என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Naslen"
- இந்தாண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
- திரைப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை கிரிஷ் ஏடி இயக்கியிருந்தார். இப்படத்தில் நஸ்லேன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கிரிஷ் ஏடி இதற்கு முன் தண்ணீர் மாதன் தினங்கள், சூப்பர் ஷரன்யா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ள Iam kathalan திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஒரு சைபர் கிரைம் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நஸ்லேன் ஒரு ஹேக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இருக்கும் ஊரின் பெரிய நிறுவனத்தை ஹேக் செய்வது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பற்றிய காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு பிறகு கிரிஷ் இயக்கத்தில் நஸ்லேன் பிரேமலு 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நஸ்லேன் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரேமலு படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.
- இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்தார்.
இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமலு. மமிதா பைஜூ, நஸ்லேன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்து இருந்தார்.
காதல் கலந்த காமெடி கதையம்சம் கொண்டிருந்த பிரேமலு திரைப்படம் மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. பிரேமலு படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.
இந்த நிலையில், பெரும் வரவேற்பை பெற்ற பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. கிரிஷ்ஏ.டி. இயக்கும் இந்த படத்தை பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் தயாரிக்கின்றனர்.
கிரிஷ் ஏ.டி. மற்றும் கிரன் ஜோசி இணைந்து எழுதி இருக்கும் பிரேமலு 2 திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தில், நஸ்லென், மமிதா பைஜூ முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவான இந்த படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.