search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Munna Bhai MBBS"

    • தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் நிர்ணயித்துள்ளது.
    • வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்து மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைத்திருக்கும்.

    நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் இளநிலைத் தேர்வில் பலவேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் பூதகரமாகத் தொடங்கியுள்ளது.

    பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது. ஒரு வினாத்தாள் ரூ.30 லட்சம் வரையில் விற்னையானது. நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றனர். இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

     

    இந்த முறைகேடுகளில் முக்கிய மூளையாக செயல்பட்ட சால்வர் கேங்கை சேர்ந்த நபர்கள் கைது செயயப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் 'Solver gang' நிர்ணயித்துள்ளது. முன்னா பாய் சர்வீஸ் என்ற பெயரில் இந்த பேக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹிந்தியில் கடந்த 2003 ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் 'முன்னா பாய் எம்பிபிஎஸ்'. இதில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் தனக்கு பதிலாக வேறொருவரை மிரட்டி அந்த பரீட்சையில் ரவுடியான முன்னா பாய்  வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்துவை மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைந்திருக்கும்.

     

     

    இதை பிரதி செய்யும் வகையில், தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யும் முன்னா பாய் சர்வீஸை சால்வர் கேங் அறிமுகப்படுத்தி முறைகேடு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில் வட மாநிலங்களில் இயங்கி வந்த சால்வர் கேங்கின் முக்கிய மூளை ரவி ஆத்ரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ இன்று வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது. 

     

    ×