என் மலர்
நீங்கள் தேடியது "mother tried suicide"
திருப்பூர்:
திருப்பூர் சாமுண்டிபுரம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நெல்சன். பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி புனிதா (28). இவர்களுக்கு எவலின் (7) என்ற மகளும் எபின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
நேற்று இரவு நெல்சனுக்கும் புனிதாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த புனிதா தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார்.
அதன் படி இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்தார். இதில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த நெல்சன் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் மனைவி, குழந்தைகள் மயங்கி கிடந்ததை பார்த்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் மயங்கி கிடந்த புனிதா மற்றும் அவரது குழந்தைகள் எவலின், எபின் ஆகியோரை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.