என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "myskin"

    • பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'.
    • படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் அவரால் நடிக்க முடியவில்லை அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

    அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.

    படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இதுக்குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இயக்குனர் மிஷ்கினுடன் சிவகார்த்திகேயன் முதன் முறையாக இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    'டான்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்துக்கு 'மாவீரன்' என்று தலைப்பு சூட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் டைரக்டர் மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அழுத்தமான அந்த கதாபாத்திரத்தில் மிஷ்கின் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் அஸ்வின் மிகவும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டாராம். இதனால் சிவகார்த்திகேயன் படத்தில் முதன் முறையாக மிஷ்கின் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    ×