search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle collision"

    • மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.
    • சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை, நவ.8-

    சென்னிமலை அருகே உள்ள தட்டாங்காட்டு புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். (வயது 79). விவசாயி. இவர் தன்னுடைய வீட்டில் இருந்து அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றார்.

    அப்போது சென்னிமலை-காங்கேயம் மெயின் ரோட்டை அவர் கடந்த பொழுது ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்த கவின் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது.
    • இதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தார்.

    பெருந்துறை:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). தொழிலாளி. இவர் பெருந்துறை சிப்காட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு அருகிலுள்ள சரளை என்ற இடத்தில் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து, அவர் தங்கி இருந்த இடத்திற்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்முகம் லட்சுமி இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர்.
    • சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    வானூர் அருகே அருவாப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவரது மனைவி லட்சுமி (55). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர். அப்போது கிளியனூர் சாலையில் சென்ற போது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் சண்முகம், லட்சுமி ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் லட்சுமி, சண்முகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் சண்முகம் உயிர் தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த மேல உவரியை சேர்ந்தவர் குமார்.
    • திசையன்விளை அருகே ஆனைகுடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற உவரியை சேர்ந்த ரீகன் (45), ரெனோ (48) ஆகியோர் மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்க ள் மீது மோதி உள்ளது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த மேல உவரியை சேர்ந்தவர் குமார் (வயது 34).

    திசையன்விளையில் இருந்து உவரிக்கு

    உவரி அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (40). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து உவரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டி சென்றார். திசையன்விளை அருகே ஆனைகுடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற உவரியை சேர்ந்த ரீகன் (45), ரெனோ (48) ஆகியோர் மோட்டார் சைக்கிள் வேகத்தை குறைத்து வலதுபுறமாக திரும்பும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்க ள் மீது மோதி உள்ளது.

    இதனால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர். குமாரின் உடல் பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்க ப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த குமாருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குமார் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தார். சமீபத்தில் குமாரின் தந்தைக்கு சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நேற்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

    • எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.
    • அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி சம்மனசுமேரி (வயது 57). இவர் தனது சொந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று இருக்கிறார். திருக்கோவிலூர் செவலை ரோட்டின் வழியாக வீரட்டகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டி ருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.

    இதில் சம்மன சுமேரிக்கு பின் தலையில் அடிபட்டது. உடன் அவரை திருக்கோ விலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாச்சி பெருந்துறை-பவானி ரோடு பகுதியில் தனது பேரனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நாச்சி மீது பலமாக மோதியது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், பாலன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சி (வயது 58).

    சம்பவத்தன்று நாச்சி பெருந்துறை-பவானி ரோடு பகுதியில் தனது பேரன் மோகன்குமாருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நாச்சி மீது பலமாக மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நாச்சி இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • தனது மோட்டார் சைக்கிளில் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52). பூண்டு வியாபாரி. இவர் நேற்று மாலை ஏழுமலை தனது மோட்டார் சைக்கிள் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். பெரியசெவலை அருகே செல்லும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

    எதிரே மோதிய 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .அவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் வட்டம் பிரிவிடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் கார்த்தி (வயது 28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காட்டு செல்லூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் என்பவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். எதிர்பாராதவிதமாக கார்த்திக் இருசக்கர வாகனமும், எதிரே வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார்த்தி மற்றும் எதிரே வந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிபிராஜ் சென்னை மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்ட னர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புவனகிரி அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
    • இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உமா மகே ஸ்வரன். இவரது மனைவி வெற்றிச்செல்வி .(வயது 50) இந்நிலையில் உமா மகேஸ்வரன் மனைவி வெற்றிச்செல்வி உடன் தனது மோட்டார் சைக்கி ளில் புவனகிரி கடைவீதிக்கு சென்றனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதை எதிர்பாராத உமா மகேஸ்வரன் நாய் மீது மோதினார்.

    இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மேல்சிகிச்சைக்காக புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு வெற்றிச்செல்வி உயிரிழந்தார். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி ஊர்காவல்படை வீரர் காயமடைந்தார்.
    • பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஏ.மேல் மாம்பட்டு கிராமத்தை ேசர்ந்தவர் செல்வராஜ் (53) இவர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவருடன் பணிபுரியும் முருகன் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்த னர்.இதுகுறித்து பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.
    • மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யா ணசுந்தரம்.இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது சொந்த ஊரில் திருவிழாவை காண்பதற்கு இரு சக்கர வாகனத்தில் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் இடது புறமாக சென்று கொண்டிருக்கும் பொழுது அதே எதிர் திசையில் வடக்கு காட்டு கொட்டாய் தென் பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.இந்த விபத்தில் கல்யாணசுந்தரம், அவரது மனைவிமஞ்சுளா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகுகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
    • மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருநாவலூர், ஆக.25-

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே லத்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிகண்ணு (வயது 55). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது சாலை ஓரமாக சென்ற சாமிகண்ணு மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமி கண்ணுவை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சாமிகண்ணு பரிதாபமாக இருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்தை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×