search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagesh"

    • நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • இப்படத்திற்கு ஒளிப்பதிவு நிரன் சந்தர் மேற்கொண்டுள்ளார்

    பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம்தான் வானரன் என்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன்.

    பரபரப்பாக பேசப்பட்ட" டூ "எனும் படத்தை இயக்கியவரான ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் . ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் தயாரித்திருக்கிறார்கள்

    சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்த நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஒளிப்பதிவு நிரன் சந்தர் மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு ஷாஜஹான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களிலும் 30 நாட்களில் திட்டமிட்டப்படி ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதன் நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபுவின் மகனான கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக ‘ஸ்கூல் கேம்பஸ்’ என்ற படத்தில் அறிமுகமாகிறார். #SchoolCampus
    ஏஎம்என் குளோபல் குரூப் குழுவானது, ஏஎம்என் பைன் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி "ஸ்கூல் கேம்பஸ்" என்ற திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. ஏ.எம்.என் குளோபல் குரூப் மேனேஜிங் டைரக்டர் டாக்டர்.ஆர்.ஜே.ராம நாராயணா இந்த படத்தினை இயக்கி, தயாரிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

    இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஸ்ரீ சந்தோஷ் குமார் மால் IAS (மாவட்ட ஆட்சியர்) அவர்களால் டெல்லி கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தியக் கல்வியின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.

    பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரனும், சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபுவின் மகனான கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட் மற்றும் படத்தொகுப்பாளராக ராஜேஷ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.



    தேவா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் பிரபல பாடகர்கலான ஆஷா போஷ்லே, பி.சுசிலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்த படத்தில் பாடியுள்ளனர். படத்தின் நாயகர்களாக நடித்துள்ள ராஜ்கமல், கஜேஷ் நாகேஷ் ஆகியோர்களுக்கு ஜோடியாக கீர்த்தி மற்றும் காயத்ரி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

    மேலும் இந்த திரைப்படத்தில் டெல்லி கணேஷ், மதன் பாப், ரிந்து ரவி மற்றும் ராதிகா மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
    ×