என் மலர்
நீங்கள் தேடியது "Murder try"
- பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடுவதில் 2பேருக்கும் இடையே தொழில் போட்டியும் இருந்து வந்தது.
- கதிரவன் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதினார்
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், பா.ஜ.க., ஓ. பி .சி. அணி நிர்வாகி.மேலும் பொக்லைன் எந்திரம் சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். பொங்கலூர் எஸ்.ஏ.பி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவரும் பொக்லைன் எந்திரம் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.
இந்நிலையில் எஸ்ஏபி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாக்கடை அமைப்பதில் கதிரவனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடுவதில் 2பேருக்கும் இடையே தொழில் போட்டியும் இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை செல்வகுமாரின் எதிர்ப்பை மீறி கதிரவனுக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை கொண்டு சாக்கடை கால்வாயை மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் பொக்லைன் வாகனத்தின் குறுக்கே நின்று கொண்டு, அதனை தடுத்து ஆபரேட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அங்கு சென்ற கதிரவன் தனது பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுனர் வசந்திடம், எதிரே நின்று கொண்டிருந்த செல்வகுமார் மீது ஏற்றும் படி கூறியதாக தெரிகிறது. வசந்த் மறுத்ததால் அவரை இறக்கி விட்ட கதிரவன் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதினார்.பலமாக மோதியதில் செல்வகுமார் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டுவரவே, கதிரவன், வசந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அப்பகுதியினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த கொடூர கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக படம் எடுத்து வாட்ஸ் அப் , பேஸ்புக் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி பொது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் கதிரவன், வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.மேலும் பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மஞ்சுளாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்த லிங்கேஸ்வராவை கைது செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா காரோ கியாதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்த லிங்கேஸ்வரா. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சித்த லிங்கேஸ்வரா தனியார் நிறுவனத்திலும், மஞ்சுளா ஆயத்த ஆடை நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் சித்த லிங்கேஸ்வரா அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் சம்பவத்தன்று இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தனது மனைவியின் கழுத்தை நெரித்து சித்த லிங்கேஸ்வரா கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.
அப்போது மஞ்சுளா சத்தம் போட்டதால் வீட்டில் கிடந்த பசையை (பெவி குவிக்) எடுத்து அவரது வாயில் போட்டு ஒட்டினார். அதன்பிறகும் அவரது கழுத்தை சித்த லிங்கேஸ்வரா நெரித்ததாக தெரிகிறது. முன்னதாக மஞ்சுளாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் வீட்டில் இருந்து சித்த லிங்கேஸ்வரா தப்பி ஓடி விட்டார். பின்னர் உயிருக்கு போராடிய மஞ்சுளாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்த லிங்கேஸ்வராவை கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சென்னை ஓட்டேரி ஒத்தவாடை தெருவில் அகில இந்திய இந்து சத்ய சேனா அமைப்பு உள்ளது. இதன் தேசிய தலைவர் வசந்த குமார் ஜி.
இவருக்கு தொலைபேசியில் அடிக்கடி கொலை மிரட்டல் வந்தது. கடந்த 27-ந்தேதி இரவு 10 மணி அளவில் அவர் தனது அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் அவரை நோக்கி மோதுவது போல வந்தனர். எனவே இதில் இருந்து தப்பிக்க வசந்த குமார் ஜி அங்கிருந்து நகர்ந்தார். அப்போது திடீரென்று ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது கால் உடைந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று இந்து சத்யசேனா நிர்வாகிகள் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் உங்கள் தலைவரை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் என்று மிரட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த மிரட்டல் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வசந்தகுமார் ஜி புகார் செய்தார். மர்ம வாலிபர் மிரட்டல் விடுத்த வீடியோவையும் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதை வைத்து போலீசார் மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகிறார்கள். வசந்த குமார் ஜி-க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #Tamilnews