந்திய சீன உறவுக்கு நல்லதொரு ஆண்டு. அடுத்த ஆண்டை இன்னும் சிறப்பானதாக்குவோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி, ‘‘அடுத்த ஆண்டு நடக்க உள்ள உச்சி மாநாட்டில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். இந்த சந்திப்புக்கு நீங்கள் நேரம் ஒதுக்கித் தந்ததற்காக இதயம் கனிந்த நன்றி’’ என குறிப்பிட்டார்.



    முன்னதாக பிரதமர் மோடியும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு அந்த நகரத்தில் உள்ள இளவரசர் இல்லத்தில் நடந்தது.

    பாதுகாப்பு, பொருளாதாரம், முதலீடு, விவசாயம், எரிசக்தி, கலாசாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும், ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். உள்கட்டமைப்பு துறையிலும், விவசாய துறையிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு பற்றியும் ஆலோசனை நடத்தினர். இந்தியாவில் பெருகி வரும் எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் தேவையை சந்திப்பதற்கு ஏற்ற வகையில், அவற்றை வினியோகம் செய்வதற்கு சவுதி அரேபியா முன் வந்துள்ளது.

    இதை இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்தார்.

    இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் முதலீடு செய்வது தொடர்பாகவும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.

    இந்தியாவில் எரிசக்தி, உள்கட்டமைப்பு, ராணுவம் ஆகிய துறைகளில் சவுதி அரேபியாவின் முதலீடுகளை அதிகரிப்பதற்கு தலைவர்கள் மட்டத்திலான வழிமுறையை உருவாக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

    சவுதி அரேபியாவுக்கு இந்தியா முக்கியமான கூட்டாளி என்று பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறிப்பிட்டார். இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு நிதியத்தில் தொடக்க முதலீடு செய்வது தொடர்பாக சவுதி அரேபியா இறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

    சூரிய மின்சக்தி கூட்டணியில் இணையுமாறு சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

    இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், ‘‘சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனான பேச்சுவார்த்தை நிறைவானதாக அமைந்தது. இந்திய, சவுதி அரேபிய உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், பொருளாதாரம், கலாசாரம், எரிசக்தி துறை உறவினை மேலும் மேம்படுத்துவது பற்றியும் நாங்கள் விவாதித்தோம்’’ என குறிப்பிட்டுள்ளார். G20summit #Modi 
    கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கருத்து தெரிவித்துள்ளார். #JamalKhashoggi #MohammedBinSalman
    ரியாத்:

    சவுதி அரேபிய மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் சவுதி தூதரகத்தில் கடந்த 2-ந் தேதி மாயமான நிலையில், அவர் அங்கேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல், உலக அரங்கை உலுக்கி உள்ளது.

    இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மிக மோசமான முறையில் கசோக்கியை கொலை செய்து மூடி மறைத்து விட்டது என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவின் நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்ந்தபோதும் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.



    இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நடைமுறையில் சவுதி அரேபியாவை ஆளுகிறவர், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான். எனவே கசோக்கி மரணத்துக்கு காரணமான நடவடிக்கைக்கு இறுதி பொறுப்பை அவர்தான் ஏற்க வேண்டும்” என்று கூறினார்.

    இது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டிரம்ப் கொடுத்த அழுத்தமாக அமைந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்து வந்த முகமது பின் சல்மான், இப்போது தனது மவுனத்தை கலைத்துக்கொண்டு வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

    ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு முகமது பின் சல்மான் இதுபற்றி கூறும்போது, “கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “கசோக்கி படுகொலையை தொடர்ந்து எழுந்துள்ள பரபரப்பு, சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளை தடம் புரளச்செய்து விட முடியாது” எனவும் கூறினார்.  #JamalKhashoggi #MohammedBinSalman 
    பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சவுதி அரேபிய இளவரசருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. #AlQaedaWarning #Saudicrownprince #MohammedbinSalman

    துபாய்:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

    பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. மேலும் சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

    சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டில் பொழுதுபோக்கு நகரம் ஒன்றையும் உருவாக்க இருக்கிறார். இந்த நகரம் குட்டி நியூயார்க், சிங்கப்பூர், மலேசியா போல இருக்கும் என்று கூறப்படுகிறது.
     
    இந்நிலையில், சவுதி அரேபியாவின் இந்த முடிவுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரம் கொடுக்கிறார், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இஸ்லாமிய நாட்டை நாசம் செய்கிறார். அவர் உடனே தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு அல்கொய்தா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. #AlQaedaWarning #Saudicrownprince #MohammedbinSalman
    சவுதி அரேபியாவில் திரையரங்கத்தை திறந்தது மற்றும் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்த நடவடிக்கைக்காக பட்டத்து இளவரசர் பின் சல்மானுக்கு அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. #AlQaeda #MohammedbinSalman
    ரியாத்:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். வரலாற்றில் முதன் முறையாக திரையரங்கத்தை திறந்து வைத்து சவுதியில் அதிகளவில் பொழுதுபோக்கு நிகழ்சிகளை நடத்த வழிவகை செய்தார்.

    பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடையை நீக்கி சவுதி பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினார். இந்த திட்டங்கள் எல்லாம் பாவகரமான திட்டங்கள் எனக் கூறியுள்ள அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

    ‘முகமது பின் சல்மான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதற்கு பதிலாக, காரணமே இல்லாமல் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நாத்திகம் மற்றும் மதச்சார்பற்றவர்களை பின்தொடர்வதால், சவுதியில் ஊழல் மற்றும் அறத்தை சிதைக்கும் போக்கு அதிகரித்துள்ளது’ என அல் கொய்தா அமைப்பின் செய்தி நிறுவனமான மதாத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ‘கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு அருகில் உள்ள ஜெட்டா நகரில் ராயல் ரம்பல்(WWE) எனப்படும் மல்யுத்த போட்டிகள் நடந்தது. இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் குழுமியிருந்த இடத்தில் மல்யுத்த வீரர்கள் திறந்த உடலுடன் இருந்தது கடும் கண்டனத்துக்குரியது’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AlQaeda #MohammedbinSalman
    ×