என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mohanlaal"

    • யானை தந்தம் வழக்கில் நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
    • இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.

    கடந்த 2012-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் நடிகர் மோகன்லால் வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை திரும்ப பெறுவதாக பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்திருந்தது.


    மோகன்லால்

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அரசின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் மோகன்லால் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், யானை தந்தம் வழக்கில் மோகன்லால் சட்டத்தை மீறவில்லை என்றும் அது இறந்த வளர்ப்பு யானையின் தந்தங்கள் என்றும் கேரள அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மோகன்லால்

    இதனை கேட்ட கேரள உயர்நீதிமன்றம் ஒரு சாமானியனுக்கு அரசு இப்படி தளர்வு அளிக்குமா? என கேள்வி எழுப்பியதுடன் சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும் என்றும் மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்றும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.

    • மோகன்லால் தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதன் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    மலையாளத்தில் முன்னணி நடிகரான மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் 'மான்ஸ்டர்' திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    லிஜோ ஜோஸ் - மோகன் லால்

    இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    2009-ஆம் ஆண்டு 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தில் நடிகர் மோகன்லால், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.


    திரிஷ்யம்

    'திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் என்னிடம் உள்ளது என்றும் அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் விரைவில் தயாராகும் என்றும் கூறியிருந்தார்.


    திரிஷ்யம்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகத்தினை தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்து ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

    ×