என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohan Babu"

    • எவ்வளவு தேடியும் அவரின் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை
    • அந்த சமயத்தில் செளந்தர்யா கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது

    தென்னிந்திய திரையுலகில் 90களின் இறுதியில் தொடங்கி 2000களில் அவர் உயிருடன் இருந்தவரை முன்னணி நடிகையாக வளம் வந்தவர் சௌந்தர்யா.

    ரஜினியின் படையப்பா, அருணாச்சலம், கமலின் காதலா காதலா, விஜயகாந்தின் சொக்கத்தங்கம் என பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அங்கு அறியப்பட்ட முகமாக இருந்தவர் சவுந்தர்யா.

    கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் தனது 31 ஆவது வயதில் சௌந்தர்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலையை அந்த சமயத்தில் ஏற்படுத்தி இருந்தது.

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் சௌந்தர்யா. சினிமா கனவினால் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிக்க வந்தார். முன்னணி நடிகையாகவும் உருவெடுத்தார். சௌந்தர்யாவுடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்துக்கிடந்தனர்.

     

    அவருக்கு 2003 இல் ரகு என்ற சாப்ட்வேர் இன்ஜினீயருடன் திருமணமும் நடந்தது. 2004 இல் விபத்து நடந்த அன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அரசியல் பிரசாரதிற்காக கரீம்நகரில் இருந்து விமானத்தில் தனது சகோதரர் அமர்நாத்துடன் சௌந்தர்யா புறப்பட்டார்.

    ஆனால் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளனத்தில் இருவரும் உயிரிழநதனர். அந்த சமயத்தில் செளந்தர்யா கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது. எவ்வளவு தேடியும் அவரின் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. திரையுலகில் இன்று வரை இது ஒரு துயர சம்பவமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் செளந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல திட்டமிடப்பட்ட கொலை என நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா கம்மம் மாவட்டம் சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு, சௌந்தர்யா மரணத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக சந்தேகம் கிளப்பியுள்ளார்.

    ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு அந்த மாளிகையை சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தும் அதை நிராகரித்தனர்.

    விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார். செளந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என இதுவரை உறுதியாகவில்லை.

    இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்திருக்கிறார்.

    • மோகன் பாபு வீட்டிற்கு சென்ற செய்தியாளர்கள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டனர்.
    • நடிகர் மோகன் பாபு தன்னை கைது செய்யாமல் இருக்க தெலுங்கானா ஐகோர்ட்டில் வருகிற 24-ந்தேதி வரை முன் ஜாமின் பெற்றார்.

    நடிகர் மோகன் பாபுவின் சொத்துக்களை பிரிப்பது சம்பந்தமாக அவரது மகன்கள் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகியோரிடையே தகராறு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மனோஜ் மஞ்சு தனது தந்தை வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன் பாபு வீட்டிற்கு சென்ற செய்தியாளர்கள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி வீசினார்.

    இதில் செய்தியாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் நடிகர் மோகன் பாபு, அவரது மகன்கள் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இந்த நிலையில் நடிகர் மோகன் பாபு தன்னை கைது செய்யாமல் இருக்க தெலுங்கானா ஐகோர்ட்டில் வருகிற 24-ந்தேதி வரை முன் ஜாமின் பெற்றார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படக்குழுவில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #SooraraiPottru
    `என்ஜிகே', காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை துவங்கிய விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஜேடியாக நடித்து வரும் அபர்ணா பாலமுரளி தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அபர்ணா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன், இந்த செட்டில் உள்ள அனைவருமே அன்பாக உள்ளார்கள். இரும்பு பெண் சுதா மேடம் போன்று யாருமில்லை. மற்றும் அந்த முக்கியமான நபர், அவரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கோபிநாத்தின் மனைவி பார்க்கவியின் கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்து வருகிறார். பார்ப்பதற்கு பார்கவி போலவே இருப்பதால் அவரை இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள்.


    சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.

    2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
     #SudhaKongara #AparnaBalamurali

    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 38-வது படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. #Suriya38 #SooraraiPottru
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்துள்ளார்கள். 

    சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.

    2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
     #SudhaKongara

    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 38-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்பாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya38
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.



    இந்த நிலையில், தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். #Suriya38 #SudhaKongara #MohanBabu

    பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் தாயார் உடல் நலக்குறைவால் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். #Lakshmiamma #MohanBabu
    திருப்பதியில் பிரபல தெலுங்கு நடிகரின் தாயார் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

    பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சினிமா இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார். இவரது மகன் விஷ்ணு மஞ்சுவும் தற்போது தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

    மோகன் பாபுவின் தாயார் லட்சுமியம்மா (92). வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கபட்டு திருப்பதியில் உள்ள சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு இறந்தார்.



    அவரது உடல் திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு அருகேயுள்ள வித்யா நிகேதன் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    லட்சுமியம்மா உடலுக்கு சினிமா துறையினர், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #Lakshmiamma #MohanBabu

    ×