என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mumbai plane crash
நீங்கள் தேடியது "Mumbai plane crash"
மும்பையில் குடியிருப்பு பகுதியில் விமானம் தீப்பிடித்து விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். இதில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் சுமார் 60 தொழிலாளர்கள் உயிர் தப்பினார்கள். #MumbaiPlaneCrash
மும்பை:
மும்பை ஜூகுவில் சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் வந்து செல்லும் விமான தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று மதியம் யு.ஒய்.ஏவியேசன் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘கிங் ஏர் சி90’ என்ற சிறிய ரக விமானம் ஒன்று சோதனை ஓட்டத்திற்காக மதியம் வானில் பறந்தது.
அந்த விமானத்தை பெண் விமானி மரியா சுசேரி என்பவர் இயக்கினார். அவருடன் துணை விமானி பிரதிப் ராஜ்புத் மற்றும் விமானத்தின் பராமரிப்பு பெண் என்ஜினீயர் சுரபி, மற்றொரு பராமரிப்பு என்ஜினீயர் மனிஷ் பாண்டே ஆகியோர் இருந்தனர்.
அந்த விமானம் மதியம் 1.10 மணியளவில் மும்பையின் புறநகர் பகுதியான காட்கோபர் மேற்கு பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் தீப்பிடித்தது. விமானம் தீப்பிடித்த இடத்தின் கீழே ஜாக்ருதி என்ற அடுக்குமாடி கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அடுத்த சில நொடிகளில் விமானம் பயங்கர சத்தத்துடன் கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தின் மீது விழுந்து பயங்கரமாக வெடித்து சிதறியது.
மேலும் வெடித்து சிதறிய விமானத்தின் பாகங்கள் தீப்பிடித்து எரிந்து தரையில் விழுந்தன. அந்த நேரத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆயினும் மோசமான அளவிற்கு கரும்புகையுடன் விமானத்தின் பாகங்கள் தீப்பற்றி எரிந்தன.
விமானத்தின் பெட்ரோல் அங்குள்ள சாலையில் சிதறி சில மீட்டர் தூரத்துக்கு தீப்பிடித்தது. இதன் காரணமாக அந்த சாலை தீப்பிழம்பாக காட்சி அளித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லவில்லை.
இதற்கிடையே விமானத்தின் வெடித்து சிதறிய ஒரு பகுதி தீயுடன் வேகமாக பறந்து வந்து அந்த சாலையின் நடைபாதையில் சென்று கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீது மோதியது. இதில் அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து நடைபாதையிலேயே பிணமானார். உடல் கரிக்கட்டை ஆனது.
விமானம் நொறுங்கிய இடத்தில் இருந்த மரங்களும் தீப்பிடித்து எரிந்தன. விமானம் தீப்பிடித்து விழுந்த சத்தம் கேட்டு, குண்டுதான் வெடித்து விட்டதோ என அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்தனர். அவர்கள் விமானத்தின் பாகங்கள் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
நடைபாதையில் பாதசாரியின் உடல் கரிக்கட்டையாகி எரிந்து கொண்டிருந்தது பார்ப்போரின் நெஞ்சை பதற செய்தது. விபத்தில் விமானி மரியா சுசேரி, துணை விமானி பிரதிப் ராஜ்புத் மற்றும் 2 என்ஜினீயர்கள் ஆகிய நான்கு பேரும் உடல் கருகி உயிரிழந்து விட்டனர். அவர்களது உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.
போலீசார் பாதசாரி உள்ளிட்ட பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராஜவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விமானம் வெடித்து சிதறி விழுந்த போது கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் சுமார் 60 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சம்பவம் நடப்பதற்கு சற்று முன்னர் தான் மதிய உணவுக்காக அங்கிருந்து சென்று இருக்கிறார்கள்.
இதனால் அவர்கள் உயிர் தப்பினார்கள். ஒருவேளை அவர்கள் பணியில் இருந்திருந்தால் உயிர்ச்சேதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
இருப்பினும் விமானம் விழுந்த நேரத்தில் நரேஷ்குமார் மற்றும் லவ்குஷ் குமார் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இருந்து உள்ளனர். இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதேபோல விமானம் வெடித்து சிதறிய இடத்தை சுற்றிலும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிர்ஷ்டவசமாக விமானம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது விழவில்லை. இல்லையெனில் பெரியளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய ‘கிங் ஏர் சி90’ சிறிய ரக விமானம் கடந்த 2014-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில அரசு பயன்படுத்தி வந்தது ஆகும். 12 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தை யு.ஒய்.ஏவியேசன் நிறுவன உரிமையாளர் தீபக் கோத்தாரி வாங்கி இருந்தார்.
நேற்று பூஜை நடத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் தான் மும்பை சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து, விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது. மற்றொரு ஓடுபாதை மூலம் விமானங்கள் இயக்கப்பட்டன. விமான விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

சோதனை ஓட்டமாக, ஜூகு விமான தளத்தில் இருந்து விமானம் கிளம்புவதற்கு முன் ஊழியர் ஒருவர் பூஜை செய்த காட்சி.

×

X