search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mutton gravy"

    • மட்டனில் உள்ள கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது.
    • ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக மட்டன் கிரேவி.

    அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இதன் சுவையும் நன்றாவே இருக்கும். மட்டன் சாப்பிடுவதன் மூலம், நம்முடைய இதயம் நன்கு வலுப்பெறுகின்றது. மேலும் மட்டனில் உள்ள கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது. ஆட்டுக்கறி சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் பி, செலினியம் மற்றும் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

    ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக மட்டன் கிரேவி செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன்- 1/2 கிலோ

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    உப்பு- தேவையானஅளவு

    இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்

    எண்ணெய்- 4 டீஸ்பூன்

    வெங்காயம்- 2 பெரியது பொடியாக நறுக்கி கொள்ளவும்

    பச்சை- 2

    தக்காளி- 2

    தனி மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    மிளகு தூள்- 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி, கறிவேப்பிலை- தேவையான அளவு

    அரைப்பதற்கு:

    ஏலக்காய்- 1

    கிராம்பு- 2

    பெருஞ்சீரகம்- 1/2 டீஸ்பூன்

    பட்டை- 2

    கொத்தமல்லி விதை- 1/2 டீஸ்பூன்

    மிளகு- 1/2 டீஸ்பூன்

    சோம்பு- 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீருடன், மட்டன், உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து 6 விசில் வரும் வரை மட்டனை வேக வைக்க வேண்டும்.

    மட்டன் வேகவைத்த தண்ணீரை எடுத்து வைத்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி மற்றும் மட்டன் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை அதிக வெப்பத்தில் வதக்க வேண்டும்.

    உப்பு மற்றும் அரைத்து வைத்த கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்க வேண்டும். மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    நன்கு கிரேவி பதம் வந்தவும் மீதம் உள்ள மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான காரசாரமான, மணமான ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி ரெடி.

     

    தோசை, இட்லி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் தொக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 3
    எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்)
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - ஒன்று
    சோம்பு - அரை டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - ஒன்று
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெரிய வெங்காயம் - அலங்கரிக்கத் தேவையான அளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். 5 விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.

    கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும்.

    கலவையில் தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×