search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nasar"

    • எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
    • சங்கம், சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும்.

    நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளன.

    இந்தநிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எம்.நாசர் விடுத்து உள்ள கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தற்போது பொதுவலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ் குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய் கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர்.

    எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 

    திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.

    கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும் கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும் இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும்.

    சட்டரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும் பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

    தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

     

    • 'ப்ரோ' படத்தின் பிரீ-ரிலீஸ் விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசியது வைரலானது.
    • இதற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும் நடிகருமான நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை சமுத்திரக்கனி 'ப்ரோ' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.

    இப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசும் போது, தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புது விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்' என்று பவன் கல்யாண் கூறி இருந்தார்.

    பவன் கல்யாணின் இந்த பேச்சு வைரலான நிலையில், அதற்கு பதிலளித்து நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- பிற மொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்ற முடியாது என்கிற தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு முதல் ஆளாக நான் தான் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன்.



    இப்போ நாம் பான் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பிறமொழியை சேர்ந்த நடிகர், நடிகைகளும் இங்கு நடிக்க வைக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த மாதிரி நிலையில், யாரும் பிறமொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்றக்கூடாது என்கிற தீர்மானத்தை போட மாட்டார்கள். தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருதி, தமிழ்நாட்டுக்குள் படங்களை எடுக்க வேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இங்கு சினிமாவை நம்பி உள்ள தொழிலாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, மற்றபடி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் தான் நடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

    பிற மொழிகளில் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பெருமைமிக்க ஒரு திரையுலகம் தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் இது. சாவித்ரி, வாணி ஜெயராம் என ஏராளமானோர் இங்கு வந்து பிரபலமாகி இருக்கின்றனர். இந்த தவறான தகவலை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்களை எடுப்போம் அதை உலக அளவுக்கு கொண்டு செல்வோம்" என கூறி உள்ளார்.

    தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க அறிவுறுத்துங்கள் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். #Nasar #Ramadoss
    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் திரைத்துறைக்கு நீங்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்படங்கள் மிகவும் வலிமை வாய்ந்த மக்கள் ஊடகங்கள். அவற்றின் மூலம் சமூகப் புரட்சியையும் ஏற்படுத்தலாம். சமூகச் சீரழிவையும் ஏற்படுத்தலாம்.

    அண்மைக்காலமாக திரைப்பட நடிகர்கள், குறிப்பாக கதாநாயகர்கள் தங்களின் பிரபலத்தை சமூகச் சீரழிவுக்காக பயன்படுத்துகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சில நடிகர்களின் திட்டமிட்ட செயல்பாடுகள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளன.

    உதாரணமாக, அண்மையில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் படமான சர்காரில் தொடக்கம் முதல் இறுதி வரை நடிகர் விஜய் ஏராளமான காட்சிகளில் புகைப்பிடித்திருக்கிறார். சர்கார் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்படத்தின் கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் காட்சி தேவையில்லை.

    அவற்றையெல்லாம் விட அபத்தமாக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் அனைவர் மத்தியிலும் விஜய் அப்பட்டமாக புகைப்பிடிக்கிறார். பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.


    திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை இல்லை; புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்தை திரையில் ஓடவிட்டால் போதுமானது என்றாலும்கூட, நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு இருந்திருந்தால் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும்.

    தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்திருப்பது புகைப் பழக்கம் தான். அண்மைய புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இறப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாகும்.

    நேரடியாக புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க புகைப்பவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் பெண்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கொடூரமானவை. இத்தகைய கொடிய வில்லனை எதிர்த்து போராடுபவர்கள் தான் கதாநாயகர்களாக போற்றப்படுவார்கள்.

    ஆனால், கதாநாயகர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் புகை வில்லனுக்கு புகழ்பாடுபவர்களாக நடந்து கொண்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. திரைப்படத்தில் வரும் காட்சிகளால் இளைஞர்கள் புகைக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதால் தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பின்னாளில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக உயர்ந்த எம்.ஜி.ஆர். எந்தப் படத்திலும் மது குடிப்பது போன்றோ, சிகரெட் புகைப்பது போன்றோ நடிக்கவில்லை.

    எனவே, பொதுநலன் கருதி தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்த வேண்டுகிறேன். முடிந்தால், இதை நடிகர் சங்கத்தின் அடிப்படை விதியாகவே கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஆராயும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தின் நகல்கள் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன் வண்ணன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  #Nasar #Ramadoss
    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #SivajiGanesan
    சென்னை:

    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் சங்க தலைவர் நாசர், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், விக்ரம் பிரபு, நடிகர் மனோபாலா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் நடிகர் பிரபு பேசும்போது கூறியதாவது:-

    ‘நடிகர் சங்கம் சார்பாக அப்பாவுக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்களை பார்க்கும்போது எங்களுக்கு எங்கள் தந்தை நினைவு வருகிறது. அவர்களுக்கு எங்களை பார்க்கும்போது எங்கள் தந்தை நினைவுக்கு வருகிறார்.

    நாசர் என் தந்தையை அண்ணன் என்று அழைப்பார். நியாயமாக பார்த்தால் சித்தப்பா என்று அழைக்க வேண்டும். சிவாஜி எல்லோர் வீடுகளிலும் அப்பாவாக, தாத்தாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    உங்கள் அனைவரையும் பார்க்கும்போது என் தந்தையே நேரில் வந்தது போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றிகள்’ என்று கூறினார்.


    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது ‘நேற்று இன்று என்று இல்லை எப்போதுமே சிவாஜி நம்முடன் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவர் போட்ட தடத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அவர் பயணித்த அளவுக்கு நாங்கள் பயணிக்க முடியாது. சினிமா நடிகர்கள் மட்டும் அல்ல நாடக நடிகர்கள் சார்பாகவும் சிவாஜி பிறந்த தினத்தை அரசு நிகழ்ச்சியாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிவாஜி விமர்சனத்துக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். கலைக்காகவே வாழ்ந்தவர்’

    இவ்வறு அவர் கூறினார்.  #NadigarThilagam #SivajiGanesan
    ×