என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » myanmar army
நீங்கள் தேடியது "Myanmar army"
- மியான்மர் ராணுவத்தினர் மிசோரமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- அவர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்.
இந்தியா- மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான விலையத்தில் மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானியுடன் 14 பேர் இருந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
மியான்மரில் ராணுவத்தினருக்கும், இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இனக்குழுவினருக்கு பயந்து ராணுவ வீரர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 184 மியான்மர் ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல வந்தபோது விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ராணுவம் மற்றும் போராளிக் குழுவினர் இடையே நடைபெற்ற மோதலில் 19 பேர் உயிரிழந்தனர். #MyanmarClashes #MyanmarArmy #Rebels
யாங்கூன்:
மியான்மர் நாட்டில் போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது. அவர்களை ஒடுக்க ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ராணுவத்துக்கும் போராளிக் குழுவினருக்குமிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் வடக்கு பகுதியில் உள்ள ஷான் மாநிலத்தில் இன்று போராளிக் குழுவினர் மற்றும் ராணுவத்துக்கு இடையே கடும் மோதல் நடைபெற்றது. சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடந்த இந்த மோதலில் 19 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். #MyanmarClashes #MyanmarArmy #Rebels

×

X