என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Narasimhar"
- ஆஞ்சநேயர் ஒருமுகமாம் ஐந்தாவது திருமுகமாம் பஞ்சமுக ஆஞ்சநேயர் பதம் பணிய இதமாகும்
- வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம் பாலில் நைவேத்தியம் பழங்கள் படைத்திடுவோம்
பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பக்தியுடன் தொழுதிடவே
அஞ்சுவது ஏதுமின்றி அருள்தந்து காத்திடுவார்
வராகம் ஒருமுகம் வடக்குமுகம் பார்த்திருக்கும்
வராது இடரெல்லாம் வரந்தந்து காத்திருக்கும்
நரசிம்மம் ஒருமுகமாம் நல்லருள் புரிந்திருக்கும்
சிரமதிசை நீக்கிவிடும் தெற்குமுகம் பார்த்திருக்கும்
ஹயக்ரிவர் ஒருமுகமாம் மேல்முகம் பார்த்திருக்கும்
சகலகலா பாண்டித்யம் சந்தோஷம் தந்துவிடும்
கருடனும் ஒருமுகமாம் கடிய விஷம் நீக்கும்
உருவான மேற்குமுகம் உற்றுநோக்கும் திருமுகமாம்
ஆஞ்சநேயர் ஒருமுகமாம் ஐந்தாவது திருமுகமாம்
வஞ்சனை விரோதங்கள் வரட்டு குரோதங்கள்
பில்லி சூனியங்கள் பெரும்பகை அகற்றிவிடும்
உள்ளமெல்லாம் நிறைந்திருந்து உற்றதுணை ஆகிவிடும்
கிழக்கு முகம் பார்த்திருக்கும் கேடின்றிக் காத்திருக்கும்
வழக்குகள் வெற்றிதரும் வாழ்விலும் வெற்றிதரும்
கன்னிமார் கல்யாணக் காலங்கள் கைகூடும்
எண்ணம்போல் மழலைகள் எழிலாகத் தோற்றுவிக்கும்
பஞ்சமுக ஆஞ்சநேயர் பதம் பணிய இதமாகும்
கொஞ்சிவரும் செல்வங்கள் கோடி கோடி நலமாகும்
ஐந்துமுக ஆஞ்சநேயர் அனுதினமும் அருள்தரவே
சென்தூரப்பொட்டுமிட்டு' சிந்தனைகள் ஒன்றாக்கி
வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம்
பாலில் நைவேத்தியம் பழங்கள் படைத்திடுவோம்
வெற்றிலை சுருளோடு வடையில் மலைகளும் சுற்றியே
சாத்திடுவோம் பற்று நாம் கொண்டிடுவோம்
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம.
- வராகர் முகம் சகல தரித்திரமும் நீங்கி மங்களகரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.
- ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.
1. கிழக்கு முகம் - ஹனுமார் பிரதிவாதி சத்ரு உபத்திரவம் நீங்கும.
2. ஹயக்ரீவர் குதிரை முகம் ஜன வசீகரணம் வாக்குசித்தி வித்தையில் அபிவிருத்தி உண்டாகும்.
3. நரசிம்மம் சிங்கமுகம் சகல வித பய தோஷங்களும் பூத ப்ரேத துர்தேவதா தோஷங்களும் நீங்கும்.
4. வராகர் முகம் சகல தரித்திரமும் நீங்கி மங்களகரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.
5. கருடன் முகம் சகல விஷஜ்வர சரீர ரோகங்கள் நீங்கும் சகல விதமான தோஷங்களம் நீக்கப்பட்டு மேன்மை பெறலாம். ஸ்ரீ பஞ்சமுப ஆஞ்சநேயரை சேவித்தால் நவகிரஹ தோஷங்களம் நீங்கும்.
என்றும் நமக்கு வேண்டியது பலம் ஆத்மபலம் மனோபலம் புத்திபலம் தேகபலம் பிராணபலம் சம்பத்பலம் இந்த ஆறு பலங்களையும் பெற்று வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாட்சம் அவசியம். ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.
