என் மலர்
நீங்கள் தேடியது "monthly pension"
- விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்வு.
- விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்வு.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதபோல், விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு, மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் வழித்தோன்றல்கள் பெறும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.