என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "molestion"

    பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளருக்கு ஆதரவாக கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பதி:

    திருப்பதியில் சரோஜினிதேவி சாலையில் அரசு பெண்கள் விடுதி உள்ளது. விடுதி காப்பாளராக நந்தகோபால் பணியாற்றி வந்தார். இங்கு ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.

    அதில் கடப்பாவை சேர்ந்த பெண் ஒருவர் தங்கியிருந்தார். அந்தப் பெண், விடுதியில் இருந்து திடீரென வெளியேறி தன்னுடைய சொந்த ஊரான கடப்பாவுக்கு சென்றார். அங்கு சென்ற அவர், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. அம்சாத்பாஷாவிடம் சென்று தனக்கு திருப்பதி விடுதியில் பாலியல் கொடுமை நடந்ததாக தெரிவித்தார்.

    அதற்கு கண்டனம் தெரிவித்த கடப்பா எம்.எல்.ஏ. அம்சாத்பாஷா, திருப்பதி அரசு பெண்கள் விடுதி காப்பாளர் நந்தகோபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும், இல்லையெனில் மக்கள் நற்பணி மன்றங்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என எச்சரிக்கை விடுத்தார்.

    அரசு மகளிர் விடுதி அருகே பாலியால் தொல்லை கொடுத்த விடுதி வார்டன் நந்தகோபாலை கைது செய்ய வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரது உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி நந்தகோபாலை கைது செய்தனர்.

    இந்தநிலையில் திருப்பதி அரசு பெண்கள் விடுதியில் தங்கியுள்ள பெண்கள், விடுதி காப்பாளர் நந்தகோபால் நல்லவர். அவர் 10 அனாதை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் எங்களுக்கு நல்ல ஒரு தந்தையை போன்றவர். அவர் மீது வீண் பழி சுமத்திய கடப்பா பெண் ஒரு லெஸ்பியன் (ஓரினச் சேர்க்கையாளர்), விடுதி காப்பாளர் நந்தகோபாலை கைது செய்யக்கூடாது என்றும், அவருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு தங்களின் கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு விடுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த புகார் மீது மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என விடுதி பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. #tamilnews
    ×