அனுமன் மகாபலிஷ்டன் அஞ்சனாகுமாரன் ராமேஷ்டன் வாயுபுத்திரன். அர்ஜுன சகன் அமிதபாராக்ரமன மாருதி சுந்தரன பிங்காட்சன ஆஞ்சநேயன மாருதிராயன சஞ்சீவராயன் பஜ்ரங்பலி ஸ்ரீராமதாசன அனுமந்தையா ஆஞ்சநேயலு மகாவீர் போன்ற பல நாமங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உண்டு.
ஸ்ரீ அனுமான் பஞ்சபூதங்களை மட்டுமா? பஞ்சேந்திரியங்களையும் கர்மேந்திரியங்கள் 5 ஞானேந்திரியம் 5 இவைகளையும் வசப்படுத்தியவர்.
- சிவன் தன் நெற்றிக்கண்ணையே கொடுத்தார்.
- எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர்.
இலங்கை யுத்தம் முடிந்து ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வழியில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷி வரவேற்று ஆசி கூற ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டி லட்சுமணன் ஆஞ்சநேயர் ஆகியோர் தங்கினர்.
அப்போது அங்கு திரிகால ஞானியான நாரதர் வந்து சேர்ந்தார். நாரதரை வணங்கி ஸ்ரீராமருக்கு ஆசி கூறிய நாரதர் ராமா முக்கியமான விஷயமாகவே உன்னை சந்திக்க வந்தேன். இலங்கை யுத்தம் முடிந்தாலும் அது இன்னமும் முற்றுப் பெறவில்லை. உனது வில்லுக்கு இன்னமும் வேலை உள்ளது என்று கூற திகைத்த ஸ்ரீராமர் 'நாரத மகரிஷியே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? விளக்கமாக கூறுங்கள் என்று வேண்டினார்.
ராமா! ராவணன் அழிந்தாலும் அரக்கர்கள் வாரிசுகள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இலங்கை யுத்தத்துக்கு பழிக்கு பழி வாங்க சபதம் செய்துள்ளார்கள். ரக்த பிந்து ரக்த ராட்சகன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கு அடியில் அமர்ந்து தவம் செய்கிறார்கள். இவர்கள் தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள். பிறகு அவர்களால் உலகுக்கு பெரும் அழிவு ஏற்படும். எனவே இவர்களை நீ உடனே சம்ஹாரம் செய்ய வேண்டும்' என நாரதர் கூறினார்.
மகரிஷியே நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் இப்போது நான் அயோத்தி செல்வதில் தாமதிக்க இயலாது. குறிப்பிட்ட நாளில் நான் அயோத்தி செல்லாவிடில் தம்பி பரதன் தீக்குண்டம் இறங்கி உயிரை விட்டுவிடுவான் என ராமர் கூற 'அப்படியானால் சரி உனக்கு பதில் தம்பி லட்சுமணனை அனுப்பு என நாரதர் கூற அவன் என் நிழல் ஆயிற்றே என்னை விட்டு பிரிய மாட்டான் என்று சபதம் செய்துள்ளானே என்ற ராமர் கண்களில் அனுமார் பட அனுமாரை அழைத்தார் 'அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.
அரக்கர்களின் ஆணிவேரை அழிக்கும் யுத்தமல்லவா? தேவர்கள் வாழ்த்தினர். திருமால் சங்கு சக்கரத்வீயும தனது அவதாரமான ஸ்ரீஹயக்கிரீவா, ஸ்ரீநரசிம்மா, ஸ்ரீவராஹர், ஸ்ரீகருடன் ஆகிய அவதாரத்தையும் வழங்க பிரம்மா கபாலத்தை வழங்க தேவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தந்திட ஆஞ்சநேயர் 10 கரங்களுடன் காட்சி தந்தார். விரைவாக செல்ல கருடன் தனது சிறகுகளை தந்தான்.
அனுமார் புறப்படும் நேரம் சிவபெருமான் வந்து சேர்ந்தார். 10 கரங்கள் 10 கரத்திலும் ஆயுதங்கள். எதை தருவது? பார்த்தார் சிவன் தன் நெற்றிக்கண்ணையே தந்துவிட்டார். மூன்று கண்கள் 10 கரங்களுடன் புறப்பட்ட வீர தீரம் நிறைந்த ஸ்ரீதிரிநேத்திர தசபுஜ ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் வாழ்வில் வளங்கள் பல பெற்று வாழலாம்.
