என் மலர்
நீங்கள் தேடியது "Monitor lizards"
- கடந்த வாரம் 3 உடும்பகளை பிடித்து வந்து தனது குழந்தைகளிடம் விளையாட கொடுத்தார்.
- உடும்பை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து சிரஞ்சீவியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், கலிவிடு அடுத்த பட்டே பள்ளியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் வன விலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் 3 உடும்பகளை பிடித்து வந்து தனது குழந்தைகளிடம் விளையாட கொடுத்தார். குழந்தைகள் உடும்புகளுடன் விளையாடுவதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இதனைக் கண்ட கரீம் நகரை சேர்ந்த விலங்குகள் ஆர்வலர் ஒருவர் இது குறித்து வனத்துறையினரிடம் புகார் செய்தார். வேம்பள்ளி வனச்சரகர் பாலசுப்பிரமணியம் உடும்பை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து சிரஞ்சீவியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- உடும்புகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை அவை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.
- உடும்புகளில் 60 சதவீதத்தை அழிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தைபே:
தென்கிழக்கு ஆசியாவில் தீவு நாடாக தைவான் உள்ளது. மிக சிறிய தீவு நாடான தைவானில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விவசாய தொழிலை மேம்படுத்தும் முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் நாட்டில் உடும்புகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை அவை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் அந்த நாட்டின் விவசாயிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள உடும்புகளில் 60 சதவீதத்தை அழிக்க தைவான் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்த நாட்டின் வனத்துறை கணக்கீட்டின்படி 2 லட்சம் உடும்புகளில் இருந்து 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல உள்ளது.
இதற்காக வேட்டைக்காரர்கள் நியமிக்கப்பட்டு ஒரு உடும்புக்கு ரூ.1,300 (15 அமெரிக்க டாலர்) சன்மானமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.