என் மலர்
நீங்கள் தேடியது "Muzaffarnagar"
- முசாபர்நகர் காவல்துறையின் இந்த உத்தரவு தீண்டாமையை ஊக்குவிப்பதாகும்.
- நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் பாடுபடுகிறீர்களா?
உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என முசாபர்நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஒவைசி "முசாபர்நகர் காவல்துறையின் இந்த உத்தரவு தீண்டாமையை ஊக்குவிப்பதாகும். உத்தர பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் ஹிட்லரின் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அரசிலமைப்பின் 17 பிரிவின் தீண்டாமை தடையை மீறுவதாக அமையும். இந்த உத்தரவுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். பெயர் மற்றும் மதத்தை காண்பிக்க சொல்லும் இந்த உத்தரவு சட்டப்பிரிவு 21 (வாழ்வதற்கான உரிமை), சட்டப்பிரிவு 19 (வாழ்வாதார உரிமை) ஆகியவற்றை மீறுவதாகும். இதனால் ஏராளமான முஸ்லிம் பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் மெக்டொனால்டு, கேஎஃப்சி, பிசா ஹட் உள்ளன. அவற்றிற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவர்களுடன் நீங்கள் (அரசு) ஏதாவது ஏற்பாடு செய்துள்ளீர்களா?. இந்த உத்தரவு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹிட்லின் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார் என்பதை தெளிவாக காட்டுகிறது.
"நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் பாடுபடுகிறீர்களா? அரசியலமைப்பின் பொருத்தம் எங்கே? அரசியலமைப்புச் சட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டீர்களா? நரேந்திர மோடி அரசியலமைப்பை எடுத்து முத்தமிடுவதைப் பார்க்கிறோம், இது எல்லாம் கேலிக்கூத்து மற்றும் நாடகம்" என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜோகியாகேடா என்ற கிராமத்தில் உள்ள சமேதீன் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டார் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால், மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணை தினம் தினம் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் மாப்பிள்ளையின் சகோதரிகளால் அந்த பெண் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இறந்த பெண்ணின் வீட்டார் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #UttarPradesh
உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரின் கச்சி சதக் பகுதியில் உள்ள பழைய இரும்புக்கடையில் இன்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், வெடிக்காத நிலையில் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் உள்ளதா என்று குண்டுகளை செயலிழக்க செய்யும் அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் குண்டிவெடிப்புக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மிசாபர்நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் சன்ரோ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஒரு வீட்டு வாசலில் நின்றது. காரில் இருந்த பெண் பிறந்த குழந்தையை வெளியே வீசினார். பின்னர் அந்த கார் வேகமாக அங்கிருந்து சென்று விட்டது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமேராவில் பதிவானது.
இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானர். அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #caughtoncamera