1. ஹயக்ரீவர் - எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர். அவருடைய அம்சமாக சகல விதமான ஞானத்தையும் பெற்ற அறிவாளி ஹனுமான். அவருடைய சிறந்த ஞானத்தை ராமனே வியந்து பாராட்டுகிறான். இவன் ருக்வேதம். யஜுர் வேதம், சாம வேதம் இவற்றை பரிபூரணமாக அறிந்தவன். இலக்கணங்களை நன்றாகக் கற்றவன். இவன் பேச்சில் குறைபாடு ஒன்றுமே இல்லை. மிக விஸ்தாரமாகவும் மிகவும் சுருக்கமாகப் பேசி அளவோடு நிதானமாக மதுரமான குரலில் வார்த்தைகளை பேசும் ஆற்றல் அனுமானிடம் உள்ளது.
2. வராஹர் - மஹாவிஷ்ணுவின் வாராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று பூமி தேவியைக் கண்டுபிடித்து இரண்யாஷணியிடம் இருந்து தேவியை மீட்டார். ஹனுமானும் யாரும் செல்ல முடியாத இலங்கைக்கு சென்று சீதையை கண்டுபிடித்து ராவணனிடம் இருந்து மீட்பதற்கு உதவினார்.
3. நரசிம்மர் - தம்முடைய பக்தனான பிரகலாதனுக்கு தீங்கு விளைவித்த இரண்யனை ஆக்ரோஷத்துடன் சம்ஹாரம் செய்தார். இங்கே தம்முடைய தெய்வமான சீதாதேவிக்கு தீங்கு விளைந்ததற்காக மாருதி ராவணனுடைய சேனை சேனாதிபதிகளை மந்திரிக்குமாரர்கள் முதலானோரை வதம் செய்து இலங்கையையும் எரியச் செய்தார்.
4. கருடன் - பஷிகளுக்கெல்லாம் தலைவனாக கருடன் போற்றப்படுகிறார். பஷிராஜன் என்றே அவருக்குப் பெயர். ஆகாயத்தில் எல்லா உலகங்களாலும் எங்கும் பறக்கும், வல்லமை படைத்தவர். அவருடைய அம்சமாக அவருடைய சக்தியால்தான் அனுமான் பெருங்கடலை கடந்து இலங்கையை அடைந்தார். மீண்டும் கருடனைப் போலவே ஆகாய மார்க்கமாக கடலைக் கடந்து ராமனிடம் வந்து சேர்ந்தார்.
இப்படி நால்வருடைய அம்சமும் சக்தியும் கொண்டவர் ஹனுமான். இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த நால்வரோடு ஹனுமானையும் சேர்த்து பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று விசேசமாக கொண்டாடுகிறோம்.
ஈரேழுலோகங்கள் தோன்றி அழிந்து போனாலும் நீ மட்டும் இன்று போல் என்றும் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று பன்முறை வாக்கு சாதுர்யம் பெற்றவர்.
- ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் உள்ளார்.
- பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.
அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்கவர் பஞ்சமுக அனுமன். அனுமனின் ஐந்து முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால்,
வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன். அனுமனின் தாடை நீண்டு இருக்கும். ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.
கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும். தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள்,
பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும். வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன்,
பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும். பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.
- ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் உள்ளார்.
- பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.
அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்கவர் பஞ்சமுக அனுமன். அனுமனின் ஐந்து முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால்,
வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன். அனுமனின் தாடை நீண்டு இருக்கும். ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.
கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும். தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள்,
பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும். வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன்,
பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும். பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.
மகாவிஷ்ணுவின், பத்து அவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு. ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை அழைப்பானோ என்று எண்ணி, அனைத்துலகிலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
இவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால், நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர். இங்கு அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம்.
மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு. தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களைப் பார்த்தவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.பெருமாளுக்கு கல்யாண லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற பெயரும் உண்டு.
ஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் அருள்பாலிக் கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். தென்மேற்கில் கிழக்கு நோக்கினால், 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார்.
நாகதோஷம் நீங்க, தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பதாக இருப்பது தனிச்சிறப்பு.
மரகதவல்லித் தாயார் ஸந்நிதி பிரகாரத்தில் தனியே உள்ளது. முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். 16--ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சந்நிதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கல்யாண மண்டபமும் உள்ளது. 4 அடி உயரத்தில், 16 நாகங்களை அணிகலனாக கொண்ட பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு அருள்கிறார். இவரைத் தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை : 7.30 மணி முதல் 12 மணி வரை
மாலை: 4.30 மணி முதல் 8 மணி வரை
(பிற விஷேச காலங்களில் நேர மாற்றம் உண்டு)
இரண்யனை வதம் செய்து கோபம் தீராத நரசிம்மரை தாயார் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வது போன்ற இந்தத் தோற்றம், வேறு எத்தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.
சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம் பிரத்யட்ச தெய்வ சக்தி நல்கி, துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 6--ம் இடமாகிய ருண (கடன்), ரோக (வியாதி), சத்ரு (பகை) ஸ்தான தோஷத்தை உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர் இந்த லட்சுமி நரசிம்மன்.
தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திரத்தில் சேவித்தால் தீராத கடன், பிணி, திருமணத் தடை, சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.
கோவிலின் கட்டிட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத் திறனைப்பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அடித்தளமும் அதன் மேல்பாகமும் கற்களாலும், விமானம், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. கருவறை விமான கோபுரத்தில் சுண்ணாம்பு சுதையால் ஆன அழகிய உருவங்கள் ஐந்துள்ளன.
இங்கு மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை 32 முறை வலம் வந்தால் திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
திருமாலின் திருத்தலங்களில் இந்த கோவிலில்தான் நரசிம்மர் சயன கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாருடன் எழுந்தருளி இருப்பதால் இது போக சயனம் ஆகும்.
இந்த சயன நரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இந்த தலத்தில் வந்து சயனித்துள்ளார். 700 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் திருவந்திபுரம் செல்லும்போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
மற்ற கோவில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ் வார் இந்த கோவிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு பெருமாள் திரிபுர சம்ஹாரத்தின் போது சங்கு, சக்கரங்களை வழங்கியதாக புராணம் கூறுகிறது.
1,300 வருடங்களுக்கு முன்பு ஓம் என்ற வடி வில் திருவதிகை இருந்துள்ளது.உப்பிலியப்பன் சீனிவா சனை போல இங்குள்ள சரநாராயண பெருமாள், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமானின் போருக்கு பெருமாள் சரம் (அம்பு) கொடுத்து உதவிய தால் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்கிரமத்தால் (கருங்கல்) ஆனவர். சித்திரை விசேஷ திருமஞ்சனம், வைகாசி வசந்த உற்சவம், ஆடி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊஞ்சல் சேவை, ஆவணி ஜெயந்தி உற்சவம், புரட்டாசி பெருமாள் புறப்பாடு, ஐப்பசி தீபாவளி உற்சவம், கார்த்திகை திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி தனுர் மாத பூஜை, தை உள் புறப்பாடு, மாசி ஒரு நாள் மண்டகப்படி, பங்குனி உத்திர திருமஞ்சனம் என மாதந்தோறும் ஒரு விழா நடக்கிறது. இது ஒரு பிரார்த்தனை தலம் ஆகும்.
அமாவாசைதோறும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கோவில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். இந்த கோவில் பண்ருட்டியில் இருந்து பாலூர் வழியாக திருவந்திபுரம் செல்லும் சாலையில் திருவதிகை என்ற ஊரில் அமைந்துள்ளது.
நேர்கோட்டில் அமைந்துள்ள சிங்கிரிகுடி, பூவரசன் குப்பம், பரிக்கல் தலங்களை தரிசனம் செய்ய செல்பவர்கள் இந்த தலத்துக்கும் சென்று சயன நாராயண பெருமாளின் அருளைப் பெறலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்