என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "muthumariamman temple"
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இதனையொட்டி வெற்றி விநாயகர்,சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரி யம்மன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சுவாமி செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்த னர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.
- முத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பூஜையையொட்டி பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- தொடர்ந்து வெற்றி விநாயகர், சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர், முத்துமணி சங்கர் ஆகியோர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
- இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீ வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.பூஜைகளை சுப்ரமணிய ஐயர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.
- கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
- இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய அய்யர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலார் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.
- திருவிழா நடைபெறாமல் இருந்தது.
- புதிய தேர் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த சேஷச முத்திரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தேர் திருவிழா நடைபெற்றது. அதன் பின்னர் சில காரணங்களால் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் இந்த ஆண்டு தேர் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு புதிய தேர் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவிலில் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சக்தி அழைத்தல், ஊரணி பொங்கல், தேர் வெள்ளோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர், தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்த டைந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் சேஷசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழு வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.தேர் திருவிழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
- அதைத்தொடர்ந்து வெற்றி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், 21 வகையான இலைகள், பூக்கள், பழங்கள் படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜை யுடன் தொடங்கி யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வெற்றி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், 21 வகையான இலைகள், பூக்கள், பழங்கள் படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.
விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலார் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- கோகுலாஷ்டமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு அவல், வெண்ணெய், தயிர், முறுக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோகுலாஷ்டமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு அவல், வெண்ணெய், தயிர், முறுக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- வரலட்சுமி விரத விழாவையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
- தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவிளக்கில் வரலட்சுமி அம்மன் முகம் அலங்கரிக்கப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை பிரசாத தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி,:
கோவில்பட்டி கதிரேசன் ரோடில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரத விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவிளக்கில் வரலட்சுமி அம்மன் முகம் அலங்கரிக்கப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை பிரசாத தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- ஆடி 3-ம் செவ்வாயை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
- தொடர்ந்து மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொரு ளாளர் லட்சுமணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரி சனம் செய்தனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், சந்தன கருப்பசாமிக்கும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து சைவ படைப்பு போட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி கொடை விழாவை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு மஞ்சள், பால், குங்குமம், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், சந்தன கருப்பசாமிக்கும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து சைவ படைப்பு போட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார்.
விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்